
வர்த்தக முத்திரை உபயோகக் கொள்கை
- தமிழ்
- Bahasa Indonesia
- Bahasa Melayu - Malaysia
- Čeština – Česká republika
- Dansk - Danmark
- Deutsch – Deutschland
- English
- Español - España
- Español - México
- Farsi
- Français - France
- Hrvatski – Hrvatska
- Italiano - Italia
- Magyar – Magyarország
- Nederlands - Nederland
- Norwegian Bokmål
- Polski (Polska)
- Português - Brasil
- Português - Portugal
- Română - România
- Slovenčina - Slovensko
- Suomi – Suomi
- Svenska – Sverige
- Tagalog
- Tiếng Việt - Việt Nam
- Türkçe - Türkiye
- Ελληνικά - Ελλάδα
- Български – България
- Русский — Россия
- Српски – Србија
- Українська — Україна
- עברית
- اردو
- العربية
- मराठी
- हिंदी भारत
- বাংলা
- ગુજરાતી
- తెలుగు
- ಕನ್ನಡ
- ไทย
- 한국어 - 대한민국
- 中文 - 繁體
- 日本語 - 日本
- 简体中文
Reddit, உலகில் உள்ள அனைவருக்கும் சமூக உணர்வையும், ஒருமைப்பாட்டையும், அதிகாரமளித்தலையும் கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் செயல்படும்போது, நாங்கள் வளர்ந்து, மக்கள் விரும்பும் விஷயங்களை உருவாக்குகிறோம். இப்படித்தான் நாங்கள் கணிசமான அளவு அறிவுசார் சொத்துகளை உருவாக்கியுள்ளோம். எங்கள் சமூகங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பது போலவே, இவற்றைப் பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இதன் காரணமாக, Reddit-இன் வர்த்தக முத்திரைகள் மற்றும் பிற பிராண்டு சொத்துகளைப் பயன்படுத்த நீங்கள் எங்கள் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும், எங்கள் பிராண்டு வழிகாட்டுதல்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவை உட்பட.
Reddit-இன் வர்த்தக முத்திரைகளின் முழுமையற்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாத எந்தவொரு லோகோ அல்லது தயாரிப்புப் பெயரிலும் உள்ள தனது உரிமைகளை Reddit கைவிடவில்லை.

Reddit-இன் சில வர்த்தக முத்திரைகளை, அந்த வர்த்தக முத்திரையுடன் கூடுதலாக ஒரு பொதுவான சொல்லையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலே பொதுவான சொற்களைப் பரிந்துரைகளாகப் பட்டியலிட்டுள்ளோம், ஆனால் தொடர்புடைய பொருட்கள் அல்லது சேவைகளைத் துல்லியமாக விவரிக்கும் பிற பொதுவான சொற்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
Reddit தனது அறிவுசார் சொத்துகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் கணிசமான வளங்களைச் செலவிடுகிறது, மேலும் Reddit-இன் வர்த்தக முத்திரைகள் உலகெங்கிலும் உள்ள இணையப் பயனர்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எங்களின் வர்த்தக முத்திரைகள், லோகோகள் மற்றும் ஸ்லோகன்களை உலகம் முழுவதும் பதிவு செய்யக் கோருகிறோம். எங்கள் வர்த்தக முத்திரைகள் மற்றும் பிற பிராண்டு சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் அல்லது Reddit சமூகங்களைத் தவறாகச் சித்தரிக்க அல்லது ஆள்மாறாட்டம் செய்ய முயல்பவர்கள் ஆகிய மூன்றாம் தரப்பினருக்கு எதிராகவும் நாங்கள் எங்கள் உரிமைகளை நிலைநாட்டுகிறோம்.
Reddit-இன் வர்த்தக முத்திரைகள் மற்றும் பிற பிராண்டு சொத்துகள் Reddit-க்குச் சொந்தமானவை. நீங்கள் Reddit வர்த்தக முத்திரைகள் மற்றும் பிராண்டு சொத்துகளை, எங்களின் பிராண்டு வழிகாட்டுதல்கள் மற்றும் இந்தக் கொள்கையின்படியோ அல்லது Reddit எழுத்துப்பூர்வமாக அனுமதித்தபடியோ மட்டுமே பயன்படுத்தலாம். நீங்கள் செய்யக்கூடாதவை:
- Reddit-இன் வர்த்தக முத்திரைகள் அல்லது பிராண்டு சொத்துகளில் ஏதேனும் ஒன்றை ஒத்திருக்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதிரியாக இருக்கும் அல்லது அவற்றை உள்ளடக்கிய வர்த்தக முத்திரைகள், வர்த்தகப் பெயர்கள், நிறுவனப் பெயர்கள், பயனர்பெயர்கள் அல்லது டொமைன்களைப் பயன்படுத்துதல், பதிவு செய்தல், அல்லது வேறுவிதமாக உரிமை கோருதல்;
- Reddit உடன் தொடர்பு இருப்பதையோ, அதன் அங்கீகாரத்தையோ, அல்லது அதன் ஆதரவையோ உணர்த்தும் வகையில், Reddit-இன் வர்த்தக முத்திரைகள் அல்லது பிற பிராண்டு சொத்துகளைப் பயன்படுத்துதல்; அல்லது
- Reddit-இன் பயனர் ஒப்பந்தம், Reddit விதிகள் அல்லது பொது உள்ளடக்கக் கொள்கையை மீறும் வகையில், Reddit-இன் வர்த்தக முத்திரைகள் அல்லது பிற பிராண்டு சொத்துக்களைப் பயன்படுத்துதல்.