
முன்னோட்டப் பயன்பாட்டு விதிமுறைகள்
- தமிழ்
- Bahasa Indonesia
- Bahasa Melayu - Malaysia
- Čeština – Česká republika
- Dansk - Danmark
- Deutsch – Deutschland
- English
- Español - España
- Español - México
- Farsi
- Français - France
- Hrvatski – Hrvatska
- Italiano - Italia
- Magyar – Magyarország
- Nederlands - Nederland
- Norwegian Bokmål
- Polski (Polska)
- Português - Brasil
- Português - Portugal
- Română - România
- Slovenčina - Slovensko
- Suomi – Suomi
- Svenska – Sverige
- Tagalog
- Tiếng Việt - Việt Nam
- Türkçe - Türkiye
- Ελληνικά - Ελλάδα
- Български – България
- Русский — Россия
- Српски – Србија
- Українська — Україна
- עברית
- اردو
- العربية
- मराठी
- हिंदी भारत
- বাংলা
- ગુજરાતી
- తెలుగు
- ಕನ್ನಡ
- ไทย
- 한국어 - 대한민국
- 中文 - 繁體
- 日本語 - 日本
- 简体中文
செப்டம்பர் 24, 2024-இல் அமலுக்கு வந்தது. செப்டம்பர் 24, 2024-இல் கடைசியாகத் திருத்தப்பட்டது
வரவேற்கிறோம்! இந்த முன்னோட்ட விதிமுறைகள் (“முன்னோட்ட விதிமுறைகள்”) சேவைகளின் சில புதிய அம்சங்களை (“அம்சம்”) நீங்கள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தும் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும். இந்த முன்னோட்ட விதிமுறைகள், நீங்கள் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட எங்கள் பயனர் ஒப்பந்தம் மற்றும் வணிக விதிமுறைகளுக்கு (ஒட்டுமொத்தமாக, “Reddit விதிமுறைகள்”) கூடுதலாகப் பொருந்தும், மேலும் Reddit விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளன.
1. ஏற்றுக்கொள்ளுதல்
ஏதேனும் ஒரு அம்சத்தை அணுகுவது அல்லது பயன்படுத்துவதன் மூலம், முன்னோட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
நீங்கள் மூன்றாம் தரப்பின் (உதாரணமாக, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம்) சார்பாக முன்னோட்ட விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால், நீங்கள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்றும் அந்த மூன்றாம் தரப்பினரை முன்னோட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்றும் எங்களுக்கு உறுதியளித்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், முன்னோட்ட விதிமுறைகள் முழுவதும் “நீங்கள்” என்ற சொல்லின் எந்தவொரு பயன்பாடும் அந்த மூன்றாம் தரப்பையே குறிக்கும்.
முன்னோட்ட விதிமுறைகள் மற்றும் எந்தவொரு அம்சமும், (பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) முன்னறிவிப்போ Reddit-க்கு பொறுப்போ இன்றி, எங்கள் முழுமையான விருப்பத்தின்பேரில், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் புரிந்துகொள்கிறீர்கள். கிரியேட்டர் விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என மதிப்பாய்வு செய்யவும். அவ்வாறு செய்வது உங்கள் பொறுப்பாகும்.
முன்னோட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், எந்தவொரு அம்சத்தையும் உங்களால் அணுகவோ பயன்படுத்தவோ முடியாது.
2. தகுதிநிலை
பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், நீங்கள் எந்தவொரு அம்சத்தையும் அணுகவோ பயன்படுத்தவோ தகுதிபெற மாட்டீர்கள்:
-
நீங்கள் 18 வயதுக்குக் குறைவானவர் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களின்படி சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வயதுக்குக் குறைவானவர்;
-
பொருளாதார அல்லது வர்த்தகத் தடைகள், வணிகத் தடைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் பரிவர்த்தனைகள் தடைசெய்யப்பட்ட ஒரு நபராகவோ தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட தரப்பினரின் ஏதேனும் பட்டியலில் வேறுவகையில் குறிப்பிடப்பட்டவராகவோ நீங்கள் இருக்கிறீர்கள் அல்லது மேற்கூறியவற்றிற்கு உட்பட்ட ஒரு நாட்டில் வசிக்கிறீர்கள் (அல்லது அந்நாட்டின் குடிமகனாக இருக்கிறீர்கள்);
-
உங்கள் கணக்கு (உங்களால் கட்டுப்படுத்தப்படும் வேறு எந்தவொரு மாற்றுக் கணக்கும் உட்பட) இடைநிறுத்தப்பட்டாலோ, முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலோ, Reddit விதிமுறைகளை மீறினாலோ, நல்ல நிலையில் இல்லாவிட்டாலோ; அல்லது
-
பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, எந்தவொரு அம்சத்தையும் அணுகுவதிலிருந்தோ பயன்படுத்துவதிலிருந்தோ நீங்கள் பிற வழிகளில் தடைசெய்யப்பட்டிருந்தால்.
எந்தவொரு அம்சத்தையும் அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலம், அவ்வாறு செய்வதற்கு உங்களுக்குத் தகுதியுள்ளது என்றும், முன்னோட்ட விதிமுறைகள், Reddit விதிமுறைகள் மற்றும் அந்த அம்சத்தை நீங்கள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நீங்கள் இணங்க முடியும் என்றும் Reddit-க்கு உறுதியளித்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
(பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும் , எங்கள் முழுமையான விருப்பத்தின்பேரில், எந்தவொரு முன்னறிவிப்போ Reddit-க்கு எவ்விதப் பொறுப்போ இன்றி, எந்தவொரு அம்சத்திற்கான அணுகலையும் எப்போது வேண்டுமானாலும் தடுக்க, இடைநிறுத்த, கட்டுப்படுத்த அல்லது முடிவுக்குக் கொண்டுவர Reddit-க்கு உரிமை உண்டு. எந்தவொரு அம்சத்திற்கான அணுகலையும் தடுக்க, இடைநிறுத்த, கட்டுப்படுத்த அல்லது ரத்துசெய்ய Reddit முடிவு செய்தால், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு, அந்த அம்சத்தின் மீதான உங்களுக்கான அனைத்து உரிமைகளையும் நீங்கள் இழப்பீர்கள். அத்துடன், அந்த அம்சத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான எந்தவொரு கிளைமையும் இழப்பீர்கள்.
3. Reddit வால்ட்
3.1 மேலோட்டம்
Reddit வால்ட் என்பது சேவைகளில் (“வால்ட்”) உட்பொதிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வாலட் ஆகும். இது முன்னோட்ட விதிமுறைகள் மற்றும் Reddit விதிமுறைகளுக்கு இணங்க, உங்கள் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) சேவைகள் மூலம் சேமிக்கவும், நிர்வகிக்கவும், சுயமாகப் பாதுகாக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
3.2 உங்கள் வால்ட்டை உருவாக்குதல்
சேவைகள் மூலம் ஒரு வால்ட்டை உருவாக்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன:
-
சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் சில சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை கிளைம் செய்தாலோ பர்ச்சேஸ் செய்தாலோ, அந்தச் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களைச் சேமிப்பதற்காக Reddit உங்கள் கணக்கிற்குத் தானாகவே ஒரு வால்ட்டை உருவாக்கும்; அல்லது
-
சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு வால்ட்டை உருவாக்கலாம்.
உங்கள் வால்ட் உருவாக்கப்பட்டதும், உங்களுக்குப் பொது முகவரி ஒன்றும் தனிப்பட்ட கீ ஒன்றும் வழங்கப்படும். பொது முகவரி என்பது, Ethereum-இணக்கமான பிளாக்செயின்களில் உள்ள உங்களது முகவரியாகும். இதில் உங்கள் வால்ட்டில் உள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களின் மீதான உங்கள் உரிமையாளர் உரிமை மற்றும் உரிமைகள் குறித்த பதிவு சேமிக்கப்படும்.
உங்கள் வால்ட்டில் உள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்குமான ஒரே வழி தனிப்பட்ட கீ மட்டுமே. Reddit உங்கள் தனிப்பட்ட கீயைத் தானாகப் பெறுவதோ சேமிப்பதோ இல்லை. தனிப்பட்ட கீ உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படுகிறது. அதன் பாதுகாப்பிற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்.
உங்கள் வால்ட் உருவாக்கப்படும்போது, உங்கள் வால்ட்டின் தனிப்பட்ட கீக்கான 12 வார்த்தைகள் கொண்ட மீட்புச் சொற்றொடரும் தானாகவே உருவாக்கப்படுகிறது (உங்கள் “மீட்புச் சொற்றொடர்”). உங்கள் மீட்புச் சொற்றொடரைப் பயன்படுத்தி, உங்கள் வால்ட்டில் உள்நுழைந்து அதை அணுகலாம், வால்ட் அல்லது MetaMask போன்ற பிற வாலெட்டுகளில் உங்கள் தனிப்பட்ட கீயை மீண்டும் உருவாக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட கீ மற்றும் மீட்பு சொற்றொடரை நீங்கள் தொலைத்துவிட்டு, உங்கள் வால்ட்டைப் பாதுகாக்கத் தவறினால், உங்கள் வால்ட்டில் உள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக அணுக முடியாததாகிவிடும்.
3.3 உங்கள் வால்ட்டைப் பாதுகாத்தல்
உங்கள் வால்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அதற்கான உங்கள் அணுகலைப் பாதுகாக்க வேண்டும். பின்வரும் வழிகளில் உங்கள் வால்ட் அணுகலைப் பாதுகாக்கலாம்:
-
சேவைகள் மூலமாக உங்கள் கிளவுடு சேமிப்பக வழங்குநரிடம் உங்களது மீட்புச் சொற்றொடரின் பேக்-அப்பை உருவாக்குதல் (உங்கள் “கிளவுடு பேக்-அப்”);
-
சேவைகள் மூலம் உங்கள் வால்ட்டிற்கு ஒரு புதிய மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டை உருவாக்குதல் (உங்கள் “வால்ட் பாஸ்வேர்டு”); அல்லது
-
உங்கள் தனிப்பட்ட கீயையும் மீட்புச் சொற்றொடரையும் நேரடியாகச் சேமித்து, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
உங்கள் வால்ட்டிற்கான அணுகலைப் பாதுகாப்பது முற்றிலும் உங்கள் பொறுப்பாகும்; Reddit அதன் அணுகலைத் தக்கவைத்துக்கொள்வதில்லை. உங்கள் வால்ட்டின் தனிப்பட்ட கீ, மீட்புச் சொற்றொடர், கிளவுடு பேக்-அப், வால்ட் பாஸ்வேர்டு (இவை ஒட்டுமொத்தமாக, உங்கள் “வால்ட் அணுகல் தகவல்” என்று குறிப்பிடப்படும்) ஆகியவற்றை நீங்கள் தொலைத்துவிட்டாலோ மறந்துவிட்டாலோ, உங்கள் வால்ட்டை (அதிலுள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் உட்பட) மீட்டெடுக்க Reddit உங்களுக்கு உதவ முடியாது.
உங்கள் வால்ட்டுக்கான அணுகல் தகவலை வேறு யாருக்கும் (Reddit உட்பட) ஒருபோதும் வழங்காமல் இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் வால்ட் மற்றும் வால்ட்டுக்கான அணுகல் தகவலைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் உங்களையே சாரும். உங்கள் வால்ட் மற்றும் வால்ட்டுக்கான அணுகல் தகவலை மீட்டெடுப்பதற்கோ, ரீசெட் செய்வதற்கோ, மீட்பதற்கோ Reddit உங்களுக்கு உதவ முடியாது.
உங்கள் வால்ட் அணுகல் தகவலையோ நீங்கள் கட்டுப்படுத்தும் வேறு எந்த பிளாக்செயின் கணக்கின் தனிப்பட்ட கீ அல்லது மீட்பு சொற்றொடரையோ எங்களுக்கு ஒருபோதும் வழங்காதீர்கள். Reddit ஊழியர் யாரும் உங்களிடம் உங்கள் வால்ட் அணுகல் தகவலை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.
உங்கள் வால்ட் மற்றும் வால்ட்டுக்கான அணுகல் தகவலைப் பாதுகாப்பது குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
3.4 வால்ட்டுக்கான அணுகலை இழத்தல்
உங்கள் வால்ட்டையோ அதிலுள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களையோ மீட்பதற்கு, உங்கள் வால்ட் அல்லது வால்ட்டுக்கான அணுகல் தகவலுக்கான அணுகல் Reddit-க்கு இல்லை. உங்கள் வால்ட் உங்கள் மொபைல் சாதனங்கள் எதிலும் சேமிக்கப்படவில்லை என்றும், அதன் அணுகல் தகவல் எதையும் உங்களால் அணுக முடியவில்லை என்றும் நீங்கள் முற்றிலும் உறுதியாகக் கூறினால், உங்கள் வால்ட்டைத் திறக்க எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் ஒரு புதிய வால்ட்டை உருவாக்க வேண்டியிருக்கும்.
செயலில் உள்ள ஒரேயொரு வால்ட்டை மட்டுமே உங்கள் கணக்குடன் இணைக்க முடியும். உங்கள் கணக்கில் ஏற்கெனவே ஒரு வால்ட் இருக்கும்போது இரண்டாவது வால்ட்டை உருவாக்கினால், அந்த இரண்டாவது வால்ட் அந்தக் கணக்குடன் தொடர்புடைய வால்ட்டாக மாறிவிடும். அத்தகைய சூழ்நிலையில், முதலில் இருந்த உங்கள் வால்ட்டின் அணுகல் தகவலை நீங்கள் சேமித்து வைக்கவில்லை என்றால், அந்த வால்ட்டையும் அதில் உள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களையும் மீட்க முடியாமல் போகலாம்.
உங்கள் வால்ட்டுக்கான அணுகல் தகவல் மூலம் நீங்கள் உங்கள் வால்ட்டைக் கட்டுப்படுத்தினாலும், Reddit எங்கள் சேவைகளைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் வால்ட்டை உங்களிடமிருந்து எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், சேவைகள் வழியாக உங்கள் வால்ட்டுடனும் (மற்றும் அதில் சேமிக்கப்பட்டுள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் எதனுடனும்) நீங்கள் தொடர்புகொள்வதற்கான உங்கள் திறனை நாங்கள் கட்டுப்படுத்தக்கூடும். உதாரணமாக, உங்கள் கணக்கு இடைநிறுத்தப்பட்டாலோ தடைசெய்யப்பட்டாலோ, Reddit-இன் விருப்பப்படி, அந்த இடைநிறுத்தம் முடியும் வரை அல்லது காலவரையின்றி, சேவைகள் வழியாக உங்கள் வால்ட்டையும் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களையும் உங்களால் அணுக முடியாமல் போகலாம்.
3.5 தனியுரிமை தொடர்பான பரிசீலனைகள்
Ethereum பிளாக்செயின் போன்ற பொது பிளாக்செயின்கள் பொதுவானவை மற்றும் யாராலும் அணுகக்கூடியவை என்பதை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் வால்ட் அல்லது சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை மூன்றாம் தரப்புத் தளங்களுடன் இணைக்கும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் அந்தத் தளங்கள் மற்றும் பொது பிளாக்செயின்களில் உங்கள் செயல்பாடுகளைக் கொண்டு மூன்றாம் தரப்பினர் உங்களை அடையாளம் காணக்கூடும். Reddit அதன் சேவைகளில் பரிவர்த்தனை வரலாற்றைக் காட்டாவிட்டாலும், பொது பிளாக்செயின்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளும் (சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களின் பர்ச்சேஸ், பரிமாற்றங்கள் மற்றும் விற்பனைகள் உட்பட) பொதுவானவை மற்றும் யார் வேண்டுமானாலும் அணுகக்கூடியவை என்பதை நினைவில்கொள்ளுங்கள். பிளாக்செயினில் தனியுரிமை பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
4. சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள்
4.1 மேலோட்டம்
முன்னோட்ட விதிமுறைகள் மற்றும் Reddit விதிமுறைகளுக்கு இணங்க, சேவைகள் மூலமாக ஒரு பொது பிளாக்செயினில் மறைகுறியாக்க முறையில் சரிபார்க்கக்கூடிய குறிப்பிட்ட டிஜிட்டல் பொருட்களை (ஒட்டுமொத்தமாக, “ சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் ”) நீங்கள் சம்பாதிக்கவோ, கிளைம் செய்யவோ, வாங்கவோ, விற்கவோ அல்லது வழங்கவோ முடியும்.
4.2 Reddit கலெக்டிபிள் அவதார்கள்
Reddit கலெக்டிபிள் அவதார்கள் என்பவை வரம்பிற்குட்பட்ட பதிப்பு அவதார்கள் மற்றும் ஒரு வகையான சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருளாகும். இவற்றை நீங்கள்: (a) Reddit கிரியேட்டர் விதிமுறைகளின் கீழ் விற்கலாம் அல்லது (b) முன்னோட்ட விதிமுறைகள் மற்றும் Reddit விதிமுறைகளின் கீழ் சேவைகள் மூலம் கிளைம் செய்யலாம் அல்லது வாங்கலாம் (இவை ஒட்டுமொத்த்மாக, “கலெக்டிபிள் அவதார்கள்” எனக் குறிப்பிடப்படும்). முன்னோட்ட விதிமுறைகளிலும், நீங்கள் கலெக்டிபிள் அவதாரைக் கிளைம் செய்யும்போது அல்லது வாங்கும்போது உங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் தரப்பு உரிமையாளர்கள் வழங்கும் விதிமுறைகள் உள்ளிட்ட பிற விதிமுறைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, கலெக்டிபிள் அவதார்கள் அவற்றின் உரிமையாளர்களுக்குச் சேவைகளில் (மற்றும் சேவைகளுக்கு வெளியேயும்) தனித்துவமான பலன்களை வழங்குகின்றன.
ஒவ்வொரு கலெக்டிபிள் அவதாரும் அதற்கென பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான அவதார் கலையைக் கொண்டுள்ளது. அது ஒரு பிரத்தியேக கேட்வே அல்லது மாற்றுச் சேவையின் மூலம் இண்டர்பிளானட்டரி ஃபைல் சிஸ்டத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு கலெக்டிபிள் அவதாரத்தைப் பெறும்போது, அதன் உரிமையாளராகிவிடுகிறீர்கள். அதாவது, உங்கள் கலெக்டிபிள் அவதாரைக் கட்டுப்படுத்தவும், பயன்படுத்தவும், கைமாற்றவும், விற்கவும், பிற வழிகளில் கையாளவும் உங்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும், இதன் அர்த்தம் அவதார் கலையின் அறிவுசார் சொத்துரிமைகள் உங்களுக்குச் சொந்தமானவை என்பதல்ல. அவதார் கலைக்கான உரிமம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அது விற்கப்படவில்லை. முன்னோட்ட விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத அவதார் கலை தொடர்பான அனைத்து உரிமைகளையும் Reddit மற்றும் எங்கள் உரிமதாரர்கள் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
நீங்கள் ஒரு கலெக்டிபிள் அவதாரைச் சொந்தமாகக் கொண்டிருந்தால், முன்னோட்ட விதிமுறைகளுக்கு நீங்கள் தொடர்ந்து இணங்குவதற்கு உட்பட்டு, உங்கள் கலெக்டிபிள் அவதாருடன் தொடர்புடைய அவதார் கலைப்படைப்பின் முழுப் பகுதியையோ ஒரு பகுதியையோ பயன்படுத்தவும், நகலெடுக்கவும், காட்சிப்படுத்தவும், அந்த அவதார் கலைப்படைப்பை Reddit மற்றும் அதன் உரிமதாரர்களால் சேவைகள் மூலம் கிடைக்கச் செய்யப்படும் பிற அவதார் கலைப்படைப்புகளுடன் கலக்க மற்றும் பொருத்தவும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உங்களது சொந்த, தனிப்பட்ட, வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்காக (“உரிமம் பெற்ற உரிமைகள்”), Reddit உங்களுக்கு உலகளாவிய, நிரந்தரமான, பிரத்தியேகமற்ற, துணை உரிமம் வழங்கக்கூடிய உரிமத்தை வழங்குகிறது. உரிமம் பெற்ற உரிமைகளை வழங்கும்போது, Reddit தனக்காகவோ எங்கள் உரிமம் வழங்குபவர்களின் சார்பாக உரிமதாரராகவோ முகவராகவோ செயல்படலாம்.
சேவைகளில் உள்ள கூடுதல் அம்சங்களை அன்லாக் செய்யவும் கலெக்டிபிள் அவதார்கள் உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் கலெக்டிபிள் அவதாருடன் தொடர்புடைய அவதார் கலையை, சேவைகளில் உங்கள் அவதாராகக் காட்டினால், உங்கள் அவதார் சிறப்பு விஷுவல் எஃபெக்ட்ஸைக் கொண்டிருக்கும். மேலும், அது உங்கள் கலெக்டிபிள் அவதாரை உள்ளடக்கிய அனிமேட் செய்யப்பட்ட பதில்களை அளிக்க உங்களை அனுமதிக்கக்கூடும். மேலும், கலெக்டிபிள் அவதார்கள் மூலம், Reddit-இன் அவதார் உருவாக்கும் கருவியைப் பயன்படுத்தி, அவதார் கலையைப் பல கூறுகளாகப் பிரித்து, அந்தக் கூறுகளில் சில அல்லது அனைத்தையும் கொண்டு உங்கள் அவதாரை உருவாக்க முடியும். இந்தக் கூடுதல் அம்சங்கள், உங்கள் கலெக்டிபிள் அவதார் உங்கள் வால்ட்டில் இருந்தால் மட்டுமே பொருந்தும். உங்கள் கலெக்டிபிள் அவதாரை (அது உங்களிடம் இருந்தாலும் கூட) உங்கள் அவதாராக அமைக்கவில்லை என்றால், சிறப்பு விஷுவல் எஃபெக்ட்ஸ் பயன்படுத்தப்படாது, மேலும் உங்களால் கூடுதல் அம்சங்களையும் பயன்படுத்த முடியாமல் போகலாம். உங்கள் கலெக்டிபிள் அவதாரை நீங்கள் விற்றாலோ மாற்றினாலோ அல்லது வேறுவிதமாக அப்புறப்படுத்தினாலோ, இந்த கூடுதல் அம்சங்களுக்கான அணுகலை நீங்கள் அதன் பிறகு பெற முடியாது.
முன்னோட்ட விதிமுறைகள் மற்றும் Reddit விதிமுறைகளுக்கு இணங்க, உங்கள் கலெக்டிபிள் அவதாரை அப்புறப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் தொடர்பாக மட்டுமே, உங்கள் உரிமம் பெற்ற உரிமைகளை மாற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட உரிமையும் உங்களுக்கு உண்டு. முன்னோட்ட விதிமுறைகள் அல்லது Reddit விதிமுறைகளுக்கு இணங்க, உங்கள் உரிமம் பெற்ற உரிமைகள் நிறுத்தப்பட்டாலோ நீங்கள் அவற்றை மீறினாலோ, இந்த பரிமாற்ற உரிமையை நீங்கள் இழப்பீர்கள். உங்களிடமிருந்து கலெக்டிபிள் அவதாரைப் பெறும் எந்தவொரு பெறுநரும், முன்னோட்ட விதிமுறைகளையும் Reddit விதிமுறைகளையும் ஏற்க வேண்டும். உங்கள் கலெக்டிபிள் அவதாரின் எந்தவொரு விற்பனை அல்லது விற்பனை முயற்சி தொடர்பாக, அதனுடன் தொடர்புடைய அவதார் கலைப்படைப்பை நீங்கள் மூன்றாம் தரப்புத் தளங்கள் அல்லது சந்தைகளில் காட்சிப்படுத்தலாம். ஆனால், அந்தத் தளங்களும் சந்தைகளும், கலெக்டிபிள் அவதாரின் மீதான உங்கள் உரிமையை மறைகுறியாக்க முறையில் சரிபார்த்து, கீழே உள்ள ராயல்டி விதிமுறைகளை மதிக்க வேண்டும் அல்லது அதை மதிப்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும்.கலைப
நீங்கள் Reddit மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் கிரியேட்டர்களிடமிருந்து சேவைகள் மூலமாகக் கலெக்டிபிள் அவதார் ஒன்றை வாங்கும் பட்சத்தில், அதன் பட்டியல் விலையை மட்டுமே செலுத்துவீர்கள். Reddit உங்களிடமிருந்து எந்தக் கட்டணத்தையும் (கிரியேட்டர் அல்லது ராயல்டி கட்டணம் உட்பட) வசூலிக்காது. அதேபோல், நீங்கள் Reddit-இடமிருந்து கலெக்டிபிள் அவதாரைக் கிளைம் செய்தால், Reddit உங்களுக்கு எந்தக் கட்டணத்தையும் விதிக்காது. இருப்பினும், நீங்கள் பின்னர் உங்கள் கலெக்டிபிள் அவதாரை விற்பனை செய்தால், அந்த அடுத்தடுத்த விற்பனைப் பரிவர்த்தனையில், உங்களிடமிருந்து அதை வாங்கும் தரப்பினர், பொருந்தக்கூடிய கலெக்டிபிள் அவதாருக்கான விவரப் பக்கத்தில் மாற்று ராயல்டி கட்டணச் சதவீதம் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, Reddit-க்கும், பொருந்தும் பட்சத்தில் கிரியேட்டர்களுக்கும் எங்கள் உரிமதாரர்களுக்கும் விற்பனை விலையில் 5%-க்குச் சமமான ராயல்டி கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத வகையில் உங்கள் உரிமம் பெற்ற உரிமைகளை மாற்ற முயற்சிப்பது செல்லாததாகும். மேலும், அது முன்னோட்ட விதிமுறைகள் மற்றும் Reddit விதிமுறைகளின் ஒரு முக்கிய மீறலாகவும் அமையும். உங்கள் கலெக்டிபிள் அவதாரை மூன்றாம் தரப்பினருக்கு நீங்கள் மாற்றும்போது அல்லது விற்கும்போது, அந்த அவதார் கலைப் படைப்பிற்கான உங்கள் உரிமம் முடிவுக்கு வரும். மேலும், உங்கள் வசமோ கட்டுப்பாட்டிலோ உள்ள அந்த அவதார் கலைப்படைப்பின் எந்தவொரு டிஜிட்டல் அல்லது நேரடி நகல்களையும் நீங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.
சில கலெக்டிபிள் அவதார்கள், மூன்றாம் தரப்பினர் வழங்கும் சில பலன்களை (“மூன்றாம் தரப்புப் பலன்”) தொடக்கத்தில் பர்ச்சேஸ் செய்பவர் பெறும் உரிமையை அளிக்கலாம். உங்கள் கலெக்டிபிள் அவதாருக்குத் தனித்துவமான மூன்றாம் தரப்புப் பலனைப் பெறுவதற்கோ மீட்டெடுப்பதற்கோ நீங்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஏதேனும் மூன்றாம் தரப்புப் பலனைப் பயன்படுத்துவது அல்லது பெறுவது, தனிப்பட்ட சட்ட விதிமுறைககளுக்கும் தனியுரிமைக் கொள்கைகளுக்கும் உட்பட்டதாக இருக்கலாம். மூன்றாம் தரப்பு பலன்களை வழங்கும் நிறுவனங்களுடனான உங்களது ஒப்பந்தங்களில் Reddit ஒரு தரப்பாகச் செயல்படாது. அந்த ஒப்பந்தங்களுக்குட்பட்டு நடக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பாவார்கள். மூன்றாம் தரப்புப் பலன்களை வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றின் சட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். மூன்றாம் தரப்புப் பலன்களை வழங்கும் நிறுவனங்கள் மீது Reddit-க்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றாலும், நீங்கள் மூன்றாம் தரப்புப் பலன்களை எளிதாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் சேவைகளின் அம்சங்களை Reddit கட்டுப்படுத்துகிறது. இந்த அம்சங்களைத் தனது விருப்பப்படி கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், மாற்றியமைக்கவும், அகற்றவும் Reddit-க்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
4.3 சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருள் பரிமாற்றங்கள்
முன்னோட்ட விதிமுறைகளின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, உங்களது சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை மற்றொரு வால்ட்டிற்கோ Ethereum-இணக்கமான பிளாக்செயின்களை ஆதரிக்கும் மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் ஏதேனும் டிஜிட்டல் வாலெட்டிற்கோ (“மூன்றாம் தரப்பு வாலெட்”) மாற்றுவதற்கு நீங்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு மூன்றாம் தரப்பு வாலெட்டும் தனிப்பட்ட சட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கலாம். மூன்றாம் தரப்பு வாலெட்டுகளை வழங்கும் எந்தவொரு வழங்குநர்களுடனான உங்கள் ஒப்பந்தங்களிலும் Reddit ஒரு தரப்பாகச் செயல்படாது. மேலும், அவர்களின் மூன்றாம் தரப்பு வாலெட்டை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளுக்கும் இணங்குவதற்கு அந்த வழங்குநர்களே பொறுப்பாவார்கள். எந்தவொரு மூன்றாம் தரப்பு வாலெட் வழங்குநரும் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவர்களின் சட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும்.
பொது பிளாக்செயின்கள் அல்லது உங்கள் வால்ட் மீது எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மேலும், முன்னோட்ட விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களின் பரிமாற்றமோ உங்கள் வால்ட் வழியாக நீங்கள் சமர்ப்பிக்கும் பிற பரிவர்த்தனை விவரங்களோ நிறைவுசெய்யப்படும் என்பதை எங்களால் உறுதிசெய்ய முடியாது. உங்கள் வால்ட் வழியாகப் பொதுப் பிளாக்செயினில் பரிமாற்றங்கள் அல்லது பிற பரிவர்த்தனை விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், உங்கள் பரிமாற்றங்கள் அல்லது பிற பரிவர்த்தனை விவரங்களை ரத்துசெய்யவோ, திரும்பப் பெறவோ வேறுவிதமாக மாற்றியமைக்கவோ எங்களால் உங்களுக்கு உதவ முடியாது. உங்கள் பரிமாற்றத் தகவல்களையும் பிற பரிவர்த்தனை விவரங்களையும் சமர்ப்பிக்கும் முன், அவற்றைக் கவனமாகச் சரிபார்க்குமாறு உங்களை வலியுறுத்துகிறோம்.
பொது பிளாக்செயின்கள் அல்லது உங்கள் வால்ட் மீது Reddit-க்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றாலும், சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை நிர்வகிப்பதையும் பரிமாற்றம் செய்வதையும் உங்களுக்கு எளிதாக்கும் வால்ட் தொடர்பான சேவைகளின் அம்சங்களை (“வால்ட் அம்சங்கள்”) Reddit கட்டுப்படுத்துகிறது. வால்ட் அம்சங்களை எங்கள் விருப்பப்படி கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், மாற்றியமைக்கவும், அகற்றவும் Reddit-க்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உதாரணமாக, நீங்கள் முன்னோட்ட விதிமுறைகளை மீறியுள்ளீர்கள் அல்லது மீற முயற்சிக்கிறீர்கள் என்று Reddit நியாயமாக நம்பினால், வால்ட் அம்சங்களைப் பயன்படுத்தி நீங்கள் பரிமாற்றம் செய்யக்கூடிய சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களின் எண்ணிக்கை மற்றும் அளவின் மீது Reddit வரம்புகளை விதிக்கலாம் அல்லது அதுபோன்ற வால்ட் அம்சங்களுக்கான உங்கள் அணுகலைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தலாம்.
வால்ட் அம்சங்களைப் பயன்படுத்தி சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களைப் பரிமாற்றம் செய்வதற்கு, பிளாக்செயின் நெட்வொர்க் கட்டணங்களைச் செலுத்தும்படியோ பிற கட்டணச் சேவைகளை வாங்கும்படியோ நீங்கள் கேட்கப்படலாம். பிளாக்செயின் நெட்வொர்க் கட்டணங்களை Reddit கட்டுப்படுத்துவதில்லை. பிளாக்செயின் நெட்வொர்க் கட்டணங்களை நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்துவதை எளிதாக்குவதற்காக, Reddit தனது வால்ட் அம்சங்கள் மூலம் இலவசச் சேவைகளையோ கட்டணச் சேவைகளையோ வழங்கக்கூடும். இருப்பினும், சேவைகள் மூலம் நீங்கள் செலுத்தும் பிளாக்செயின் நெட்வொர்க் கட்டணங்கள் அல்லது பிற கட்டணச் சேவைகளுக்கான எந்தவொரு கட்டணமும் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களால் செயலாக்கப்படும். அவர்களால் வழங்கப்படும் சேவைகளின் உங்கள் பயன்பாடு தனி சட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கலாம். எந்தவொரு மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநருடனான உங்கள் ஒப்பந்தங்களிலும் Reddit ஒரு தரப்பாகச் செயல்படாது. பிளாக்செயின் நெட்வொர்க் கட்டணங்களை நீங்கள் செலுத்துவது தொடர்பான அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளுக்கும் இணங்குவதற்கு அவர்களே பொறுப்பாவார்கள். அவர்கள் வழங்கும் எந்தவொரு சேவையையும் பயன்படுத்துவதற்கு முன், அவர்களின் சட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும்.
4.4 சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களில் மூன்றாம் தரப்பு உரிமைகள்
சில சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள், Reddit மற்றும் மூன்றாம் தரப்பு உரிமதாரர்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளாக இருக்கலாம், மேலும் வணிக விதிமுறைகளின் பிரிவு 4-இன் விதிமுறைகளும் நிபந்தனைகளும் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களுடன் தொடர்புடைய டிஜிட்டல் கலைப்படைப்பில் உள்ள மூன்றாம் தரப்பு உரிமைகளுக்கும் சமமாகப் பொருந்தும்.
சரிபார்க்கப்பட்ட உங்கள் டிஜிட்டல் பொருளுடன் தொடர்புடைய ஏதேனும் டிஜிட்டல் கலைப்படைப்பில் மூன்றாம் தரப்பு உரிமைகள் இருந்தால், பின்வருபவற்றைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்:
-
டிஜிட்டல் பொருள் கலைப்படப்பில் சேர்க்கப்பட்டுள்ள விதத்திலும், முன்னோட்ட விதிமுறைகளில் உள்ள உரிமம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் தவிர, வேறு எந்த வகையிலும் மூன்றாம் தரப்பு உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கு இருக்காது;
-
அந்த மூன்றாம் தரப்பு உரிமைகளைக் கொண்டிருப்பவர், இந்த முன்னோட்ட விதிமுறைகளின் உத்தேசிக்கப்பட்ட பயனாளியாவார்;
-
சரிபார்க்கப்பட்ட ஏதேனும் டிஜிட்டல் பொருளை நீங்கள் கிளைம் செய்யும்போதோ வாங்கும்போதோ, அந்த மூன்றாம் தரப்பு உரிமையாளரின் கூடுதல் விதிமுறைகள் ஏதேனும் உங்களுக்கு வழங்கப்பட்டால், அந்த விதிமுறைகளும் (முன்னோட்ட விதிமுறைகளுடன் சேர்த்து) சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருளின் உங்கள் பயன்பாட்டிற்குப் பொருந்தும் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும்.
-
மூன்றாம் தரப்பு உரிமைகளை வைத்திருப்பவர் வழங்கிய உரிமத்தின் தன்மையைப் பொறுத்து, டிஜிட்டல் கலைப்படைப்புகளைப் பயன்படுத்துவதற்கான உங்கள் திறனில் Reddit கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கலாம்; மற்றும்
-
மூன்றாம் தரப்பு உரிமைகள் காரணமாக டிஜிட்டல் கலைப்படைப்புகளைப் பயன்படுத்துவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் பொருந்தும் என Reddit உங்களுக்குத் தெரிவித்தால், நீங்கள் அந்தக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
அந்த டிஜிட்டல் கலைப்படைப்பு உரிமை மீறல் கோரிக்கைக்கு உள்ளானால் (அல்லது அவ்வாறு ஆகக்கூடும் என Reddit தீர்மானித்தால்), அந்த டிஜிட்டல் கலைப்படைப்பை மாற்றி அமைக்கவோ, அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறவோ, அந்த டிஜிட்டல் கலைப்படைப்பிற்கான உங்கள் உரிமம் பெற்ற உரிமைகளை (பொருந்தக்கூடிய வகையில், அவதார் கலைக்கான உங்கள் உரிமம் பெற்ற உரிமைகள் உட்பட) முடிவுக்குக் கொண்டுவரவோ Reddit-க்கு உரிமை உண்டு.
5. Devvit ஆப்ஸ்
5.1 மேலோட்டம்
Reddit-இன் சேவைகள் மூலமாக, அதன் டெவலப்பர் தளத்தில் (Reddit-இன்nbspடெவலப்பர் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) இயங்கும் ஆப்ஸுடன் உங்களால் தொடர்புகொள்ள முடியும் (ஒட்டுமொத்தமாக, “ Devvit ஆப்ஸ் ”). Devvit ஆப்ஸ் Reddit மூலமாகவோ மூன்றாம் தரப்பு (“டெவலப்பர்”) மூலமாகவோ உருவாக்கப்படலாம். பொதுவாக அவை சமூகங்களில் உள்ள மாடரேட்டர்களால் நிறுவப்பட்டு Devvit ஆப்ஸ் எனப் பெயரிடப்படுகின்றன.
நீங்கள் ஒரு சமூகத்தின் மாடரேட்டராக Devvit ஆப்ஸை நிறுவுகிறீர்கள் என்றால், Reddit விதிமுறைகள் (எங்கள் மாடரேட்டர் நடத்தை விதிகள் உட்பட) எந்தவொரு Devvit ஆப்ஸையும் நீங்கள் நிறுவுவதற்கும் பயன்படுத்துவதற்கும் தொடர்ந்து பொருந்தும் என்பதை நினைவில்கொள்வது அவசியம். Devvit ஆப்ஸை எவ்வாறு நிறுவிப் பயன்படுத்தத் தொடங்குவது என்பது குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
சில Devvit ஆப்ஸ், அந்த Devvit ஆப்ஸுக்குள் உள்ளடக்கத்துடன் இன்டராக்ட் செய்யவும் அதை உருவாக்கவும் உங்களை அனுமதிக்கலாம். ஒரு Devvit ஆப்ஸில் நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு தொடர்புகளும், நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கமும் எங்கள் Reddit விதிமுறைகளுக்கு (எங்கள் தனியுரிமைக் கொள்கை மற்றும் Reddit விதிகள் உட்பட) உட்பட்டே இருக்கும்.
Reddit-இன் டெவலப்பர் தளம் மற்றும் Devvit ஆப்ஸ் பற்றி நீங்கள் மேலும் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
5.2 Devvit பொருட்கள்
Devvit ஆப்ஸ் மூலம் Reddit அல்லது டெவலப்பர்களால் வழங்கப்படும் குறிப்பிட்ட டிஜிட்டல் பொருட்கள், தயாரிப்புகள் அல்லது அம்சங்களை (ஒட்டுமொத்தமாக, “Devvit பொருட்கள்”) பெறுவதற்கு நீங்கள் கோல்டைப் பயன்படுத்தலாம். Reddit, Devvit பொருட்களை வழங்கும்போது, நீங்கள் அந்த Devvit பொருட்களை நேரடியாக Reddit-இடமிருந்து பெறுகிறீர்கள். மேலும் அவை தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இங்கே Reddit-ஐத் தொடர்புகொள்வதன் மூலம் தீர்க்க வேண்டும்.
டெவலப்பர்களிடமிருந்து பெறப்படும் Devvit பொருட்கள், எங்கள் வணிக விதிமுறைகளின் கீழ் மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகளாகும். அவை Devvit பொருட்களுக்கான டெவலப்பரின் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டவை. ஒரு டெவலப்பர் Devvit பொருட்களை வழங்கும்போது, Reddit அந்த டெவலப்பரின் சார்பாகவோ அவரது முகவராகவோ செயல்படக்கூடும். நீங்கள் அந்த Devvit பொருட்களை டெவலப்பரிடமிருந்து நேரடியாகப் பெறுகிறீர்கள். Devvit பொருட்கள் தொடர்பாக உங்களுக்கும் டெவலப்பருக்கும் இடையே எழும் எந்தவொரு பிரச்சினையையும், அதைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான டெவலப்பரை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். பொருந்தக்கூடிய Devvit ஆப்ஸைத் தேடுவதன் மூலம் Devvit பொருட்களுக்கான பயன்பாட்டு விதிமுறைகளையும் டெவலப்பரின் தொடர்புத் தகவலையும் நீங்கள் இங்கே கண்டறியலாம்.
Devvit பொருட்களைப் பெறுவதற்கு நீங்கள் கோல்டைப் பயன்படுத்துவது எங்கள் வணிக விதிமுறைகளுக்கு (எங்கள் பணம் திரும்பப்பெறும் கொள்கை உட்பட) உட்பட்டது.
5.3 Devvit ஆப்ஸின் தனியுரிமை தொடர்பான பரிசீலனைகள்
Devvit ஆப்ஸ் Reddit-இன் டெவலப்பர் தளத்தில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றன, மேலும் அவை உங்கள் பொது உள்ளடக்கத்தையும் (Reddit-இன் பொது உள்ளடக்கக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி), Devvit ஆப்ஸ் உடனான உங்கள் தொடர்புகளையும் சேகரித்துச் சேமிக்கக்கூடும். சில Devvit ஆப்ஸ், தங்களின் தனியுரிமைக் கொள்கையின்படி, உங்கள் பொதுவான உள்ளடக்கத்தையும் உரையாடல்களையும் வெளிப்புற இணையதளங்களுடன் பகிரக்கூடும். மேலும், Devvit பொருட்களை வழங்கும் Devvit ஆப்ஸ், எந்தவொரு Devvit பொருட்கள் குறித்தும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கலாம், பகிரலாம் மற்றும் சேமிக்கலாம்.
பயனர் தரவைச் சேகரிக்கும்போதும், பகிரும்போதும் மற்றும் சேமிக்கும்போதும் டெவலப்பர்கள் Reddit-இன் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க வேண்டும். இருப்பினும், Devvit ஆப்ஸின் பயனர் தரவு கையாளும் நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, அவற்றுடன் தொடர்புகொள்வதற்கு முன்பு Devvit ஆப்ஸின் தனியுரிமைக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்வது அவசியம். குறிப்பிட்ட Devvit ஆப்ஸின் தனியுரிமைக் கொள்கை மற்றும் பயனர்களின் தரவுக்கான அனுமதி விவரங்களை, அது தொடர்பான Devvit ஆப்ஸை இங்கே தேடுவதன் மூலம் கண்டறியலாம். பொதுவாக Devvit செயலியின் தனியுரிமை பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே பெறலாம்.
6. Reddit திட்டங்கள்
அம்சங்கள் தொடர்பான சில திட்டங்களை நாங்கள் அவ்வப்போது கிடைக்கச் செய்யலாம். அவை, Reddit, சேவைகள், சமூகங்கள் அல்லது பிற ரெடிட்டர்களுக்கு வழங்கும் டிஜிட்டல் பொருட்கள், சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள், Devvit ஆப்ஸ், Devvit பொருட்கள், சேவைகள் அல்லது பிற பங்களிப்புகளுக்காகச் சலுகைகளைப் பெற அல்லது வேறுவிதமாக இழப்பீடு பெற, தகுதியுள்ள ரெடிட்டர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரை அனுமதிக்கின்றன (இவை ஒட்டுமொத்தமாக, “Reddit திட்டங்கள்” எனக் குறிப்பிடப்படும்). ஏதேனும் ஒரு Reddit திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, கூடுதல் விதிமுறைகள், கொள்கைகள், வழிகாட்டுதல்கள் அல்லது விதிகளை (“Reddit திட்ட விதிமுறைகள்”) ஏற்கும்படி நீங்கள் கேட்கப்படலாம். உதாரணமாக, பணம் சம்பாதிக்க உங்களை அனுமதிக்கும் எந்தவொரு Reddit திட்டத்திலும் பங்கேற்பது எங்கள் வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை , மற்றும் அந்த Reddit திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகளுக்கு உட்பட்டது. முன்னோட்ட விதிமுறைகள் அல்லது Reddit விதிமுறைகளுடன் Reddit திட்ட விதிமுறைகள் முரண்படும் பட்சத்தில், பொருந்தக்கூடிய Reddit திட்டத்தில் உங்கள் பங்கேற்பைப் பொறுத்து Reddit திட்ட விதிமுறைகளே முதன்மையாக எடுத்துக்கொள்ளப்படும்.
7. கணக்கு இடைநிறுத்தம் அல்லது நிறுத்தம்
பயனர் ஒப்பந்தம் , எங்கள் Reddit விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி, எங்கள் சேவைகளுக்கான விதிகளுக்கும், நீங்கள் பங்கேற்கும் தனிப்பட்ட சப்ரெடிட்களின் விதிகளுக்கும் இணங்க வேண்டும், அவற்றைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அது முன்னோட்ட விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டு, சேவைகளிலிருந்தோ குறிப்பிட்ட சப்ரெடிட்களிலிருந்தோ தற்காலிகமாக/நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் அல்லது நீங்கள் அம்சங்களை அணுகக்கூடிய சப்ரெடிட்கள் உட்பட உங்கள் பதிவுகள் மற்றும் கருத்துகள் அகற்றப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கட்டணச் சேவைகள், சந்தாக்கள், டிஜிட்டல் பொருட்கள், Devvit பொருட்கள், வால்ட் அல்லது சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் போன்ற அம்சங்களின் பலன்களை நீங்கள் இழக்க நேரிடலாம், இந்த இழப்பிற்கு நாங்கள் உங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்க மாட்டோம்.
8. உங்கள் ஒப்புதல்கள்
சேவைகள் மூலம் ஒரு அம்சமாக வழங்கப்படும் டிஜிட்டல் பொருள், சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருள், வால்ட் அம்சங்கள், சந்தாக்கள் அல்லது பிற Reddit Econ பொருட்கள் (ஒட்டுமொத்தமாக, “Reddit Econ அம்சங்கள்”) உள்ளிட்ட எந்தவொரு அம்சத்தையும் நீங்கள் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக, பின்வருவனவற்றை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள், உத்தரவாதம் அளிக்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்:
- உங்களது Reddit Econ பொருளுக்கான ஒப்புதல்கள் Reddit Econ அம்சங்களுக்குப் பொருந்தும் – வணிக விதிமுறைகளின் பிரிவு 6-ல் உள்ள உங்களது Reddit Econ பொருளுக்கான ஒப்புதல்கள் Reddit Econ அம்சங்களுக்கும் சமமாகப் பொருந்தும்;
- Reddit Econ அம்சங்கள் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்கானவை – சேவைகளுடன் தொடர்புடைய பொழுதுபோக்கு மற்றும் நுகர்வுப் பயன்பாட்டிற்காகவே Reddit Econ அம்சங்களை நீங்கள் பெறுகிறீர்கள்;
- Reddit Econ அம்சங்கள் முதலீடுகள் அல்ல – முதலீட்டு நோக்கங்களுக்காக நீங்கள் Reddit Econ அம்சங்களைப் பெறவில்லை, அதை மற்றவர்களுக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பாகச் சித்தரிக்க மாட்டீர்கள், அதை வைத்துள்ள நபராகப் பொருளாதாரப் பலன் அல்லது லாபம் கிடைக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் உங்களுக்கு இல்லை, மேலும் அதை மற்றவர்களுக்குப் பொருளாதாரப் பலன் அல்லது லாபம் பெறுவதற்கான வாய்ப்பாகவோ Reddit-இல் உரிமை பெறுவதற்கான வாய்ப்பாகவோ சித்தரிக்க மாட்டீர்கள். மேலும் அதனைப் பெற்றதன் மூலம் Reddit-இல் எந்தவொரு பங்கு மூலதனத்தையோ பிற உரிமையாளர் உரிமையையோ சட்டப்பூர்வ நலனையோ நீங்கள் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு Reddit Econ அம்சங்களிலும் பகுதி உரிமைகளை விற்க முயற்சிக்க மாட்டீர்கள், எந்தவொரு நபருக்கும் பிணைய நலன், பற்றுரிமை அல்லது பிற வில்லங்கத்தை வழங்கவோ பெற அனுமதிக்கவோ மாட்டீர்கள். அல்லது எங்கள் அனுமதியின்றி எந்தவொரு Reddit Econ அம்சங்களையும் பயன்படுத்துவதற்கான சந்தாக்கள், உரிமங்கள் அல்லது பிற உரிமைகளை விற்க மாட்டீர்கள்;
- பெரும்பாலான Reddit Econ அம்சங்களை உங்களால் மாற்றவோ விற்கவோ முடியாது – முன்னோட்ட விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளைத் தவிர, உங்கள் Reddit Econ அம்சங்களை (உங்கள் உரிமம் பெற்ற உரிமைகள் உட்பட) எங்கள் அனுமதியின்றி, சேவைகளுக்கு வெளியே அல்லது உங்கள் கணக்கிற்கு வெளியே விற்கவோ, வர்த்தகம் செய்யவோ, பண்டமாற்று செய்யவோ, மாற்றவோ, பரிமாற்றம் செய்யவோ, விற்பனைக்கு வழங்கவோ வேறுவிதமாகப் பயன்படுத்தவோ முடியாது;
- நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, பொது அறிவைப் பயன்படுத்துவீர்கள் – மோசடியாகப் பெறப்பட்ட, திருடப்பட்ட, அனுமதியின்றி எடுக்கப்பட்ட அல்லது வேறுவிதமாகச் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட எந்தவொரு Reddit Econ அம்சங்களையும் பெறவோ விநியோகிக்கவோ எங்கள் சேவைகளைப் பயன்படுத்தவோ பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது. எந்தவொரு சட்டவிரோத நோக்கத்திற்காகவும் (சந்தைக் கையாளுதல், பணமோசடி, மோசடி அல்லது வேறு எந்தக் குற்றமும் உட்பட), எந்த வகையான பந்தயம், சூதாட்டம் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு எதிரான Reddit-இன் கொள்கையின்படி தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனைகளுடனும் தொடர்புபடுத்திச் சேவைகளுக்கு உள்ளேயோ வெளியேயோ எந்தவொரு Reddit Econ அம்சத்தையும் பயன்படுத்தக் கூடாது; சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் தொடர்பான எந்தவொரு முக்கியமான பொது அல்லாத தகவலும் கைவசம் இருக்கும்போது, அத்தகைய பொருட்களை நேரடியாவோ மறைமுகமாகவோ பெறவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. மேலும், எந்தவொரு Reddit Econ அம்சங்களைப் பெறுவதாலோ விநியோகிப்பதாலோ எழும் வரிக் கடமைகள் உட்பட, பொருந்தக்கூடிய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்; மற்றும்
- முன்னோட்ட விதிமுறைகளை மீறுமாறு வேறு யாரையும் நீங்கள் ஊக்குவிக்க மாட்டீர்கள். – மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்லது முன்னோட்ட விதிமுறைகளில் வேறுவிதமாக அமைந்துள்ள உறுதிமொழிகள், உத்தரவாதங்கள், ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் எதையும் மீறுவதற்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் காரணமாக இருக்கவோ அதற்கு முயற்சிக்கவோ மாட்டீர்கள்.
மேற்கண்ட விதிகளைப் பின்பற்றத் தவறினால், அது முன்னோட்ட விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டு, Reddit அல்லது குறிப்பிட்ட சப்ரெடிட்களில் இருந்து தற்காலிக அல்லது நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் அல்லது Reddit Econ அம்சங்களுக்கான உங்கள் அணுகல் நீக்கப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் Reddit Econ அம்சங்களின் பலன்களை இழக்க நேரிடலாம், இந்த இழப்பிற்காக நாங்கள் உங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்க மாட்டோம்.
9. இந்த அபாயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்
எந்தவொரு Reddit Econ அம்சத்தையும் நீங்கள் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக, பின்வரும் அபாயங்களை நீங்கள் ஒப்புக்கொண்டு பொறுப்பேற்கிறீர்கள். மேலும், அவற்றால் ஏற்படும் அல்லது உருவாகும் பொறுப்புடைமையில் இருந்து Reddit-ஐப் பாதுகாப்பீர்கள்:
- Reddit Econ பொருளுக்கான அபாயங்கள் Reddit Econ அம்சங்களுக்குப் பொருந்தும் – வணிக விதிமுறைகளின் பிரிவு 7-இல் பட்டியலிடப்பட்டுள்ள Reddit Econ பொருளுக்கான அபாயங்கள் Reddit Econ அம்சங்களுக்கும் சமமாகப் பொருந்தும்;
- உங்கள் வால்ட்டைப் பாதுகாக்கத் தவறுதல் (மேலும் அறிக) – உங்கள் சாதனத்தைத் தொலைத்தாலோ உங்கள் வால்ட்டுக்கான அணுகல் தகவலை மறந்தாலோ, பிழைகள் அல்லது விடுபடல்கள் காரணமாகவோ, உங்கள் வால்ட்டிற்கான (அதிலுள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் உட்பட) அணுகலை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே, உங்கள் வால்ட்டை உருவாக்கிய உடனேயே அதைப் பாதுகாக்க ஒப்புக்கொள்கிறீர்கள் (எ.கா., ஒரு வால்ட் பாஸ்வேர்டை உருவாக்குதல், உங்கள் மீட்புச் சொற்றொடர் மற்றும் ரகசியச் கீயைச் சேமித்தல் அல்லது பிற வால்ட் அம்சங்களைப் பயன்படுத்துதல்), இல்லையெனில் அதில் நீங்கள் சேமித்து வைத்துள்ள எந்தவொரு சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களுக்கான அணுகலையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வீர்கள். மேலும், உங்கள் வால்ட்டைப் பாதுகாக்கத் தவறி, அதற்கான அணுகலை நீங்கள் இழந்தால், உங்கள் வால்ட்டுக்கான (உங்கள் வால்ட்டுக்கான அணுகல் தகவல், அதில் சேமிக்கப்பட்டுள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் உட்பட) அணுகலை மீட்டெடுக்க Reddit உங்களுக்கு உதவ முடியாது என்பதையும், உங்கள் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களை நீங்களே சுயப் பொறுப்பில் வைத்திருக்கத் தவறியதற்கு Reddit பொறுப்பாகாது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்;
- பிளாக்செயின்களில் உள்ள சிக்கல்கள் – வால்ட், வால்ட் அம்சங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் போதுமான பரிச்சயம் தேவைப்படுகிறது. மேலும்,் வால்ட் அம்சங்கள் வழியாகச் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்பு, பிளாக்செயின் தொழில்நுட்பம், வால்ட், சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களின் செயல்பாடு மற்றும் பண்புகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நாங்கள் பொது பிளாக்செயின்களை (அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பதிவுகள் உட்பட) கட்டுப்படுத்துவதில்லை. மேலும், பொது பிளாக்செயின்கள் தொடர்ந்து செயல்படும் என்பதற்கோ அவை உங்கள் வால்ட்டை (அதில் உள்ள சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் உட்பட) ஆதரிக்கும் என்பதற்கோ எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. மேலும், ஹேக்கர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் எந்தவொரு செயலிழப்புகள், முறிவுகள், மைனிங், மால்வேர், சேவை மறுப்பு அல்லது பிற தாக்குதல்களுக்கோ ஹார்டு ஃபோர்க்குகள், புதுப்பிப்புகள், மேம்படுத்தல்கள் அல்லது பொது பிளாக்செயின்களுடனான வால்ட் அல்லது சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்களின் பொருந்தாமைக்கோ நாங்கள் பொறுப்பல்ல;
- பரிமாற்றங்களில் உள்ள சிக்கல்கள் (மேலும் அறிக) – Reddit Econ அம்சங்களின் தடைசெய்யப்பட்ட பரிமாற்ற முயற்சிகள் அனைத்தும் செல்லாதவை என்றாலும், முன்னோட்ட விதிமுறைகளின் கீழ் சில Reddit Econ அம்சங்களைப் பரிமாற்றம் செய்ய உங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம்; ஆனால் உங்களால் செய்யப்படும் Reddit Econ அம்சங்களின் எந்தவொரு பரிமாற்றமும் இறுதியானது மற்றும் திருப்பித்தர இயலாதது. மேலும், நீங்கள் ஓர் அம்சத்தைப் பரிமாற்றம் செய்தவுடன், அதைத் திரும்பப் பெறுவதற்கோ அதனால் ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கோ Reddit உங்களுக்கு உதவாது, உதவவும் முடியாது. அத்துடன், உங்களால் செய்யப்படும் எந்தவொரு Reddit Econ அம்சப் பரிமாற்றம், அதைப் பெறுபவரின் அடையாளம், பரிமாற்றத்திற்கான காரணம் அல்லது அதைப் பெறுபவரின் திருப்தி ஆகியவை தொடர்பாக Reddit எந்த வாக்குறுதிகளையோ உத்தரவாதங்களையோ அளிக்காது, மேலும் அவற்றுக்கு Reddit பொறுப்பேற்காது;
- டெவலப்பர்களுடனான சிக்கல்கள் – ஒரு டெவலப்பர் Devvit பொருட்களை வழங்கும்போது, நீங்கள் அந்த Devvit பொருட்களை டெவலப்பரிடமிருந்து நேரடியாகப் பெறுகிறீர்கள். உங்களுக்கும் டெவலப்பருக்கும் இடையிலான எந்தவொரு பரிவர்த்தனைகள் (Devvit பொருட்கள் பரிவர்த்தனைகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினைகள் உட்பட) குறித்தும் Reddit எந்த வாக்குறுதிகளையோ உத்தரவாதங்களையோ வழங்குவதில்லை மற்றும் அதற்குப் பொறுப்பேற்காது. உங்கள் பரிவர்த்தனைக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்கோ, எந்தவொரு Devvit பொருட்கள், Devvit ஆப்ஸ் அல்லது டெவலப்பர் மீதான உங்கள் திருப்திக்கோ Reddit பொறுப்பாகாது (நீங்கள் Devvit ஆப்ஸுடன் தொடர்புகொள்வதும் Devvit பொருட்களின் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதும் முற்றிலும் உங்கள் சொந்தப் பொறுப்பில் மட்டுமே அமையும்);
- Reddit திட்டங்களுக்கான தகுதிநிலை – Reddit Econ பொருட்கள் மற்றும் Reddit Econ அம்சங்கள் மூலம் உருவாக்கப்படும் வருவாயைப் பகிர்ந்துகொள்ளத் தகுதிபெறும் ரெடிட்டர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு Reddit அனுமதி வழங்கலாம் என்றாலும், எந்தவொரு ரெடிட்டர் அல்லது மூன்றாம் தரப்பினரும் Reddit நிறுவனத்திடமிருந்து இழப்பீடு அல்லது நிதி உதவியைப் பெறுவார்கள் என்பதற்கு Reddit உத்தரவாதம் அளிக்கவில்லை; மேலும், Reddit திட்டங்களில் இருந்து நிதிப் பலன்களைப் பெறுவதற்குத் தேவைப்படும் Reddit Econ பொருட்கள் அல்லது Reddit Econ அம்சங்களின் எண்ணிக்கையை Reddit அதிகரிக்கலாம் அல்லது குறிப்பிட்ட Reddit திட்டங்களில் இருந்து நிதிப் பலன்களைப் பெறும் வாய்ப்பை முழுவதுமாகத் திரும்பப் பெறலாம்; மற்றும்
- வரி இணக்கம், சட்ட நடவடிக்கை மற்றும் மாறிவரும் சட்டங்கள் – Reddit-இடமிருந்து நீங்கள் Reddit Econ அம்சங்களை வாங்கிய பிறகோ கிளைம் செய்த பிறகோ, அந்த Reddit Econ அம்சங்களில் நீங்கள் மேற்கொள்ளும் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளின் விளைவாகச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் அது தொடர்பான வரி விளைவுகளுக்கு Reddit பொறுப்பேற்காது. மேலும், Reddit Econ அம்சங்கள், வால்ட், பொது பிளாக்செயின்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், அத்துடன் அவற்றின் தொடர்ச்சியான கிடைக்கும்தன்மையை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய சட்ட மாற்றங்கள் (வரிச் சட்டங்கள் உட்பட) மற்றும் எந்தவொரு சட்ட அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கும் (Reddit Econ அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக ஒழுங்குமுறை அமைப்புகளால் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் உட்பட) Reddit பொறுப்பேற்காது.
Reddit Econ அம்சங்களை நீங்கள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும், மேற்கூறிய அபாயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வது ஒரு நிபந்தனை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இந்த அபாயங்களை ஏற்க நீங்கள் சம்மதிக்கவில்லை என்றால், Reddit Econ அம்சங்களைப் பயன்படுத்த உங்களுக்கு எங்கள் அனுமதி இல்லை.
10. பொறுப்புத் துறப்புகள் மற்றும் பொறுப்புடைமை வரம்பு
சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு, அனைத்து Reddit Econ அம்சங்களும் (டிஜிட்டல் கலைப்படைப்புகள், வால்ட் மற்றும் அதன் அம்சங்களின் உங்கள் பயன்பாடு உட்பட) “உள்ளபடியே,” “கிடைக்கக்கூடிய நிலையில்,” மற்றும் “அனைத்துக் குறைபாடுகளுடன்” வழங்கப்படுகின்றன. மேலும், Reddit நிறுவனங்கள், அவை குறித்தோ சேவைகள் குறித்தோ (வால்ட், அதன் அம்சங்கள், செயல்பாடு, கிடைக்கும் தன்மை, பாதுகாப்பு உட்பட) வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்த விதமான பிரதிநிதித்துவங்களையோ உத்தரவாதங்களையோ ஒப்புதல்களையோ (ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, மீறல் இன்மை, வணிகத்தன்மை அல்லது உரிமைத் தலைப்பு உட்பட) வழங்குவதில்லை.
11. மாற்றுதல் அல்லது நிறுத்துதல்
எந்தவொரு Reddit Econ அம்சத்தையும் பயன்படுத்துவதன் மூலம், இந்த அம்சங்கள் எப்போது வேண்டுமானாலும், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும், எங்கள் முழுமையான விருப்பத்தின் பேரில், முன் அறிவிப்போ Reddit-க்குப் பொறுப்போ இன்றி ரத்துசெய்யப்படலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எந்தவொரு Reddit Econ அம்சத்தையும் (முழுமையாகவோ பகுதியாகவோ) எப்போது வேண்டுமானாலும், உங்களுக்கு அறிவித்தோ அறிவிக்காமலோ, மாற்றியமைக்க, இடைநிறுத்த அல்லது நிறுத்த எங்களுக்கு உரிமை உண்டு. Reddit Econ அம்சத்தின் எந்தவொரு எதிர்கால வெளியீடு, புதுப்பிப்பு அல்லது செயல்பாட்டுக்கான பிற சேர்த்தல்களும் அவ்வப்போது புதுப்பிக்கப்படக்கூடிய முன்னோட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். Reddit Econ அம்சங்களில் (முழுமையாகவோ பகுதியாகவோ) செய்யப்படும் எந்தவொரு மாற்றம், இடைநிறுத்தம், நிறுத்தம் ஆகியவற்றிற்கு, உங்களுக்கோ வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கோ நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். சேவைகளில் அல்லது அதன் மூலம் ஏதேனும் ஒரு Reddit Econ அம்சம் இனி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், பணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது.
12. பணம் திரும்பப்பெறுதல் கொள்கை
சேவைகள் மூலம் நீங்கள் வாங்கும் கட்டணச் சேவைகளான Reddit Econ அம்சங்களை நீங்கள் உடனடியாக அணுகிப் பயன்படுத்தலாம். இதன் விளைவாக, சட்டத்தால் அனுமதிக்கப்படும் உச்சபட்ச அளவிற்கு, அனைத்துப் பர்ச்சேஸ்களும் இறுதியானவை, பணம் திரும்பப் பெற முடியாதவை மற்றும் திருப்பியளிக்க முடியாதவை ஆகும். பகுதியளவு பயன்படுத்தப்பட்ட பில்லிங் காலங்களுக்குப் பணத்தைத் திரும்ப அளிக்கவோ வரவு வைக்கவோ எங்களுக்குக் கடமை இல்லை.
நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி, ஐக்கிய இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிப்பவராக இருந்தால், எந்தக் காரணமும் கூறாமல் 14 நாட்களுக்குள் முன்னோட்ட விதிமுறைகளிலிருந்து விலகிக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. முன்னோட்ட விதிமுறைகள் முடிவடைந்த தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். திரும்பப் பெறும் உரிமையைப் பயன்படுத்த, நீங்கள் Reddit-க்கு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் .
இருப்பினும், (a) டிஜிட்டல் பொருட்கள், சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள், அல்லது Devvit பொருட்களைப் பயன்படுத்துவதற்கான உரிமம், (b) ஒரு சந்தா ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டணச் சேவைகள் அல்லது மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகளான Reddit Econ அம்சங்களை நீங்கள் பர்ச்சேஸ் செய்யும்போது, உங்களின் திரும்பப் பெறும் உரிமை ரத்தாகிவிடும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும். டிஜிட்டல் பொருள், சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் பொருள், அல்லது Devvit பொருள் உங்கள் கணக்கு அல்லது வால்ட்டில் வரவு வைக்கப்பட்டவுடன் அல்லது சந்தா தொடங்கப்பட்டவுடன், இந்தக் கட்டணச் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை வாங்கிய உடனேயே இந்த முறையில் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் கோரிக்கை விடுத்து ஒப்புதல் அளிக்கிறீர்கள். அந்த நிலையில், ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ளும் உங்கள் உரிமை ரத்தாகிறது.
13. மற்றவை
Reddit விதிமுறைகள் (எங்கள் பயனர் ஒப்பந்தம் மற்றும் வணிக விதிமுறைகள் உட்பட) இந்த மேற்கோளின் மூலம் இந்த முன்னோட்ட விதிமுறைகளில் இணைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக்கப்பட்டுள்ளன. Reddit விதிமுறைகள் ஏதேனும் இந்த முன்னோட்ட விதிமுறைகளுடன் முரண்படும் பட்சத்தில், Reddit Econ அம்சங்களை நீங்கள் அணுகுவது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக இந்த முன்னோட்ட விதிமுறைகளே மேலோங்கும்.