டெவலப்பர் விதிமுறைகள்

டெவலப்பர் விதிமுறைகள்

செப்டம்பர் 24, 2024 முதல் நடைமுறையில் உள்ளது. மார்ச் 24, 2026 அன்று கடைசியாகத் திருத்தப்பட்டது

வரவேற்கிறோம்! டெவலப்பர்களுக்கான எங்கள் தளம் (“டெவலப்பர் தளம்” அல்லது “Devvit”), அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ்கள் (“API-கள்”), உட்பொதிப்புகளுக்கான சேவை (“Reddit Embeds”), மென்பொருள் மேம்பாட்டுக் கருவிகள் (“SDK-கள்”), பிற டெவலப்பர் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், அவற்றுடன் தொடர்புடைய மென்பொருள், தரவு மற்றும் கோடிங் ஆகியவற்றை உள்ளடக்கிய Reddit-இன் டெவலப்பர் சேவைகளை அணுகுவதிலும் பயன்படுத்துவதிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த Reddit டெவலப்பர் விதிமுறைகள் (“டெவலப்பர் விதிமுறைகள்”), Reddit-இன் ஆவணங்கள், கொள்கைகள், வழிகாட்டுதல்கள், டெவலப்பர் சேவைகளுக்கான பிற பொருட்கள் (ஒட்டுமொத்தமாக, “டெவலப்பர் ஆவணங்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன),  Reddit பயனர் ஒப்பந்தம் (“பயனர் ஒப்பந்தம்” என்று குறிப்பிடப்படுகிறது) ஆகியவை நீங்கள் டெவலப்பர் சேவைகளை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தும் என்பதோடு, அவற்றை முறைப்படுத்துகின்றன. மேலும் உங்களுக்கும் Reddit நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாகவும் இது அமைகிறது. டெவலப்பர் விதிமுறைகள் எங்கள் பயனர் ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை உள்ளடக்கியது.

டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, உங்களுடைய இணையதளங்கள், இணையப்பக்கங்கள், ஆப்ஸ், பாட்கள், சேவைகள், ஆராய்ச்சிகள், பிற சேவைகள், தளங்கள் மற்றும் கருவிகள் (இவை ஒவ்வொன்றும், உங்கள் “ஆப்ஸ்” என்று குறிப்பிடப்படுகின்றன) ஆகியவை டெவலப்பர் சேவைகளின் மூலம் எங்கள் சேவைகள், எங்கள் இறுதிப் பயனர்கள் (“பயனர்கள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்), மற்றும் பயனர்களால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன் (“பயனர் உள்ளடக்கம்” என்று குறிப்பிடப்படுகிறது) இண்டராக்ட் செய்யலாம்.

டெவலப்பர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவோ டெவலப்பர் சேவைகளை அணுகுவதன் மூலமாகவோ, நீங்கள் டெவலப்பர் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் டெவலப்பர் விதிமுறைகளை ஒப்புக்கொள்ளவில்லை என்றால், டெவலப்பர் சேவைகளை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது.

1. பதிவுசெய்தல்

1.1 தகுதிநிலை

பின்வரும் சூழல்களில் நீங்கள் டெவலப்பர் சேவைகளைப் பயன்படுத்தவோ டெவலப்பர் விதிமுறைகளை ஏற்கவோ கூடாது: (a) Reddit உடன் ஒரு கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்க உங்களுக்குச் சட்டப்பூர்வ வயது இல்லையென்றால்; (b) நீங்கள் வசிக்கும் நாடு அல்லது டெவலப்பர் சேவைகளைப் பயன்படுத்தும் நாடு உட்பட, அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் டெவலப்பர் சேவைகளை அணுகுவதற்கோ, பயன்படுத்துவதற்கோ பெறுவதற்கோ தடைசெய்யப்பட்ட நபராக இருந்தால்; அல்லது (c) உங்கள் கணக்கு (உங்களால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு மாற்றுக் கணக்கு உட்பட) இடைநிறுத்தப்பட்டிருந்தால், நிறுத்தப்பட்டிருந்தால், எங்கள் பயனர் ஒப்பந்தத்தை மீறியிருந்தால் அல்லது வேறுவிதமாக நல்ல நிலையில் இல்லை என்றால்.

1.2 பெருநிறுவனப் பயன்பாடு

உங்கள் முதலாளி அல்லது மற்றொரு நிறுவனத்தின் சார்பாக நீங்கள் டெவலப்பர் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால், பின்வருபவற்றை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்: (a) உங்கள் முதலாளி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தை டெவலப்பர் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்த உங்களுக்கு முழுமையான சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது; (b) நீங்கள் டெவலப்பர் விதிமுறைகளைப் படித்துப் புரிந்துகொண்டுள்ளீர்கள்; மற்றும் (c) நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பின் சார்பாக, டெவலப்பர் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் முதலாளியையோ சம்பந்தப்பட்ட அமைப்பையோ கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரம் உங்களிடம் இல்லையென்றால், டெவலப்பர் சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

1.3 உங்கள் தகவல்கள்

டெவலப்பர் சேவைகளை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும், உங்கள் ஆப்ஸ் பற்றிய தகவல்களையும் (எ.கா., பெயர் மற்றும் விளக்கம்), உங்களைப் பற்றிய தகவல்களையும் (எ.கா., உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி்) எங்களுக்கு வழங்குமாறு Reddit உங்களிடம் கேட்கக்கூடும். Reddit இந்தத் தகவலைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அந்த மாற்றங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், உங்கள் தகவல்களை எல்லா நேரங்களிலும் துல்லியமாகவும், முழுமையாகவும், சமீபத்தியதாகவும் வைத்திருக்க வேண்டும்.

1.4 அணுகல் தகவல்

டோக்கன்கள், சாவிகள், பாஸ்வேர்டுகள், உள்நுழைவுச் சான்றுகள் மற்றும் Reddit மூலம் அங்கீகரிக்கப்பட்டு நீங்கள் பெற்றுள்ள பிற அணுகல் கட்டுப்பாடுகள் (ஒட்டுமொத்தமாக, “அணுகல் தகவல்” என்று குறிக்கப்படுகிறது) மூலமாக மட்டுமே நீங்கள் டெவலப்பர் சேவைகளை அணுகுவீர்கள் (அல்லது அணுக முயற்சிப்பீர்கள்), பயன்படுத்துவீர்கள். மேலும், உங்கள் அணுகல் தகவலை டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் எங்கள் டெவலப்பர் ஆவணங்களுக்கு இணங்கப் பயன்படுத்த வேண்டும். Reddit-இன் அனுமதியின்றி உங்கள் அணுகல் தகவலை வேறு எந்த மூன்றாம் தரப்பினருடனும் நீங்கள் பகிரக்கூடாது. மேலும், உங்கள் அணுகல் தகவலை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

2. டெவலப்பர் சேவைகளை நீங்கள் பயன்படுத்துதல்

2.1 உங்களுக்கு நாங்கள் வழங்கும் உரிமம்

டெவலப்பர் விதிமுறைகளுக்கும் எங்கள் பயனர் ஒப்பந்தத்திற்கும் நீங்கள் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் இணங்குவதற்கு உட்பட்டு, பின்வருபவைக்கு மட்டுமேயான ஒரு பிரத்தியேகமற்ற, மாற்ற முடியாத, துணை உரிமம் வழங்க முடியாத மற்றும் திரும்பப் பெறக்கூடிய உரிமத்தை Reddit உங்களுக்கு வழங்குகிறது:

  • உங்கள் ஆப்ஸுடன் இன்டராக்ட் செய்ய, அதை உருவாக்க, வெளியிட, விநியோகிக்க மற்றும் இயக்க, நாங்கள் உங்களுக்கு வழங்கும் டெவலப்பர் சேவைகள் மற்றும் டெவலப்பர் ஆவணங்களை அணுகுதல் மற்றம் பயன்படுத்துதல்;

  • நீங்கள் பயன்படுத்தும் டெவலப்பர் சேவைகளுக்குப் பொருந்தினால், உங்கள் ஆப்ஸ் பயனர்களுக்குப் பயனர் உள்ளடக்கத்தை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) உங்கள் ஆப்ஸிலும் ஆப்ஸ் வழியாகவும் நகலெடுத்தல், காட்டுதல் மற்றும் பயனர் உள்ளடக்கத்தை உங்கள் ஆப்ஸில் காட்டும் வகையில் மட்டும் மாற்றியமைத்தல்; மற்றும்

  • எங்கள் பிராண்டு வழிகாட்டுதல்கள் , பத்திரிகை வழிகாட்டுதல்கள்ஆகியவற்றுக்கு இணங்க, உங்கள் ஆப்ஸில் உள்ள பயனர் உள்ளடக்கத்தின் மூலமாக எங்கள் சேவைகளைக் குறிப்பிடுவதற்காக மட்டுமே, Reddit வர்த்தக முத்திரைகள் மற்றும் வர்த்தகப் பெயர்களை (“Reddit வர்த்தக முத்திரைகள்”) பிரத்தியேகமாகப் பயன்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல்;

ஒவ்வொரு சூழலிலும், டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் டெவலப்பர் ஆவணங்களின் (“Reddit உரிமம்”) கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்ட அல்லது தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே.

Reddit உரிமத்தில், Reddit-இன் பார்ட்னர்களுக்கு (எங்கள் விளம்பரதாரர்கள், இணை நிறுவனங்கள் மற்றும் பிற பார்ட்னர் உரிமதாரர்கள் உட்பட) சொந்தமான பயனர் உள்ளடக்கமோ, அதன் சொந்த விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும் மூன்றாம் தரப்பு மென்பொருளோ (எ.கா., ஓபன் சோர்ஸ் மென்பொருள்) உள்ளடங்காது. Reddit உரிமத்தின் கீழ் வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகள், உரிமைப் பத்திரம், நலன்கள் ஆகியவற்றை Reddit நிறுவனமும் அதன் உரிமதாரர்களும் தக்கவைத்துக் கொள்கிறார்கள். மேலும், பொருந்தக்கூடிய எந்தவொரு மூன்றாம் தரப்பு அல்லது ஓபன் சோர்ஸ் உரிம விதிமுறைகளுக்கும் இணங்குவது உங்கள் பொறுப்பாகும்.

இந்தப் பிரிவில் உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளும் Reddit-க்குச் சொந்தமானவை. டெவலப்பர் விதிமுறைகளில் உள்ள எதுவும் உங்களுக்கு எந்த விதமான மறைமுக உரிமத்தையும் வழங்காது.

2.2 தணிக்கை உரிமை

டெவலப்பர் சேவைகள், சேவைகள், பயனர் உள்ளடக்கம், மேற்கூறியவற்றின் மூலம் பெறப்பட்ட அல்லது வேறுவிதமாக வருவிக்கப்பட்ட தரவு, தகவல், பொருட்கள் அல்லது பிற உள்ளடக்கம் (ஒட்டுமொத்தமாக, “Reddit சேவைகள் மற்றும் தரவு” என்று குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் உங்கள் பயன்பாட்டை Reddit கண்காணிக்கக்கூடும். மேலும், நீங்கள் டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் டெவலப்பர் ஆவணங்களுக்கு இணங்குகிறீர்கள் என்பதை உறுதிசெய்ய, உங்கள் ஆப்ஸ், Reddit சேவைகள் மற்றும் தரவு ஆகியவற்றுக்கான உங்கள் அணுகலையும் பயன்பாட்டையும் தணிக்கை செய்யலாம். நீங்கள் Reddit-இன் கண்காணிப்பில் தலையிடக் கூடாது, மேலும் எந்தவொரு தணிக்கை தொடர்பாகவும் Reddit உடன் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன், டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் டெவலப்பர் ஆவணங்களுக்கு நீங்களும் உங்கள் ஆப்ஸும் இணங்குவதை நிரூபிக்க, நாங்கள் கோரும் தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டும். உங்களால் Reddit சேவைகள் மற்றும் தரவுகளில் ஏதேனும் குறுக்கீடு ஏற்படுவதை Reddit கண்டறிந்தால், அந்தக் குறுக்கீட்டைத் தடுக்க, முடக்க அல்லது வேறு வழிகளில் சரிசெய்ய நாங்கள் எந்தவொரு தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

2.3 புதுப்பிப்புகள்

டெவலப்பர் சேவைகளின் எந்தவொரு பகுதியையும் எந்த நேரத்திலும் Reddit மாற்றலாம், இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம். Reddit தனது சொந்த விருப்பத்தின் பேரில், அவ்வப்போது எந்தவொரு Reddit சேவைகள் மற்றும் தரவுகளையும் புதுப்பிக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம். பயனர் உள்ளடக்கத்தை உங்கள் ஆப்ஸ் காட்டும் விதம் உட்பட, Reddit சேவைகள் மற்றும் தரவை நீங்களோ உங்கள் ஆப்ஸோ அணுகும் அல்லது தொடர்புகொள்ளும் விதத்தைப் புதுப்பிப்புகள் எதிர்மறையாகப் பாதிக்கலாம். நீங்கள் Reddit சேவைகள் மற்றும் தரவின் மிகச் சமீபத்திய பதிப்பையே செயல்படுத்திப் பயன்படுத்த வேண்டும், மேலும் Reddit சேவைகள் மற்றும் தரவின் புதுப்பித்தலின் விளைவாக உங்கள் ஆப்ஸில் தேவைப்படும் மாற்றங்களையும் செய்ய வேண்டும். Reddit சேவைகள் மற்றும் தரவுகளில் ஏதேனும் புதுப்பித்தல் செய்யப்பட்ட பிறகு, நீங்கள் தொடர்ந்து அவற்றை அணுகுவது அல்லது பயன்படுத்துவது, அந்தப் புதுப்பித்தலை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும்.

2.4 டெவலப்பர் சேவைகளுக்கான கூடுதல் விதிமுறைகள்

நாங்கள் பலவிதமான டெவலப்பர் சேவைகளை வழங்குவதால், Reddit வழங்கும் குறிப்பிட்ட டெவலப்பர் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, கூடுதல் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்ளுமாறு நீங்கள் கேட்கப்படலாம். உதாரணத்திற்கு:

டெவலப்பர் சேவைகளுக்கான அனைத்துக் கூடுதல் விதிமுறைகளும், இந்த மேற்கோளின் மூலம் டெவலப்பர் விதிமுறைகளில் இணைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக ஆக்கப்படுகின்றன. இந்த டெவலப்பர் விதிமுறைகளுடன் ஏதேனும் கூடுதல் விதிகள் முரண்படும் பட்சத்தில், நீங்கள் பயன்படுத்தும் அந்தந்த டெவலப்பர் சேவைகளைப் பொறுத்தவரை, கூடுதல் விதிகளே முதன்மையானதாகக் கருதப்படும்.

3. உங்கள் ஆப்ஸ் மற்றும் ஆப்ஸ் உள்ளடக்கம்

3.1 ஆப்ஸ் மதிப்பாய்வு

டெவலப்பர் ஆவணத்தில் உள்ள அனைத்து விவரக்குறிப்புகள் மற்றும் தேவைகளுக்கு உங்கள் ஆப்ஸ் இணங்க வேண்டும். டெவலப்பர் தளம் மூலம் உங்கள் ஆப்ஸை விநியோகிப்பதற்கு முன்பு, API ரேட் லிமிட்களை அடைந்த பிறகோ Reddit-இன் முழுமையான விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலுமோ, உங்கள் ஆப்ஸை Reddit-இன் விருப்பப்படி அதன் மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்காக (“ஆப்ஸ் மதிப்பாய்வு”) சமர்ப்பிக்குமாறு Reddit உங்களைக் கோரலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். ஆப்ஸ் மதிப்பாய்வு தொடர்பாக Reddit-இலிருந்து வரும் எந்தவொரு கோரிக்கைக்கும் ஒத்துழைக்கவும், உடனடியாகப் பதிலளிக்கவும், அது தொடர்பான தகவல்களை வழங்கவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் மதிப்பாய்வுக்காக ஓர் ஆப்ஸைச் சமர்ப்பிக்கும்போது, உங்கள் ஆப்ஸ் எங்கள் Devvit விதிகளுக்கு இணங்குகிறதா என்பதை மதிப்பிடுவதற்கு, மூன்றாம் தரப்பு LLM-கள் உட்பட, நிபுணர் மற்றும் தானியங்கு மதிப்பாய்வின் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்த Reddit-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்.

3.2 ஆப்ஸ் பயனர்கள்

உங்கள் ஆப்ஸிற்கு (அதன் உருவாக்கம், செயல்பாடு, பராமரிப்பு, ஆதரவு, விநியோகம், பயன்பாடு மற்றும் ஆப்ஸ் உள்ளடக்கம் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) உட்பட) நீங்களே முழுப் பொறுப்பு. உங்கள் ஆப்ஸைப் பயன்படுத்தும் போது, அனைத்துப் பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் எங்களின் பயனர் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு உங்கள் ஆப்ஸின் பயனர்களை (“ஆப்ஸ் பயனர்கள்”) நீங்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், எங்கள் பயனர் ஒப்பந்தத்தையோ இந்த டெவலப்பர் விதிமுறைகளையோ உங்கள் ஆப்ஸ் பயனர்கள் மீறுவதற்கு நீங்கள் அனுமதிக்கவோ, உதவி செய்யவோ வழிவகுக்கவோ கூடாது.

உங்கள் ஆப்ஸைப் பயனர்கள் பயன்படுத்துவது தொடர்பாகப் பொருந்தக்கூடிய தனித்தனியான சேவை விதிமுறைகள் அல்லது வேறு ஒப்பந்தங்களை நீங்கள் கொண்டிருந்தால், அந்தச் சேவை விதிமுறைகள் அல்லது ஒப்பந்தம்: (a) உங்களுக்கும் ஆப்ஸ் பயனருக்கும் இடையே மட்டுமேயானது, அதன்கீழ் Reddit-க்கு எந்தவொரு பொறுப்பும் கடப்பாடும் இருக்காது; மற்றும் (b) இந்த டெவலப்பர் விதிமுறைகளையோ எங்கள் பயனர் ஒப்பந்தத்தையோ மீறவோ, மாற்றியமைக்கவோ, அவற்றுக்கு முரணாகவோ இருக்கக் கூடாது, இருக்க முடியாது. உங்கள் விதிமுறைகளுக்கும் ஆப்ஸ் பயனர்களுடனான ஒப்பந்தத்திற்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் அல்லது பொருந்தாமை ஏற்பட்டால், டெவலப்பர் விதிமுறைகளும் எங்களது பயனர் ஒப்பந்தமுமே மேலோங்கி நிற்கும், கட்டுப்பாட்டு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

3.3 உள்ளடக்க அகற்றம்

 Reddit விதிகள் உள்ளிட்ட எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின்படி, பயனர் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் அல்லது கோரிக்கைகளை நீங்கள் பெறலாம்.  இங்கு கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவற்றை நீங்கள் Reddit-இன் உயரதிகாரியிடம் கொண்டு செல்வீர்கள்.

மேலும், ஏதேனும் பயனர் உள்ளடக்கம் நீக்கப்பட்டாலோ, பாதுகாக்கப்பட்ட நிலையைப் பெற்றாலோ, சேவைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டாலோ, தடுத்து வைக்கப்பட்டாலோ, மாற்றியமைக்கப்பட்டாலோ, அகற்றப்பட்டாலோ, பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையால் தடைசெய்யப்பட்டாலன்றி, Reddit-இன் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியுடன், எங்கள் சேவைகளில் உள்ள பயனர் உள்ளடக்கத்தில் தேவையான மாற்றம் ஏற்பட்ட உடனேயே அல்லது அவ்வாறு செய்ய Reddit (அல்லது ஒரு பயனர் தனது பயனர் உள்ளடக்கம் தொடர்பாக) எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்த உடனேயே, அந்தப் பயனர் உள்ளடக்கத்தையும், பொருந்தக்கூடிய வகையில், தொடர்புடைய ஆப்ஸ் உள்ளடக்கத்தையும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) நீங்கள் கூடிய விரைவில் நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டும்.

உங்கள் ஆப்ஸில், ஆப்ஸ் பயனர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட ஆப்ஸ் உள்ளடக்கம் இருந்தால், சட்டவிரோதமான அல்லது மீறலான உள்ளடக்கம் எனக் குறிப்பிடும் அறிவிப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஒரு பொருத்தமான அறிவிப்பு மற்றும் அகற்றுதல் செயல்முறை உங்களிடம் இருக்க வேண்டும். மேலும், அமெரிக்க டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டம், ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் சேவைகள் சட்டம் போன்ற பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்திற்கும் நீங்கள் இணங்க வேண்டும்.

3.4 Devvit ஆப்ஸ்

உங்கள் ஆப்ஸின் தன்மையைப் பொறுத்து, உங்கள் ஆப்ஸ் எங்கள் டெவலப்பர் தளத்தில் (ஒரு “Devvit ஆப்ஸ்”) இயங்கவும் ஹோஸ்ட் செய்யப்படவும் நீங்கள் விரும்பலாம் மற்றும் Reddit அவ்வாறு செய்யக் கோரலாம். உங்கள் Devvit ஆப்ஸ், Devvit-க்கான எங்கள் டெவலப்பர் ஆவணங்களுக்கு (எங்கள் Devvit வழிகாட்டுதல்கள் உட்பட) இணங்க வேண்டும், மேலும் நீங்கள் Reddit-க்குப் பின்வரும் உரிமங்களை ("டெவலப்பர் உரிமம் ") வழங்குகிறீர்கள்:

  • டெவலப்பர் தளம் தொடர்பாக, பயனர்களுக்கு எங்கள் சேவைகளை இயக்குதல், மேம்படுத்துதல், வழங்குதல் Reddit மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக உங்கள் Devvit ஆப்ஸை (மற்றும் நீங்கள் வழங்கும், சேவைகளில் சேர்க்கும் அல்லது உங்கள் Devvit ஆப்ஸ்/டெவலப்பர் சேவைகள் மூலம் Reddit அல்லது பயனர்களுக்குக் கிடைக்கச் செய்யும் எந்தவொரு தரவு, தகவல், மென்பொருள், கோடிங், தொழில்நுட்பம், பொருட்கள், Devvit பொருட்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) அல்லது பிற முதல்/மூன்றாம் தரப்பு உள்ளடக்கம், உங்கள் Devvit ஆப்ஸ் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட, இடுகையிடப்பட்ட அல்லது காட்டப்பட்ட எந்தவொரு உள்ளடக்கம் (ஒட்டுமொத்தமாக, “ஆப்ஸ் உள்ளடக்கம்” என்று குறிப்பிடப்படுகிறது)) அணுக, இயக்க, பொதுவில் காட்சிப்படுத்த, செயல்படுத்த, விநியோகிக்க, மீண்டும் உருவாக்க, மாற்றியமைக்க, ஹோஸ்ட் செய்ய, மொழிபெயர்க்க, சேமிக்க மற்றும் பிற வழிகளில் பயன்படுத்த Reddit-க்கு ஒரு பிரத்தியேகமற்ற, மாற்றத்தக்க, துணை உரிமம் வழங்கக்கூடிய, உரிமைத்தொகையற்ற, உலகளாவிய, திரும்பப் பெறக்கூடிய உரிமத்தை நீங்கள் வழங்குகிறீர்கள்.

  • மேலும், Reddit-க்கு வழங்கப்படும் உரிமத்தின் ஒரு பகுதியாக, Devvit ஆப்ஸைத் தயாரிக்க, விநியோகிக்க மற்றும் இயக்க, உங்கள் Devvit ஆப்ஸிலிருந்து ஆப்ஸ் உள்ளடக்கங்களை (Devvit பொருட்கள் உட்பட) பயனர்கள் பெறவும் பயன்படுத்தவும் உதவுவதற்கும், Devvit ஆப்ஸ், Reddit சேவைகள் மற்றும் தரவு, Reddit நிறுவனம் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும், விளம்பரம் செய்வதற்கும் சாதாரணச் செயல்பாட்டின் போது தேவையான அளவிற்கு உங்கள் Devvit ஆப்ஸிலிருந்து பெறப்படும் ஆப்ஸ் உள்ளடக்கங்களை (Devvit பொருட்கள் உட்பட) பயனர்களுக்குத் துணை உரிமம் வழங்க Reddit-க்கு அதிகாரம் உள்ளது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

ஆப்ஸ் மதிப்பாய்வு, Devvit-க்கான எங்கள் டெவலப்பர் ஆவணங்கள் (எங்கள் Devvit வழிகாட்டுதல்கள் உட்பட) ஆகியவற்றுடன் டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் உள்ள, ஆப்ஸிற்குப் பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் Devvit ஆப்ஸ் மற்றும் அவற்றின் புதிய பதிப்புகள் உட்பட்டவை.

உங்கள் Devvit ஆப்ஸ் வழியாக, குறிப்பிட்ட டிஜிட்டல் அவதார்கள், பொருட்கள், நாணயங்கள், பொருள்கள், தயாரிப்புகள் அல்லது அம்சங்களை (ஒட்டுமொத்தமாக, “Devvit பொருட்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன) பிற பயனர்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் Devvit ஆப்ஸில் நீங்கள் வருமானம் ஈட்ட முடியும். கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் வருமானம் ஈட்டல் விதிமுறைகளையும் வருமானம் ஈட்டல் கொள்கையையும் பார்க்கவும்.

டெவலப்பர் விதிமுறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, உங்கள் Devvit ஆப்ஸில் உள்ள ஆப்ஸ் உள்ளடக்கம் (Devvit பொருட்கள் உட்பட) தொடர்பாக Reddit-க்கான உங்கள் உரிமம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மேலும், மாடரேட்டர்களாக உள்ள பயனர்கள் ஒரு நியாயமான இடைக்காலத்திற்கு உங்கள் Devvit ஆப்ஸைத் தொடர்ந்து அணுகலாம், பயன்படுத்தலாம்.

டெவலப்பர் தளத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ரேட் லிமிட்கள் அல்லது பிற கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் (அல்லது நீங்கள் மீற முயன்றதாக Reddit நம்பினால்), உங்கள் Devvit ஆப்ஸும், டெவலப்பர் தளத்தையும் பிற Reddit சேவைகள் மற்றும் தரவுகளையும் பயன்படுத்துவதற்கான உங்கள் திறனும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது நிரந்தரமாகத் தடுக்கப்படலாம். Reddit, எந்த நேரத்திலும், தனது முழுமையான விருப்பத்தின் பேரில், உங்களுக்கு அறிவிக்காமல் உங்கள் Devvit ஆப்ஸை டெவலப்பர் தளத்திலிருந்து அகற்ற முடிவு செய்யலாம்.

4. பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகள்

4.1 வணிகப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள்

Reddit சேவைகள் மற்றும் தரவை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் கட்டணம் பெறும் உரிமை Reddit-க்கு உள்ளது. இந்தக் கட்டண விகிதங்கள் Reddit-இன் முழுமையான விருப்பத்தின் பேரில் நிர்ணயிக்கப்படும். டெவலப்பர் விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டாலோ எங்களால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலோ தவிர, நீங்கள் (உங்கள் ஆப்ஸ் வழியாக உட்பட) பின்வருபவற்றைச் செய்யவோ, செய்ய முயற்சிக்கவோ, மற்றவர்களைச் செய்ய அனுமதிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது:

  • ஒரு வணிகத்தின் மூலமாகவோ, அதன் சார்பாகவோ, வருமானம் ஈட்டப்படும் ஒரு சேவை அல்லது தயாரிப்பின் ஒரு பகுதியாகவோ, Reddit சேவைகள் மற்றும் தரவுகளில் ஏதேனும் ஒன்றை அணுகுதல் அல்லது பயன்படுத்துதல்; அல்லது

  • Reddit சேவைகள் மற்றும் தரவின் எந்தவொரு பகுதியையும், மேற்கூறியவற்றிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு தரவு உட்பட, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல், துணை உரிமம் வழங்குதல், பணமாக்குதல், அல்லது வேறு எந்த வகையிலும் எந்த விதமான வருவாயையும் பெறுதல் அல்லது ஈட்டுதல்.

Reddit சேவைகள் மற்றும் தரவுகளை வணிக நோக்கங்களுக்காகவோ, ரேட் லிமிட்களுக்கு அப்பாற்பட்ட ஆராய்ச்சிக்காகவோ, டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்படாத வேறு எந்தப் பயன்பாட்டிற்காகவோ பயன்படுத்த நீங்கள் விரும்பினால், Reddit உடன் ஒரு தனி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

கூடுதல் தகவல்களுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட வணிகப் பயன்பாட்டின் எடுத்துக்காட்டுகளுக்கும், எங்கள் டெவலப்பர் ஆவணங்களை இங்கே பார்க்கவும்.

4.2 பிற பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள்

நீங்கள் (உங்கள் ஆப்ஸ் வழியாக உட்பட) பின்வருபவற்றைச் செய்யவோ, செய்ய முயற்சிக்கவோ, மற்றவர்களைச் செய்ய அனுமதிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது:

  • சட்டவிரோதச் செயல்களை அல்லது மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறுவதை ஊக்குவிப்பதற்கோ மேம்படுத்துவதற்கோ Reddit சேவைகளையும் தரவுகளையும் பயன்படுத்துதல்;

  • பொருந்தக்கூடிய சட்டங்களால் இந்தக் கட்டுப்பாடு தடைசெய்யப்பட்டிருக்கும் அளவிற்குத் தவிர, Reddit சேவைகள் மற்றும் தரவுகளுக்குள் இருக்கும் அல்லது அதன் அடிப்படையில் அமைந்துள்ள சோர்ஸ் கோடிங், வணிக ரகசியங்கள் அல்லது தொழில்நுட்ப அறிவை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்தல், டீகாம்பைல் செய்தல், பிரித்தல், மொழிபெயர்த்தல் அல்லது பிற வழிகளில் பெறுதல்;

  • Reddit தனது முழுமையான விருப்பத்தின் பேரில் நிர்ணயிக்கக்கூடிய அல்லது டெவலப்பர் ஆவணங்களில் விவரிக்கப்படக்கூடிய, Reddit சேவைகள் மற்றும் தரவுகளின் அழைப்புகள் மற்றும் பயன்பாடு மீதான நியாயமான வரம்புகளைத் தவிர்த்தல் அல்லது மீறுதல், Reddit சேவைகள் மற்றும் தரவுகளை வழங்கும் எந்தவொரு சேவையகங்கள், நெட்வொர்க்குகள் அல்லது அமைப்புகள் உட்பட, Reddit சேவைகள் மற்றும் தரவுகளை வரம்பு மீறிய அல்லது முறைகேடான பயன்பாடு என்று Reddit நம்பும் விதத்தில் பயன்படுத்துதல் அல்லது அவற்றிற்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நியாயமற்ற முறையில் குறுக்கிடுதல்;

  • Reddit சேவைகள் மற்றும் தரவை நீங்கள் எவ்வாறு அல்லது ஏன் அணுகுகிறீர்கள், பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தவறாகக் குறிப்பிடுதல் அல்லது மறைத்தல் (ஒரே பயன்பாட்டு நிகழ்வுக்காக அல்லது கணிசமாக ஒத்த அல்லது ஒன்றுடன் ஒன்று பொருந்தும் பயன்பாட்டு நிகழ்வுகளுக்காகப் பல ஆப்ஸைப் பதிவு செய்வது உட்பட);

  • செயல்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது தடைசெய்யப் பயன்படுத்தப்படும் எந்தவொரு பொறிமுறையையும் உள்ளடக்கிய, எந்தவொரு Reddit சேவைகள் மற்றும் தரவுகளின் அம்சங்கள் அல்லது செயல்பாடுகளில் தலையிடுதல், மாற்றுதல், சீர்குலைத்தல் அல்லது முடக்குதல், அல்லது Reddit சேவைகள் மற்றும் தரவுகளின் எந்தவொரு மென்பொருள் பாதுகாப்பு அல்லது கண்காணிப்புப் பொறிமுறையையும் முறியடித்தல், தவிர்த்தல், கடந்து செல்லுதல், அகற்றுதல், செயலிழக்கச் செய்தல் அல்லது வேறுவிதமாக மீறிச் செல்லுதல்;

  • Reddit சேவைகள் மற்றும் தரவுகளை, ஏதேனும் வைரஸ்கள், தானியங்கு செயல்பாடுகள், குறைபாடுகள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், மால்வேர் அல்லது அழிவுத்தன்மை கொண்ட வேறு ஏதேனும் பொருட்களைப் புகுத்தும் நோக்கத்துடன் பயன்படுத்துதல்;

  • Reddit சேவைகள் மற்றும் தரவுகளின் அம்சங்கள் அல்லது செயல்பாடுகளிலிருந்து பெறப்பட்ட வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்குதல், நகலெடுத்தல், மறுஉருவாக்கம் செய்தல், மறுவிநியோகம் செய்தல், வாடகை/குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் அல்லது அவற்றின் அணுகலை பிறருடன் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளுதல்;

  • லார்ஜ் லாங்குவேஜ், செயற்கை நுண்ணறிவு அல்லது பிற அல்காரிதம் சார்ந்த மாடல்களுக்கோ அது தொடர்பான சேவைகளுக்கோ பயிற்சி அளிப்பதற்காக, எந்தவொரு வழியிலும் (எங்களது API-ஐ அணுகுவது, எங்கள் Reddit சேவைகள் மற்றும் தரவுகளை அட்டவணைப்படுத்துவது, தற்காலிகச் சேமிப்பு செய்முறைக்கு உட்படுத்துவது, அல்லது தரவுச் சேகரிப்பு செய்வது உட்பட) Reddit சேவைகள் மற்றும் தரவுகளை எங்களது அனுமதியின்றி அணுகுதல் அல்லது பயன்படுத்துதல்;

  • Reddit சேவைகள் மற்றும் தரவுகளை ஏதேனும் சட்டவிரோதமான, அங்கீகரிக்கப்படாத, ஏமாற்றும், நெறிமுறையற்ற, பொய்யான, தவறாக வழிநடத்தும், அல்லது முறையற்ற நோக்கத்திற்காக அணுகுதல் அல்லது பயன்படுத்துதல், அல்லது சட்டவிரோதச் செயல்பாட்டையோ மூன்றாம் தரப்பு உரிமைகளின் மீறலையோ ஊக்குவித்தல் அல்லது மேம்படுத்துதல், இதில் ஏதேனும் வழியில் அடங்குபவை: (a) டெவலப்பர் விதிமுறைகள், டெவலப்பர் ஆவணங்கள், எங்கள் பயனர் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு இணங்காதவை, (b) Reddit-இன் தொழில்நுட்பச் செயல்முறைகள் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதேனும் சமரசம் செய்தல், மீறுதல் அல்லது தவிர்த்தல், (c) பயனர்கள், Reddit, Reddit சேவைகள் மற்றும் தரவு (தொடர்புடைய சேவையகங்கள், நெட்வொர்க்குகள் அல்லது அமைப்புகள் உட்பட), அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் பாதுகாப்புப் பாதிப்பை ஏற்படுத்துதல், (d) பயனர்கள், Reddit அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் ஸ்பேம் செய்ய, ஊக்குவிக்க அல்லது துன்புறுத்த Reddit சேவைகள் மற்றும் தரவைப் பயன்படுத்துதல், அல்லது (e) சட்ட அமலாக்கம் அல்லது கண்காணிப்பு நோக்கங்களுக்காக Reddit சேவைகள் மற்றும் தரவைப் பயன்படுத்துதல்; அல்லது

  • Reddit தரவு உரிமதாரர்கள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட, எங்களின் பொது உள்ளடக்கக் கொள்கையை மீறக்கூடிய எந்தொரு நடத்தையிலும் ஈடுபடுதல்.

5. அறிவுசார் சொத்து

5.1 அறிவுசார் சொத்துரிமை

டெவலப்பர் விதிமுறைகளின் நோக்கங்களுக்காக:

  • “அறிவுசார் சொத்து” என்பது பின்வருபவை உட்பட எந்தவொரு வடிவத்திலும் உள்ள அனைத்துத் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துக்களைக் குறிக்கும்: (a) ஆடியோவிஷுவல் படைப்புகள், கூட்டுப் படைப்புகள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் (சோர்ஸ் கோடிங் மற்றும் ஆப்ஜெக்ட் கோடிங் உட்பட), தொகுப்புகள், தரவுத்தளங்கள், வழித்தோன்றல் படைப்புகள் மற்றும் இலக்கியப் படைப்புகள் உள்ளிட்ட, வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத படைப்புரிமைப் படைப்புகள், (b) கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள், மேம்பாடுகள், இயந்திரங்கள், முறைகள் மற்றும் செயல்முறைகள், (c) வர்த்தக முத்திரைகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள், மற்றும் (d) வாடிக்கையாளர் பட்டியல்கள், யோசனைகள் மற்றும் செயல்முறை அறிவு உள்ளிட்ட, பொதுவாக அறியப்படாத அல்லது முறையான வழிகளில் எளிதில் கண்டறிய முடியாத தகவல்கள்.

  • "அறிவுசார் சொத்துரிமைகள்" என்பது எந்தவொரு அதிகார வரம்பிலும் உள்ள எந்தவொரு அறிவுசார் சொத்து மற்றும் அதிலிருந்து எழும் அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து உரிமைகளையும் குறிக்கும். இதில் காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரை உரிமைகள், இரகசியத் தகவல்களுக்கான உரிமைகள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி), ஒரு நபரின் பெயர், குரல், கையொப்பம், புகைப்படம் அல்லது உருவ ஒற்றுமையுடன் தொடர்புடைய உரிமைகள் (ஆளுமை, தனியுரிமை மற்றும் விளம்பர உரிமைகள் உட்பட), தார்மீக உரிமைகள் மற்றும் டொமைன் பெயர்களுடன் தொடர்புடைய உரிமைகள் ஆகியவை அடங்கும்.

நீங்களும் Reddit நிறுவனமும் இதை ஒப்புக்கொள்கிறீர்கள்: உங்களுக்கும் Reddit நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கையின்படி, உங்கள் ஆப்ஸின் மீதான அனைத்து உரிமைகள், தலைப்பு, மற்றும் நலன்கள் உங்களுக்குச் சொந்தமானவை. அதேபோல் Reddit சேவைகள் மற்றும் தரவுகள், டெவலப்பர் ஆவணங்கள், Reddit வர்த்தக முத்திரைகள், Reddit இரகசியத் தகவல்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி), Reddit நிறுவனத்தின் பிற அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள், மேலே குறிப்பிடப்பட்ட எவற்றிலிருந்தும் பெறப்பட்ட படைப்புகள் ஆகியவற்றின் மீதான அனைத்து உரிமைகள், தலைப்பு மற்றும் நலன்கள் Reddit நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

Reddit சேவைகள் மற்றும் தரவு, டெவலப்பர் ஆவணங்கள், மற்றும் Reddit வர்த்தக முத்திரைகள் ("Reddit உரிமம் பெற்ற பொருட்கள்") மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்பதையும் எந்தவொரு மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தின் பயன்பாட்டின் மீதும் அதன் உரிமையாளர்களால் விதிக்கப்படும் எந்தவொரு தேவைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்கும் நீங்கள் இணங்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit-இன் உரிமம் பெற்ற உள்ளடக்கங்கள் உரிமம் வழங்கப்பட்டவையே தவிர, விற்கப்பட்டவை அல்ல. டெவலப்பர் விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ள அளவைத் தவிர, அதில் வழங்கப்படாத, மேலே குறிப்பிடப்பட்டவை மீதான அனைத்து உலகளாவிய உரிமைகள், தலைப்பு மற்றும் நலன்களை Reddit தக்கவைத்துக்கொள்கிறது, பாதுகாக்கிறது.

5.2 பயனர் உள்ளடக்கம்

பயனர் உள்ளடக்கம் பயனர்களுக்குச் சொந்தமானது, Reddit-க்கு அல்ல. பயனர் உள்ளடக்கங்களின் பயன்பாட்டின் மீது அவற்றின் உரிமையாளர்களால் விதிக்கப்படும் எந்தவொரு தேவைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் நீங்கள் கட்டுப்பட வேண்டும். இதில் அடங்குபவை: “அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை” என்ற அறிவிப்புகள், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அல்லது உங்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்படும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள். Reddit உரிமத்தைத் தவிர வேறு எந்த உரிமைகளோ உரிமங்களோ வழங்கப்படவுமில்லை, மறைமுகமாகக் குறிக்கப்படவுமில்லை. பொருந்தக்கூடிய பயனர் உள்ளடக்கத்தின் உரிமையாளர்களின் வெளிப்படையான அனுமதியின்றி, மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு மாடல் ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பிற நோக்கங்களுக்காகப் பயனர் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு உரிமையும் இதில் அடங்கும்.

எங்கள் பிராண்டு வழிகாட்டுதல்கள் மற்றும் பத்திரிகை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, உங்கள் ஆப்ஸில் பயனர் உள்ளடக்கத்திற்கான ஆதாரத்தைக் குறிப்பிடுவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதன்படி, எங்கள் சேவைகளில் உள்ள பயனர் உள்ளடக்கத்திற்கான இணைப்பை வழங்குதல், தொடர்புடைய பயனரின் பயனர்பெயரைக் குறிப்பிடுதல், பயனர் உள்ளடக்கம் எங்கள் சேவைகளிலிருந்து வந்தது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

5.3 Reddit வர்த்தக முத்திரைகள்

அசல் உரிமையாளரைக் குறிப்பிடும் நோக்கங்களுக்காக Reddit உரிமத்தின் கீழ் Reddit வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் தவிர, Reddit நிறுவனத்தின் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி, உங்கள் ஆப்ஸின் பெயர் அல்லது உங்கள் ஆப்ஸை விளம்பரப்படுத்தவோ அடையாளம் காட்டவோ (உங்கள் ஆப்ஸ் தொடர்பான எந்தவொரு பொருட்களிலும் உட்பட) Reddit வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இல்லை. இவற்றைச் செய்யாமலிருக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள்:

  • உங்கள் ஆப்ஸுக்கு Reddit-இன் ஆதரவு, தொடர்பு அல்லது ஸ்பான்சர்ஷிப் இருப்பதாகக் கருதும் வகையிலோ அவ்வாறு மறைமுகமாக உணரும் வகையிலோ, Reddit வர்த்தக முத்திரைகளின் வழித்தோன்றல் படைப்புகளைப் பயன்படுத்துதல் அல்லது உருவாக்குதல்;

  • பயனர்களைத் தவறாக வழிநடத்தும், ஏமாற்றும் அல்லது குழப்பும் வகையில் Reddit வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்துதல்; இதில் அடங்குபவை: Reddit வர்த்தக முத்திரைகளில் ஏதேனும் ஒன்றுடன் குழப்பமூட்டும் வகையில் ஒத்திருக்கும் எந்தவொரு முத்திரையையும் பயன்படுத்துதல் அல்லது பதிவுசெய்தல்

  • Reddit-இன் வர்த்தக முத்திரைகளின் மீதான Reddit-இன் உரிமையை எதிர்த்து வழக்காடுதல்.

Reddit வர்த்தக முத்திரைகள் மீதான Reddit-இன் உரிமைக்கு முரணான எந்தவொரு செயலையும் நீங்கள் செய்ய மாட்டீர்கள். Reddit வர்த்தக முத்திரைகள் மீதான Reddit-இன் பிரத்தியேக உரிமைகளை நிலைநாட்டவோ பாதுகாக்கவோ அவசியமானது என்றோ விரும்பத்தக்கது என்றோ Reddit கருதும் எந்தவொரு செயலிலும் (சட்ட நடவடிக்கைகள் உட்பட) Reddit உடன் ஒத்துழைக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit வர்த்தக முத்திரைகளின் அனைத்துப் பயன்பாடுகளும், அத்தகைய பயன்பாட்டினால் எழும் அனைத்து நற்பெயரும் Reddit-இன் நன்மைக்கே உரியதாகும்.

5.4 அசல் உரிமையாளரின் பெயரைக் குறிப்பிடுதல் மற்றும் விளம்பரம்

டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் டெவலப்பர் ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, Reddit வலியுறுத்துவதுபோல் அசல் உரிமையாளர்களின் பெயர்களைக் காட்சிப்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit-இன் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி, Reddit உடனான பார்ட்னர்ஷிப், ஆதரவு அல்லது அங்கீகாரத்தைக் குறிப்பிடும் வகையில், Reddit உரிமம் பெற்ற பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து நீங்கள் எந்த அறிக்கையையும் வெளியிடக்கூடாது.

5.5 கருத்து

Reddit உரிமம் பெற்ற பொருட்கள் அல்லது நீங்கள் ஏதேனும் பரிந்துரைகள், கருத்துகள் அல்லது பிற பின்னூட்டங்களை வழங்கினால், அந்தப் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை Reddit-இன் எந்தவொரு அறிவுசார் சொத்து அல்லது சொத்துரிமையிலும் சுதந்திரமாகப் பயன்படுத்த, வெளியிட, மீண்டும் உருவாக்க, உரிமம் வழங்க, விநியோகிக்க மற்றும் பிற வழிகளில் வணிகமயமாக்குவதற்கான உரிமையை நீங்கள் Reddit-க்கு வழங்குகிறீர்கள்.

6. உங்கள் உறுதிமொழிகள் மற்றும் உத்தரவாதங்கள்

நீங்கள் பின்வருபவற்றை உறுதிப்படுத்துகிறீர்கள், உத்தரவாதம் அளிக்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள்:

  • டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் Reddit-இன் தகுதிநிலை அளவுகோல்களுக்கு இணங்க, Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை அணுகவும் பயன்படுத்தவும் நீங்கள் தகுதி பெற்றுள்ளதுடன், டெவலப்பர் விதிமுறைகளை ஒப்புக்கொள்வதற்கு முன்பு, அந்த விதிமுறைகளின் தாக்கங்களை நீங்கள் படித்துப் புரிந்துகொண்டுள்ளீர்கள்;

  • டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் எங்கள் டெவலப்பர் ஆவணங்களுக்கு உட்பட்டு, Reddit மூலம் அங்கீகரிக்கப்பட்டு உங்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்ட அணுகல் தகவலின் மூலமாக மட்டுமே நீங்கள் Reddit சேவைகள் மற்றும் தரவை அணுகுவீர்கள் (அல்லது அணுக முயற்சிப்பீர்கள்) மற்றும் பயன்படுத்துவீர்கள்;

  • உங்கள் ஆப்ஸ் அல்லது எந்தவொரு Reddit சேவைகள் மற்றும் தரவுகளுக்கான உங்கள் அணுகலோ பயன்பாடோ, எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமைகளையும் (அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது பிற தனியுரிமைகள் உட்பட) மீறவோ, தவறாகப் பயன்படுத்தவோ, அல்லது வேறுவிதமாக மீறவோ செய்யாது;

  • உங்கள் ஆப்ஸ் அல்லது ஆப்ஸ் உள்ளடக்கத்தில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமான ஏதேனும் மென்பொருள், கோடிங், பொருட்கள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைக்கான (உங்கள் ஆப்ஸை உருவாக்குவதில் நீங்கள் ஏதேனும் லார்ஜ் லாங்குவேஜ், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், அல்காரிதமிக் மற்றும் பிற மாடல்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்தியிருந்தால், அது உட்பட) அனைத்து அவசியமான உரிமைகளையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் மற்றும் பராமரிப்பீர்கள்; மேலும், Reddit-க்கு டெவலப்பர் உரிமம் மற்றும் டெவலப்பர் விதிமுறைகளில் உள்ள மற்ற அனைத்து உரிமங்கள், அனுமதிகள் மற்றும் பிற உரிமைகளை வழங்குவதற்குத் தேவையான அந்த உரிமைகளை, எந்தவொரு சட்டத்தையும் மீறாமலும், உங்கள் ஆப்ஸின் செயல்பாடு அல்லது ஆப்ஸ் உள்ளடக்கத்தின் பயன்பாட்டினால் மீறப்படக்கூடிய எந்தவொரு அங்கீகார விதிமுறைகள் அல்லது அணுகல் நிபந்தனைகள் இல்லாமலும் நீங்கள் பெற்றுள்ளீர்கள்; மற்றும்

  • டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் உரிமங்களை வழங்குவதிலோ, Reddit சேவைகள் மற்றும் தரவை அணுகுவதிலோ, பயன்படுத்துவதிலோ, டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலோ, நீங்கள் எந்தவொரு சட்டங்களையும், விதிகளையும் அல்லது ஒழுங்குமுறைகளையும் மீறவில்லை, மீறவும் மாட்டீர்கள்.

சில சூழ்நிலைகளில், உதாரணமாக, ஓர் அரசாங்க அதிகாரியிடமிருந்து கோரிக்கை வந்தால், பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது ஒழுங்குமுறை குறிப்பிடுவதன்படி, அல்லது டெவலப்பர் விதிமுறைகளின் சாத்தியமான மீறலை விசாரிப்பதற்காக, உங்களிடமிருந்து கூடுதல் தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குமாறு Reddit கேட்கக்கூடும். கோரப்பட்ட தகவல்களையும் ஆவணங்களையும் Reddit செயலாக்கும் வரை, தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் உங்கள் கணக்கை முடக்கவும், உங்கள் ஆப்ஸ் அல்லது Devvit ஆப்ஸைப் பட்டியலிலிருந்து நீக்கவும், Reddit சேவைகள் மற்றும் தரவை அணுகும் உங்கள் திறனைத் தடுக்கவும் Reddit-க்கு உரிமை உள்ளது. எங்களின் கோரிக்கைக்கு ஏற்ப முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை நீங்கள் வழங்கத் தவறினால், உங்களது ஆப்ஸ் அல்லது Devvit ஆப்ஸை மீண்டும் பட்டியலிடவோ, Reddit சேவைகள் மற்றும் தரவை அணுகும் அனுமதியை மீண்டும் வழங்கவோ Reddit மறுக்கக்கூடும்.

7. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு

7.1 தனியுரிமை இணக்கம்

Reddit அவ்வப்போது புதுப்பிக்கக்கூடிய இங்கு அமைந்துள்ள டெவலப்பர் தரவுப் பாதுகாப்பு பிற்சேர்க்கையுடனும் (“DPA”) பொருந்தக்கூடிய அனைத்துத் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுடனும் (DPA-வில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) நீங்கள் இணங்க வேண்டும். பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்குவதற்காக, நீங்கள் Reddit உடன் ஒத்துழைக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

7.2 தனியுரிமைக் கொள்கை

உங்கள் ஆப்ஸ் பயனர்கள், நீங்கள் அவர்களின் தரவை அணுகும், சேகரிக்கும், சேமிக்கும், தக்கவைக்கும், அனுப்பும், பகிரும் மற்றும் பிற வழிகளில் செயலாக்கும் முறைகள் உட்பட, நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு (பொருந்தினால்) அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எந்தவொரு ஆப்ஸ் பயனரும் உங்கள் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்வது, நிறுவுவது அல்லது வேறுவிதமாகப் பதிவுசெய்வதற்கு முன்போ, உங்கள் ஆப்ஸானது ஆப்ஸ் பயனரின் தரவைப் பயன்படுத்துவதற்கு முன்போ, பொருந்தக்கூடிய தனியுரிமை, தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள், தொடர்புடைய ஆப் ஸ்டோர் கொள்கைகள் ஆகிய அனைத்திற்கும் இணக்கமான ஒரு தனியுரிமைக் கொள்கையை உங்கள் ஆப்ஸிற்காக நீங்கள் உருவாக்கி, அதைப் பின்பற்ற வேண்டும். மேலும், நீங்கள் என்ன தரவைச் சேகரிக்கிறீர்கள், தரவை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், சேமிக்கிறீர்கள் மற்றும் பகிர்கிறீர்கள் என்பதையும், சேகரிக்கப்பட்ட தரவை நீக்கும்படி பயனர்கள் எவ்வாறு கோரலாம் என்பதையும் ஆப்ஸ் பயனர்களுக்கு முழுமையாகவும், துல்லியமாகவும், தெளிவாகவும் விவரிக்க வேண்டும்.

உங்கள் தனியுரிமைக் கொள்கை, பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், டெவலப்பர் விதிமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க மட்டுமே நீங்கள் Reddit சேவைகளையும் தரவையும் பயன்படுத்தலாம். உங்கள் தனியுரிமைக் கொள்கையானது, எங்களுடைய டெவலப்பர் விதிமுறைகள், பயனர் ஒப்பந்தம், தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றை மீறவோ, மாற்றியமைக்கவோ அவற்றுடன் முரண்படவோ கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுடைய ஆப்ஸின் தனியுரிமைக் கொள்கையில் ஏதேனும் முரண்பாடுகளோ சீரற்ற தன்மைகளோ இருக்கும் பட்சத்தில், எங்களுடைய தனியுரிமைக் கொள்கையே மேலோங்கிச் செயல்படும். தேவைக்கேற்ப, உங்கள் ஆப்ஸின் தனியுரிமைக் கொள்கைக்கான, பொதுவில் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கப்பட்ட இணைப்புகளை டெவலப்பர் தளத்தில் நீங்கள் பராமரிக்க வேண்டும். கூடுதலாக, Reddit சேவைகள் மற்றும் தரவைப் பயன்படுத்துவதன் மூலம், சமர்ப்பிக்கப்படும் தகவல்களை எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க Reddit பயன்படுத்தக்கூடும். டெவலப்பர் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதன் மூலம், பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையின் கீழ் தேவைப்படும் அளவைத் தவிர, பிற மூன்றாம் தரப்பினர் எவருடனும் Reddit சேவைகளையோ தரவுகளையோ நீங்கள் பகிரக் கூடாது.

7.3 தரவுப் பகிர்வு மற்றும் தக்கவைப்பு

பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையின் கீழ் நீங்கள் Reddit சேவைகள் மற்றும் தரவுகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வரையில் தவிர, Reddit-இன் கோரிக்கையின் பேரில் உங்கள் வசம் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள Reddit சேவைகள் மற்றும் தரவுகளை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்பதுடன் பின்வரும் சூழல்களில் உங்கள் வசம் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள Reddit சேவைகள் மற்றும் தரவுகளை நீக்கிவிட வேண்டும்:

  • டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட, உங்கள் ஆப்ஸின் கூறப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாட்டிற்கு அதைத் தக்கவைத்துக்கொள்வது இனி அவசியமில்லை எனும்போது;

  • நீங்கள் உங்கள் ஆப்ஸை இயக்குவதை நிறுத்தும்போது (நீங்களாகவோ, Reddit-இன் அமலாக்க நடவடிக்கையின் காரணமாகவோ, வேறு விதமாகவோ);

  • அதை நீக்கும்படி Reddit உங்களைக் கேட்கும்போது;

  • சம்பந்தப்பட்ட ஆப்ஸ் பயனர் அதை நீக்கும்படி கேட்கும்போது; அல்லது

  • பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளின்படி தேவைப்படும்போது.

ஆப்ஸ் பயனர்கள் தங்களின் ஆப்ஸ் உள்ளடக்கத்தைத் திருத்தவும் நீக்கவும் கோருவதற்கு, நீங்கள் எளிதில் அணுகக்கூடிய ஒரு வழியை வழங்க வேண்டும். Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கத்தை நீங்கள் தவறுதலாகப் பெற்றால், உடனடியாக Reddit-க்குத் தெரிவித்து, அதை நீக்கிவிட வேண்டும். மேலும், Reddit கோரும்போது அதை நீக்கியதற்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.

7.4 பாதுகாப்பு

நீங்கள் Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களின் பாதுகாப்பைப் பராமரிக்க வேண்டும். டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டதைத் தவிர, Reddit சேவைகள் மற்றும் தரவு அல்லது Reddit உரிமம் பெற்ற பிற தகவல்கள் தொடர்பான எந்தவொரு அணுகல் தகவலையும் நீங்கள் எந்தவொரு மூன்றாம் நபருடனும் பகிரவோ அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவோ கூடாது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாட்டிலிருந்து (அழித்தல், இழப்பு, மாற்றம், வெளிப்படுத்துதல், விநியோகம் அல்லது பிற பாதிப்புகள் உட்பட) Reddit சேவைகள் மற்றும் தரவைப் பாதுகாக்க, சேமிக்கப்பட்ட தரவை என்க்ரிப்ட் செய்வது உட்பட, வணிக ரீதியாக நியாயமான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் வகையிலும், தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு (எடுத்துக்காட்டாக, தரவை நீக்குதல் மற்றும் தரவு சேமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்) உட்பட்டும் வடிவமைக்கப்பட்ட நிர்வாக, நேரடி மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடைமுறைகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். வைரஸ்கள், தானியங்கு செயல்பாடுகள் அல்லது வேறு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் கோடிங் அல்லது பொருள் மூலமான அணுகல் உட்பட, Reddit சேவைகள் மற்றும் தரவுகளின் எந்தவொரு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுக்குமான அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாட்டிலிருந்து தடுக்க, நீங்கள் தொழில்துறைத் தரநிலைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும். டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டதைத் தவிர, நீங்கள் சேமிக்கும் இதே போன்ற தரவுகளைப் பாதுகாப்பதில் பயன்படுத்தும் அதே கவனத்துடன், தரவிற்கான தொழில்துறைத் தரநிலைகளுக்கு ஏற்ற நிறுவன மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, Reddit சேவைகள் மற்றும் தரவு மற்றும் Reddit உரிமம் பெற்ற பிற பொருட்களை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

Reddit சேவைகள் மற்றும் தரவுகளைச் செயலாக்கும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய உங்கள் கணினிகளின் (அல்லது உங்கள் சார்பாகச் செயல்படுபவர்களின் கணினிகளின்) அங்கீகரிக்கப்படாத அணுகல், பாதுகாப்பு மீறல், சாத்தியமான பாதிப்பு, அல்லது பாதுகாப்பு, ரகசியத்தன்மை அல்லது ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தாலோ சந்தேகம் வந்தாலோ, நீங்கள் உடனடியாக Reddit-க்குத் தெரிவித்து, நியாயமாக Reddit கோரும் எந்தவொரு தகவலையும் வழங்க வேண்டும். மேற்கூறிய சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், நீங்கள் Reddit உடன் கலந்தாலோசித்து ஒத்துழைக்க வேண்டும், தேவைப்படும் அறிவிப்புகளுக்கு உதவ வேண்டும் மற்றும் சம்பவம் குறித்து Reddit-க்குத் தவறாமல் தெரிவிக்க வேண்டும். அத்துடன், Reddit சேவைகள் மற்றும் தரவுகளுக்கான உங்கள் அணுகலால் ஏற்படும் எந்தவொரு மீறல் அல்லது சாத்தியமான பாதிப்பையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

8. ஒப்பந்த முறிவு

8.1 ஒப்பந்தத்தை முறிக்கும் உரிமைகள்

உங்களுக்கு அறிவிப்பு வழங்குவதன் மூலம், எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும், டெவலப்பர் விதிமுறைகள், டெவலப்பர் விதிமுறைகளில் வழங்கப்பட்ட உரிமைகள் அல்லது Reddit உரிமத்தை Reddit உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரலாம் அல்லது இடைநிறுத்தலாம்.

எங்களுக்கு அறிவிப்பு வழங்குவதன் மூலமும், Reddit உரிமம் பெற்ற அனைத்துப் பொருட்களுக்கான உங்கள் அணுகலையும் பயன்பாட்டையும் நிறுத்துவதன் மூலமும், நீங்கள் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் டெவலப்பர் விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம்.

8.2 ஒப்பந்த முறிவின் விளைவு

டெவலப்பர் விதிமுறைகள் முடிவடைந்தவுடன்: (a) டெவலப்பர் விதிமுறைகளில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் (Reddit உரிமம் உட்பட) உடனடியாகக் காலாவதியாகிவிடும், Reddit உரிமம் பெற்ற அனைத்து உள்ளடக்கங்களையும் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்த வேண்டும்; மற்றும் (b) உங்கள் கட்டுப்பாட்டிலோ அல்லது உடைமையிலோ உள்ள Reddit உரிமம் பெற்ற அனைத்து உள்ளடக்கங்களையும் நீங்கள் நிரந்தரமாக நீக்கிவிட வேண்டும்.

உங்கள் ஆப்ஸ் ஒரு Devvit ஆப்ஸாக இருக்கும் பட்சத்தில், ஆப்ஸின் உள்ளடக்கம் தொடர்பாக Reddit-க்கு வழங்கப்பட்ட டெவலப்பர் உரிமம், ஒப்பந்த முறிவுக்குப் பிறகும் தொடர்ந்து செல்லுபடியாகும். மேலும், மாடரேட்டர்களாக உள்ள பயனர்கள் ஒரு நியாயமான இடைக்காலத்திற்கு உங்கள் Devvit ஆப்ஸைத் தொடர்ந்து அணுகலாம், பயன்படுத்தலாம்.

பிரிவுகள் 2.2 (தணிக்கை உரிமை), 3.5 (உள்ளடக்க அகற்றம்), 5 (அறிவுசார் சொத்து), 7.1 (தனியுரிமை இணக்கம்), 7.3 (தரவுப் பகிர்வு மற்றும் தக்கவைப்பு), 8.2 (ஒப்பந்த முறிவின் விளைவு), 9 (பொறுப்புத் துறப்பு; பொறுப்பின் வரம்பு; இழப்பீடு), மற்றும் 10 (இதர விவகாரங்கள்) ஆகியவையும் டெவலப்பர் விதிமுறைகள் முறிவுக்குப் பிறகும் நடைமுறையில் இருக்கும்.

9. பொறுப்புத் துறப்பு; பொறுப்பின் வரம்பு; இழப்பீடு

9.1 பொறுப்புத் துறப்பு

Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களில் தவறுகள், பிழைகள், சிக்கல்கள் அல்லது தடங்கல்கள் இருக்காது என்றோ, அவை நம்பகமானவை, துல்லியமானவை, முழுமையானவை அல்லது வேறுவிதமாகச் செல்லுபடியாகும் என்றோ Reddit பிரதிநிதித்துவப்படுத்தவோ உத்தரவாதம் அளிக்கவோ இல்லை. Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்கள் எந்தவிதமான உத்தரவாதமும் இன்றி “உள்ளபடியே” வழங்கப்படுகின்றன. மேலும், வணிகத்தன்மை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, கிடைக்கும் தன்மை, பாதுகாப்பு, உரிமை, மீறலின்மை ஆகியவற்றின் மறைமுகமான உத்தரவாதங்கள் உட்பட, எந்தவொரு மற்றும் அனைத்து உத்தரவாதங்களையும் நிபந்தனைகளையும் Reddit வெளிப்படையாக மறுக்கிறது. Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் சொந்த விருப்பத்திற்கும் ஆபத்திற்கும் உட்பட்டது. மேலும், Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உங்கள் கணினி சிஸ்டத்திற்கு ஏற்படும் சேதம், தரவு இழப்பு உள்ளிட்ட எந்தவொரு சேதத்திற்கும் நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்.

9.2 பொறுப்புடைமை வரம்பு

Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை அணுகுவதன் மூலமும் பயன்படுத்துவதன் மூலமும், Reddit நிறுவனங்களின் பொறுப்புடைமையானது, பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு மட்டுப்படுத்தப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

டெவலப்பர் விதிமுறைகள் தொடர்பாக அல்லது அதன் காரணமாக எழும் எந்தவொரு தற்செயலான, மறைமுகமான, சிறப்பு, தண்டனைக்குரிய, விளைவான அல்லது அதுபோன்ற சேதங்கள் அல்லது பொறுப்புகளுக்கு Reddit நிறுவனங்கள் பொறுப்பேற்காது. ஒப்பந்தம், சிவில் தவறு (அலட்சியம் உட்பட), உரிமையியல் பொறுப்பு, சட்டம், முழுப் பொறுப்பு, உத்தரவாத மீறல் அல்லது வேறு எந்தப் பொறுப்புக் கோட்பாட்டின் கீழோ, அந்தச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து எந்த Reddit நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அவை அறிந்திருந்தாலும், அல்லது அறிந்திருக்க வேண்டியிருந்தாலும், மேலும் டெவலப்பர் விதிமுறைகளின் முக்கிய நோக்கத்தில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும் அல்லது அதன் கீழ் ஏதேனும் வரையறுக்கப்பட்ட தீர்வு இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

டெவலப்பர் விதிமுறைகள் தொடர்பாகவோ அல்லது அதன் காரணமாகவோ, எந்தவொரு பொறுப்புடைமைக் கோட்பாட்டின் கீழும் எழும் Reddit நிறுவனங்களின் மொத்தப் பொறுப்பானது, எந்தவொரு நிகழ்விலும் $100-ஐத் தாண்டாது.

9.3 இழப்பீடு

Reddit நிறுவனங்கள், அவற்றின் உரிமதாரர்கள் மற்றும் பயனர்களுக்கு (a) உங்கள் ஆப்ஸ் அல்லது ஆப்ஸ் உள்ளடக்கம்; (b) டெவலப்பர் விதிமுறைகளை நீங்கள் மீறுவது; (c) Reddit-இன் உரிமம் பெற்ற பொருட்களை அணுகுவது, பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் ஏற்படும் எந்தவொரு மூன்றாம் தரப்புக் கிளைம்கள், சட்ட வழக்குகள் அல்லது சட்ட நடவடிக்கைகளுடன் ("கிளைம்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன) தொடர்புடைய அனைத்துச் செலவுகள், பொறுப்புகள் மற்றும் செலவினங்களிலிருந்து (வழக்கறிஞர் கட்டணம் உட்பட) இழப்பீடு வழங்கவும், பாதுகாக்கவும், பாதிப்படையாமல் காப்பாற்றவும் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய எந்தவொரு விஷயத்தின் பாதுகாப்பையும் கட்டுப்படுத்தும் உரிமை எங்களுக்கு உள்ளது. மேலும், கிளைம்கள் மீதான எங்கள் பாதுகாப்பிற்கு ஒத்துழைக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

10. இதர விவரங்கள்

10.1 இரகசியத்தன்மை

உங்களுக்கு நாங்கள் அனுப்பும் தகவல்களிலும், எங்களின் Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களிலும் Reddit-இன் இரகசியத் தகவல்கள் அடங்கியிருக்கலாம். "இரகசியத் தகவல்" என்பது, Reddit உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக வெளிப்படுத்தும் எந்தவொரு தகவலையும் உள்ளடக்கியது. அத்தகவல் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் இரகசியமானது எனக் குறிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது அத்தகவலின் தன்மை அல்லது அது வெளிப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பொதுவாக இரகசியமானது எனப் புரிந்துகொள்ளப்படக்கூடியதாக இருந்தாலோ அது இரகசியமானதாகக் கருதப்படும்.

இரகசியத் தகவல்களை இரகசியமாக வைத்திருக்கவும், அதுபோன்ற உங்கள் சொந்த இரகசியத் தகவல்களைப் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் அதே அளவிலான கவனத்துடன் (ஆனால் நியாயமான கவனத்திற்குக் குறையாமல்), அதன் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு, பரவல் அல்லது வெளியீட்டைத் தடுக்கவும் அதைப் பாதுகாக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

இரகசியத் தகவல் என்பது பின்வரும் தகவல்களை உள்ளடக்காது: (a) உங்கள் தரப்பில் எந்தத் தவறுமின்றி பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்த அல்லது வெளிப்படையாக மாறிய தகவல்; (b) எந்தவொரு இரகசியக் காப்புக் கடமையுமின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து நீங்கள் சட்டப்பூர்வமாகப் பெறும் தகவல்; (c) சட்டத்தின் செயல்பாட்டின் கீழ் வெளியிடப்படும் தகவல்; அல்லது (d) Reddit-இன் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியுடன் வெளியிடப்படும் தகவல். உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட இரகசியத் தகவல்களில் உள்ள அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளையும் Reddit தக்கவைத்துக்கொள்கிறது.

10.2 டெவலப்பர் விதிமுறைகளில் மாற்றங்கள்

Reddit அவ்வப்போது டெவலப்பர் விதிமுறைகள் அல்லது டெவலப்பர் ஆவணங்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும். நாங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, திருத்தப்பட்ட டெவலப்பர் விதிமுறைகளை வெளியிடுவோம். எங்கள் முழுமையான விருப்பத்தின் பேரில், மாற்றங்கள் முக்கியமானவை எனில், உங்கள் கணக்குடன் தொடர்புடைய முகவரிக்கு (நீங்கள் ஒரு ஈமெயில் முகவரியை வழங்கத் தேர்வுசெய்திருந்தால்) ஈமெயில் அனுப்புவதன் மூலமாகவோ, டெவலப்பர் சேவைகள் தொடர்பாக நீங்கள் எங்களுக்கு வழங்கிய வேறு ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் அனுப்புவதன் மூலமாகவோ, சேவைகள் வழியாக வேறு விதத்தில் உங்களுக்கு அறிவிப்பதன் மூலமாகவோ நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம். டெவலப்பர் விதிமுறைகள் திருத்தப்பட்ட பிறகு, டெவலப்பர் சேவைகளை அல்லது வேறு ஏதேனும் Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கத்தைத் தொடர்ந்து அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலம், திருத்தப்பட்ட டெவலப்பர் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். திருத்தப்பட்ட டெவலப்பர் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், டெவலப்பர் சேவைகள் மற்றும் Reddit-இன் உரிமம் பெற்ற பிற உள்ளடக்கங்களை அணுகுவதையும் பயன்படுத்துவதையும் நீங்கள் நிறுத்த வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்று டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் டெவலப்பர் ஆவணங்களை மதிப்பாய்வு செய்யவும். அவ்வாறு செய்வது உங்கள் பொறுப்பாகும்.

10.3 ஆளும் சட்டம் மற்றும் அதிகார வரம்பு

உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது பிணக்கு ஏற்பட்டால், அதைத் தெரியப்படுத்தி எங்களுடன் முறைசாரா வழியில் பேசித் தீர்க்க முயற்சிக்க ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கருத்துகளையும் கவலைகளையும் இங்கே எங்களிடம் தெரிவிக்கலாம்.

பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு, Reddit உரிமம் பெற்ற பொருட்கள் அல்லது டெவலப்பர் விதிமுறைகள் தொடர்பாக எழும் எந்தவொரு கோரிக்கைகளும், அதன் சட்ட முரண்பாட்டு விதிகளைப் பொருட்படுத்தாமல், கலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும்.

Reddit உரிமம் பெற்ற பொருட்கள் அல்லது டெவலப்பர் விதிமுறைகள் தொடர்பான அனைத்துத் தகராறுகளும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட முடியாவிட்டால், சான் ஃபிரான்சிஸ்கோ அல்லது கலிஃபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி/மாநில நீதிமன்றங்களில் மட்டுமே கொண்டு வரப்படும். மேலும், நீங்களும் Reddit நிறுவனமும் இந்த நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்குக் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள்.

10.4 ஈமெயில்கள் மற்றும் பிற அறிவிப்புகள்

டெவலப்பர் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்வதன் மூலமும், Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை அணுகிப் பயன்படுத்துவதன் மூலமும், எங்களிடமிருந்து வரும் தகவல்தொடர்புகளையோ டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்கள் தொடர்பான தகவல்தொடர்புகளையோ உங்கள் கணக்கிற்கோ உங்களால் அல்லது உங்கள் சார்பாக Reddit-க்கு வழங்கப்பட்ட ஏதேனும் ஓர் ஈமெயில் முகவரிக்கோ பெறுவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit தரப்பினரிடமிருந்து வரும் தகவல்தொடர்புகளில், Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை நீங்கள் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான செயல்பாட்டுத் தகவல்தொடர்புகள், உங்கள் ஆப்ஸில் கோரப்பட்ட மாற்றங்கள் அல்லது Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த புதுப்பிப்புகள், எங்களால் அல்லது எங்கள் மூன்றாம் தரப்புப் பார்ட்னர்களால் நடத்தப்படும் சந்தைப்படுத்தல் அல்லது விளம்பரங்கள் தொடர்பான தகவல்தொடர்புகள், Reddit மற்றும் தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்த செய்திகள் ஆகியவை அடங்கலாம். Reddit-க்கு நீங்கள் வழங்கிய ஈமெயில் முகவரியை மாற்றினாலோ அல்லது செயலிழக்கச் செய்தாலோ, உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

விளம்பர ஈமெயில்களுக்கு ஒப்புதல் நீக்க விரும்பினால், அந்த விளம்பர ஈமெயிலிலேயே உள்ள விலகலுக்கான விருப்பங்களைப் பின்பற்றி எங்கள் விளம்பர ஈமெயில் பட்டியலிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்.

டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் Reddit உரிமம் பெற்ற பொருட்கள் தொடர்பாக வழங்கப்படும் அல்லது வழங்கப்பட வேண்டிய அனைத்து வகையான அறிவிப்புகளும் தகவல்தொடர்புகளும் எழுத்துப்பூர்வமாக இருக்கும். மேலும், அவை டெவலப்பர் சேவைகள் அல்லது பிற சேவைகள் வழியாக உங்கள் கணக்கிற்கோ உங்கள் கணக்குடன் தொடர்புடைய ஈமெயில் முகவரிக்கோ அனுப்பப்படும்.

10.5 கூட்டாட்சி ஏஜென்சிகள்

Reddit உரிமம் பெற்ற பொருட்கள் முற்றிலும் தனியார் செலவில் உருவாக்கப்பட்டவை. அவை, பொருந்தக்கூடிய அமெரிக்கக் கூட்டாட்சி கையகப்படுத்தல் ஒழுங்குமுறை மற்றும் அது தொடர்பான ஏஜென்சி கூடுதல் விதிமுறைகளின்படி, வணிகரீதியான கணினி மென்பொருள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களாகும். எங்களின் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி, அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை அணுகுவதும் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்புகளுக்கு Reddit-ஆல் அனுமதியளிக்கப்பட்ட எந்தவொரு அணுகலும் பயன்பாடும் 48 C.F.R. 12.212 மற்றும் 48 C.F.R. 227.7202-1 முதல் 227.7202-4 வரையிலான விதிகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும்.

10.6 ஏற்றுமதிக் கட்டுப்பாடு

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டங்கள் உட்பட, பொருந்தக்கூடிய அனைத்து வெளிநாட்டு, கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களின் பயன்பாடு, அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் தரவுப் பரிமாற்ற விதிகள், உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுடன், அந்த உள்ளடக்கங்கள் வழங்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் நாட்டின் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுச் சட்டங்களுக்கும் உட்பட்டதாக இருக்கலாம். நீங்கள் இந்தச் சட்டங்களுக்குக் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தச் சட்டங்களின் கீழ், Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை, உரிமம் அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், பின்வரும் சந்தர்ப்பங்களில் விற்கவோ, குத்தகைக்கு விடவோ, பதிவிறக்கம் செய்யவோ, நகர்த்தவோ, ஏற்றுமதி செய்யவோ, மறு ஏற்றுமதி செய்யவோ, வெளியிடவோ, எல்லைகளைக் கடந்து மாற்றவோ கூடாது: (a) அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட, அல்லது கவலைக்குரிய நாடுகள் அல்லது சிறப்புக் கண்காணிப்புப் பட்டியலில் உள்ள நாடுகள் உட்பட, இந்தச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட எந்தவொரு நாட்டிற்கோ அல்லது எந்தவொரு வெளிநாட்டு குடிமகனுக்கோ; (b) அமெரிக்க வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு நபர் அல்லது நிறுவனம் உட்பட, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட எந்தவொரு இறுதிப் பயனருக்கும்; அல்லது (c) எந்தவொரு கட்டுப்படுத்தப்பட்ட இறுதிப் பயன்பாட்டிற்கும். உங்கள் ஆப்ஸ் மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பாகத் தேவைப்படும் அனைத்துப் பதிவுகளையும் உரிமங்களையும் நீங்கள் பராமரிக்க வேண்டும்.

10.7 பொதுவானவை

Reddit தனது டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகளில் எதையும் வேறொருவருக்கு மாற்றலாம் ஒப்படைக்கலாம். Reddit-இன் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி, டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் உரிமைகள் அல்லது கடமைகளில் எதையும் (உங்கள் ஆப்ஸின் விற்பனை, உரிமம் அல்லது பிற உரிமை மாற்றம் உட்பட) எந்த மூன்றாம் தரப்பினருக்கும் நீங்கள் கைமாற்றவோ, ஒப்படைக்கவோ, துணை உரிமம் வழங்கவோ கூடாது. இந்தப் பத்தியை மீறி செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பிரிதிநிதித்துவமும் கைமாற்றமும் செல்லாததாகும்.

Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை அணுக மற்றும் பயன்படுத்த, டெவலப்பர் விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும், சிந்திக்கவும், பரிசீலிக்கவும் உங்களுக்குப் போதுமான வாய்ப்பு கிடைத்திருப்பதையும், அந்த விதிமுறைகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு மனமுவந்து ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். அத்துடன், டெவலப்பர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான தகுந்த ஆலோசனையைப் பெற, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழக்கறிஞர்களிடமிருந்து சுயாதீனமான சட்ட ஆலோசனையைப் பெற்றுள்ளீர்கள் அல்லது பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தீர்கள் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.

Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களை நீங்கள் அணுகுவதும் பயன்படுத்துவதும், டெவலப்பர் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதும், உங்களுக்கும் Reddit நிறுவனத்திற்கும் இடையே எந்தவொரு ஏஜென்சி, பார்ட்னர்ஷிப் அல்லது கூட்டு முயற்சியை ஏற்படுத்தாது. வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டாலன்றி, டெவலப்பர் விதிமுறைகள் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் எவ்விதப் பலன்களையும் அளிக்காது.

டெவலப்பர் விதிமுறைகள் பிரத்தியேகமானவை அல்ல. உங்கள் ஆப்ஸ், வேறு ஏதேனும் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்குப் போட்டியாகவோ அவற்றை ஒத்ததாகவோ அமையக்கூடிய தயாரிப்புகள் அல்லது சேவைகளை Reddit உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

டெவலப்பர் விதிமுறைகளில் உள்ள தலைப்புகள் குறிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை விளக்கும்போது அவை கருத்தில் கொள்ளப்படாது. டெவலப்பர் விதிமுறைகளின் நோக்கங்களுக்காக: (a) “உள்ளடக்கு,” “உள்ளடக்குகிறது,” “உள்ளடக்கிய” ஆகிய சொற்களைத் தொடர்ந்து “வரம்பில்லாமல்” என்ற சொல் வருவதாகக் கருதப்படும்; (b) “போன்ற,” “உதாரணமாக,” “எ.கா.,” மற்றும் இதுபோன்ற சொற்கள் 'உதாரணத்தின் வகை' என்று பொருள்படும், மேலும் இந்தச் சொற்களைத் தொடர்ந்து வரும் உருப்படிகள் முழுமையான பட்டியலாகக் கருதப்படாது; மற்றும் (c) “அல்லது” என்ற சொல் “மற்றும்/அல்லது” என்பதன் உள்ளடக்கிய பொருளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் “அல்லது,” “ஏதேனும்,” மற்றும் “இரண்டில் ஒன்று” ஆகிய சொற்கள் ஒன்றையொன்று விலக்காது. ஆவணத்தைத் தயார்செய்த தரப்பு என்ற கூற்றின் அடிப்படையில், எந்தவிதமான தெளிவின்மையும் அத்தரப்புக்கு எதிராகப் பொருள் கொள்ளப்படாது.

டெவலப்பர் விதிமுறைகளில் ஏதேனும் ஒரு விதிமுறை அல்லது டெவலப்பர் விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாடு சட்டத்திற்கு முரணானதாகவோ, செல்லாததாகவோ, செயல்படுத்த முடியாததாகவோ கருதப்பட்டால், அந்த விதிமுறை இயன்றவரை அதிகபட்ச அளவிற்குச் செயல்படுத்தப்படும். மேலும், டெவலப்பர் விதிமுறைகளின் ஏனைய விதிமுறைகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

டெவலப்பர் விதிமுறைகள், பயனர் ஒப்பந்தம் (இது இந்தக் குறிப்பின் மூலம் டெவலப்பர் விதிமுறைகளில் இணைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டுள்ளது) மற்றும் டெவலப்பர் விதிமுறைகளில் குறிப்பாகக் குறிப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ள வேறு எந்த ஒப்பந்தங்களும், உங்களுக்கும் Reddit நிறுவனத்திற்கும் இடையே சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் ஓர் ஒப்பந்தமாகும். மேலும், Reddit உரிமம் பெற்ற உள்ளடக்கங்களின் பொருள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையேயான முழுமையான ஒப்பந்தத்தை இது கொண்டுள்ளது. அத்துடன், டெவலப்பர் விதிமுறைகளின் முந்தைய பதிப்புகள் உட்பட, கூறப்பட்ட பொருள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ இருந்த அனைத்து முந்தைய தகவல்தொடர்புகள், பிரதிநிதித்துவங்கள், புரிதல்கள் மற்றும் ஒப்பந்தங்களையும் இது ரத்து செய்கிறது.

டெவலப்பர் விதிமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

⌂ 换网址