RedditincReddit Contributor Monetization Policy_Logo_About Page@2x

Reddit வருமானம் ஈட்டல் கொள்கை

செப்டம்பர் 24, 2024 முதல் அமலுக்கு வருகிறது. கடைசியாகத் திருத்தப்பட்டது செப்டம்பர் 24, 2024

Reddit-இன் வருமானம் ஈட்டும் திட்டங்கள், தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவர்கள் Reddit-இல் மேற்கொள்ளும் தகுதியான செயல்பாடுகளுக்காகப் பணத்தைப் பெற அனுமதிக்கின்றன. பணம் சம்பாதிப்பதற்கு,  வருமானம் ஈட்டல் விதிமுறைகள் மற்றும் வருமானம் ஈட்டல் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள தகுதித் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

Reddit-இல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களைப் போலவே, வருமானம் ஈட்டக்கூடிய உள்ளடக்கமும் Reddit-இன்  பயனர் ஒப்பந்தம் ,  Reddit விதிகள் ஆகியவற்றுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். Reddit-இன் விதிகளை மீறும் உள்ளடக்கத்திற்கு எதிராக தகுந்த அமலாக்க நடவடிக்கைகளை எடுப்போம், அத்துடன் Reddit விதிகள், இந்த வருமானம் ஈட்டல் கொள்கை அல்லது . வருமானம் ஈட்டல் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் நிறுத்தி வைப்போம்.

தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவர்

வருமானம் ஈட்டும் திட்டத்தில் வருமானம் ஈட்டுபவராக உங்கள் கணக்கு தகுதிபெற, Reddit பின்வருவனவற்றைக் கோருகிறது:

தகுதியற்ற உள்ளடக்கம்

Reddit முழுவதும் சமூக உறுப்பினர்களின் சிறந்த பங்களிப்புகளுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவர்கள், தகுதிபெறும் Devvit ஆப்ஸ் உட்பட பெரும்பாலான உள்ளடக்க வடிவங்களில் பணம் சம்பாதிக்க நாங்கள் அனுமதிக்கிறோம்.

Reddit-இல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் Reddit-இன் Reddit விதிகள் ,  பயனர் ஒப்பந்தம் (அதாவது எங்கள் விதிகள்) ஆகியவற்றுக்கு இணங்க வேண்டும். தகுதிபெற்ற ஒருவரின் படைப்புக்கு விருது வழங்கப்பட்டு, அது எங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால், அவர் வருமானம் ஈட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பே-அவுட் பெறுவதற்குத் தகுதி பெறலாம்.

இருப்பினும், உள்ளடக்கம் தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட, சில தலைப்புகளுக்குப் பணப் பே-அவுட்கள் பெறுவதற்குத் தகுதி பெறுவதில்லை. தொடர்புடைய வருமானம் ஈட்டும் திட்டத்தின் விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, பதிவிடும் நேரத்தில் அல்லது பே-அவுட்டிற்கு முன்னர் எந்த நேரத்திலும் பின்வரும் தன்மைகளைக் கொண்ட எந்தவொரு உள்ளடக்கத்திற்கும் Reddit இழப்பீடு வழங்காது:

  • தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்தில் பதிவிடப்படுதல்

  • 18+ (18+) எனக் குறியிடப்பட்டிருந்தாலோ 18+ எனக் குறியிடப்பட்ட ஒரு சமூகத்தில் பதிவிடப்பட்டிருந்தாலோ
    • குறிப்பு: 18+ சமூகத்தில் நிறுவப்பட்ட Devvit ஆப்ஸானது வருமானம் ஈட்டல் கொள்கை மற்றும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் கீழ் வருமானம் ஈட்ட தகுதி பெற்றிருந்தால், அந்த Devvit ஆப்ஸும் (அதன் உள்ளடக்கம் மற்றும் Devvit ஆப்ஸ் சார்ந்த பொருட்கள்) வருமானம் ஈட்ட தகுதியுடையதாக இருக்கலாம்.

  • நிர்வாணம், வெளிப்படையான அல்லது மறைமுகமான பாலியல் செயல்பாடு, பாலியல் பொருட்கள், பாலியல் பொழுதுபோக்கு அல்லது பாலியல் சேவைகள் உட்பட பாலியல் ரீதியாக வெளிப்படையானதாகவோ பாலியல் உணர்வைத் தூண்டுவதாகவோ இருப்பது. பாலியல் அல்லது தூண்டுதல் தரும் டிஜிட்டல் அல்லது அனிமேஷன் உள்ளடக்கத்திற்கும், அத்துடன் பாலியல் உள்ளடக்கத்திற்குத் திசைதிருப்பும் இணைப்புகளுக்கும் இது பொருந்தும்.
    • பாலியல் அல்லாத நிர்வாணம் தொடர்பான உள்ளடக்கங்களுக்கு (எ.கா., தாய்ப்பால் ஊட்டுதல், பாலியல் சுகாதாரக் கல்வி அல்லது கல்விசார் ஆராய்ச்சி) நாங்கள் விதிவிலக்குகளைப் பரிசீலிக்கலாம்.

  • போர் அல்லது இராணுவ மோதல்களின் அதிர்ச்சி தரும் கிராஃபிக் காட்சிகள் உட்பட, வன்முறை, மரணம், கடுமையான உடல் காயம் அல்லது உறைந்த இரத்தத்தைச் சித்தரித்தல் அல்லது ஊக்குவித்தல்.
    • விதிவிலக்குகள்: தொழில்முறைச் சண்டை விளையாட்டுகளைச் சித்தரிக்கும் உள்ளடக்கம், புனைவு சார்ந்த பொழுதுபோக்கு, அனிமேஷன் அல்லது டிஜிட்டல் உள்ளடக்கம் (எ.கா., வீடியோ கேம்கள்) அல்லது சில சமயங்களில், செய்தித்தன்மை வாய்ந்த உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.

  • பின்வரும் வகையான பொருட்கள் அல்லது சேவைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது:
    • போதைப்பொருட்கள் (பொழுதுபோக்குக்காக வாங்கப்படுபவை, மருத்துவரின் பரிந்துரைப்படி அல்லது பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்கப்படுபவை), மது, புகையிலை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிற பொருட்கள்.

    • துப்பாக்கிகள், துப்பாக்கி பாகங்கள், துணைக்கருவிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள்

    • போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கல் அல்லது போட்டியில் பங்கேற்பதற்கான சலுகைகள் உள்ளிட்ட சூதாட்டம் அல்லது லாட்டரிச் சேவைகள்.

  • கோருதல், ஊக்குவித்தல் அல்லது வழங்குதல்:
    • ஏமாற்றும் பணம்/கிரிப்டோவில் சம்பாதிக்கும் சேவைகள், திட்டங்கள் அல்லது உறுப்பினர் திட்டங்கள் (எ.கா., "விரைவில் பணக்காரர் ஆகும்" திட்டங்கள்)

    • ஒரு தொண்டு நிறுவனம் அல்லது அரசியல் நோக்கம், பிரச்சாரம் அல்லது நிறுவனத்திற்கு அளிக்கப்படும் பேமெண்ட்கள் அல்லது நன்கொடைகள்

    • சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும்/ஆபத்தான நடத்தையில் ஈடுபடுதல்.

அமலாக்கம்

ஒரு வருமானம் ஈட்டும் திட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கு, மேலே பட்டியலிடப்பட்டுள்ள மற்றும்  வருமானம் ஈட்டல் விதிமுறைகளுடன் பொருந்தக்கூடிய தேவைகளுக்கு நீங்கள் இணங்கி நடக்க வேண்டும்.

நீங்கள் வருமானம் ஈட்டுபவராக இருப்பதற்கான தகுதிகளை இனி பூர்த்தி செய்யவில்லை என்பதை Reddit அறிந்துகொண்டால், உங்களால் இனி வருமானத் திட்டத்தில் பங்கேற்க முடியாது, மேலும் Reddit-இல் பணம் சம்பாதிக்கும் உங்கள் திறனை நாங்கள் இடைநிறுத்துவோம் அல்லது நிரந்தரமாக அகற்றிவிடுவோம். நீங்கள் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை எப்போது நிறுத்தினீர்கள் என்பதைப் பொறுத்து, இதுவரை வழங்கப்படாத எதிர்கால மற்றும் கடந்தகால வருமானங்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

பொருந்தக்கூடிய திட்டத்தின் வருமானம் ஈட்டும் தகுதித் தேவைகளை மீறுவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு பங்களிப்பு, Devvit ஆப்ஸ் அல்லது பிற செயல்பாட்டிற்கும், நாங்கள் ஈட்டிய வருமானத்தின் பே-அவுட்டை நிறுத்தி வைப்போம், மேலும் தேவைக்கேற்ப கூடுதல் அமலாக்க நடவடிக்கைகளையும் எடுக்கலாம். மேலும், நீங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தின் தேவைகளை தொடர்ச்சியாக மீறினால், வருமானத் திட்டங்களில் உங்கள் பங்கேற்பைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம். ஏதேனும் ஒரு திட்டத்தின் தேவைகளைத் தீவிரமாக மீறினால் (உதாரணமாக, உங்களுக்கு நீங்களே சந்தேகத்திற்கிடமான வகையில் விருதுகளையோ கோல்டையோ வழங்கிக்கொள்வது), அந்தத் திட்டத்தில் உங்கள் பங்கேற்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாங்கள் பரிசீலிக்கக்கூடும்.

⌂ 换网址