Reddit Embeds விதிமுறைகள்

Reddit Embeds விதிமுறைகள்

ஜூன் 19, 2023 முதல் அமலுக்கு வருகிறது. கடைசியாகத் திருத்தப்பட்டது ஏப்ரல் 18, 2023

Reddit Embeds சேவையை (“Reddit Embeds”) பயன்படுத்த நீங்கள் ஆர்வம் காட்டியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது! இந்த Reddit Embeds விதிமுறைகள் (Reddit-இன் டெவலப்பர் விதிமுறைகள், பயனர் ஒப்பந்தம், Press & Broadcast Guidelines, பிராண்டு வழிகாட்டுதல்கள், ”விதிமுறைகள்”) ஆகியவற்றுடன் சேர்த்து, Reddit Embeds-ஐ நீங்கள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தும், மேலும் டெவலப்பர் விதிமுறைகள் மற்றும் பயனர் ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் இவை உள்ளடக்கியுள்ளன. Reddit Embeds வழியாக பயனர் உள்ளடக்கம் அல்லது Reddit உரிமம் பெற்ற பிற ஆவணங்களை உட்பொதிப்பதன் மூலம், இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், Reddit Embeds-ஐ அணுகவோ பயன்படுத்தவோ உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் ஒரு நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர் என்றால், அந்த நிறுவனத்தின் சார்பாக இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கான உரிய அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

1. உரிமம்

1.1 உங்களுக்கு நாங்கள் வழங்கும் உரிமம்

இந்த விதிமுறைகளுக்கு இணங்க, பயனர் உள்ளடக்கத்தை உங்கள் ஆப்ஸில் காட்டுவதற்காக, Reddit Embeds உருவாக்கும் URL-ஐ நீங்கள் நகலெடுத்து உங்கள் ஆப்ஸில் ஒட்டலாம்.

இந்த விதிமுறைகளை ( டெவலப்பர் விதிமுறைகள் , பயனர் ஒப்பந்தம் மற்றும் Reddit Embeds-ஐ அனைத்து டெவலப்பர் ஆவணங்கள் உட்பட) நீங்கள் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் கடைபிடிக்கும் பட்சத்தில், டெவலப்பர் விதிமுறைகளின் கீழ் உள்ள Reddit உரிமத்தின்படி (மற்றும் அதன் வரம்பிற்குள்) Reddit Embeds-ஐப் பயன்படுத்துவதற்கான பிரத்தியேகமற்ற, மாற்ற முடியாத, துணை உரிமம் வழங்க முடியாத மற்றும் திரும்பப் பெறக்கூடிய உரிமத்தை Reddit உங்களுக்கு வழங்குகிறது. உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளும் Reddit-க்குச் சொந்தமானவை.

1.2 Reddit-க்கான உங்கள் உரிமம்

உங்கள் ஆப்ஸில் பயனர் உள்ளடக்கத்தைக் காட்டுவதற்காக நீங்கள் Reddit Embeds-ஐப் அணுகிப் பயன்படுத்தினால், இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் தொடர்ந்து இணங்குவதை உறுதி செய்வதற்கும், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்குவதற்கும் உங்கள் ஆப்ஸைக் கண்காணிக்கும் பொருட்டு, Reddit Embeds-ஐப் பயன்படுத்தி பயனர் உள்ளடக்கம் அல்லது வேறு எந்த Reddit உரிமம் பெற்ற ஆவணங்களையும் நீங்கள் காட்டும் உங்கள் ஆப்ஸின் எந்தப் பகுதியையும் அட்டவணைப்படுத்த, தற்காலிகமாகச் சேமிக்க, கிரால் செல்ல மற்றும் பிற வழிகளில் அணுக, Reddit-க்குப் பிரத்தியேகமற்ற, உரிமைத்தொகையற்ற, மாற்ற முடியாத, துணை உரிமம் வழங்க முடியாத, திரும்பப் பெறக்கூடிய உரிமத்தை வழங்குகிறீர்கள்.

2. உபயோகம் மீதான கட்டுப்பாடுகள்

Reddit Embeds ஆனது Reddit-இன் ஒரு சலுகையாக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இந்த விதிமுறைகளுக்கு இணங்க, உங்கள் ஆப்ஸில் பயனர் உள்ளடக்கத்தை உட்பொதிப்பதற்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் Reddit Embeds-ஐப் பயன்படுத்துவதற்கு Reddit எந்தப் பொறுப்பையும் ஏற்காது, எந்த உத்தரவாதத்தையும் வழங்காது. இந்த விதிமுறைகளில் உள்ள எதுவும், பயனர் உள்ளடக்கத்தில் உங்களுக்கு எந்தவொரு உரிமையையும், பதவியையும் அல்லது நலனையும் வழங்குவதாகக் கருதப்படாது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களால் விதிக்கப்படும் தேவைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்கு இணங்க பயனர் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பாவீர்கள்.

Reddit Embeds பயன்படுத்தும்போதோ அணுகும்போதோ, நீங்கள் இந்த விதிமுறைகளையும், பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். Reddit Embeds பயன்பாடு பின்வரும் கட்டுப்பாடுகள் மற்றும் தேவைகளுக்கும் உட்பட்டது:

  • உங்கள் ஆப்ஸில் பயனர் உள்ளடக்கத்தைக் காட்டுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் Reddit Embeds-ஐப் பயன்படுத்த வேண்டாம்;

  • Reddit-இன் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, எந்தவொரு Reddit சேவைகள் மற்றும் தரவுக்கான அணுகலை விற்பனை செய்வதற்கு Reddit Embeds-ஐப் பயன்படுத்த வேண்டாம்;

  • Reddit Embeds மூலம் உங்கள் ஆப்ஸில் தெரியும் Reddit சேவைகள் மற்றும் தரவின் எந்தவொரு கூறுகளையும் மாற்றவோ, திருத்தவோ, மறைக்கவோ செயலிழக்கச் செய்யவோ வேண்டாம்;

  • Reddit பார்ட்னர்ஷிப், இணைப்பு, ஆதரவு அல்லது ஒப்புதல் இருப்பதாகக் குறிப்பிடும் வகையில் Reddit சேவைகள் மற்றும் தரவை உட்பொதிக்க வேண்டாம்; மற்றும்

  • உரிமையாளர்களின் வெளிப்படையான அனுமதியின்றி, விளம்பரங்களில் பயனர் உள்ளடக்கத்தைக் காட்டவோ எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் அங்கீகரிப்பதாக உணர்த்தவோ Reddit Embeds-ஐப் பயன்படுத்த வேண்டாம்.

Reddit விதிகளின்படி உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகளையோ கோரிக்கைகளையோ நீங்கள் பெற்றால், இந்தக் கோரிக்கைகளை இந்தத் தொடர்புப் படிவத்தின் மூலம் Reddit-க்குத் தெரியப்படுத்த வேண்டும்.

3. மற்றவை

Reddit-இன் டெவலப்பர் விதிமுறைகள், பயனர் ஒப்பந்தம், Press & Broadcast Guidelines மற்றும் பிராண்டு வழிகாட்டுதல்கள் ஒவ்வொன்றும் இந்தக் குறிப்பின் மூலம் இந்த விதிமுறைகளில் இணைக்கப்பட்டு, அவற்றின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். Reddit Embeds-ஐ நீங்கள் தொடர்ந்து அணுகுவது அல்லது பயன்படுத்துவது, திருத்தப்பட்ட இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படும் விதமாக ஒப்புக்கொண்டதாகக் கருதப்படும். நாங்கள் எந்த நேரத்திலும் Reddit Embeds கிடைப்பதை மாற்றலாம், இடைநிறுத்தலாம் அல்லது முடிவுக்குக் கொண்டுவரலாம். மேலும், எங்கள் முழுமையான விருப்பத்தின் பேரில், Reddit Embeds-க்கான உங்கள் அணுகலையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் உரிமை Reddit-க்கு உள்ளது.

⌂ 换网址