
மாடரேட்டர் நடத்தை விதிகள்
- தமிழ்
- Bahasa Indonesia
- Bahasa Melayu - Malaysia
- Čeština – Česká republika
- Dansk - Danmark
- Deutsch – Deutschland
- English
- Español - España
- Español - México
- Farsi
- Français - France
- Hrvatski – Hrvatska
- Italiano - Italia
- Magyar – Magyarország
- Nederlands - Nederland
- Norwegian Bokmål
- Polski (Polska)
- Português - Brasil
- Português - Portugal
- Română - România
- Slovenčina - Slovensko
- Suomi – Suomi
- Svenska – Sverige
- Tagalog
- Tiếng Việt - Việt Nam
- Türkçe - Türkiye
- Ελληνικά - Ελλάδα
- Български – България
- Русский — Россия
- Српски – Србија
- Українська — Україна
- עברית
- اردو
- العربية
- मराठी
- हिंदी भारत
- বাংলা
- ગુજરાતી
- తెలుగు
- ಕನ್ನಡ
- ไทย
- 한국어 - 대한민국
- 中文 - 繁體
- 日本語 - 日本
- 简体中文
ஜூன் 5, 2025 முதல் அமலில் உள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமூகம், சார்ந்திருக்கும் உணர்வு, அதிகாரம் ஆகியவற்றைக்கொண்டு சேர்ப்பதே Reddit-இன் குறிக்கோளாகும். இதைச் சாத்தியமாக்குவதில் மாடரேட்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்: ரெடிட்டர்களுக்காக வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய தளங்களை உருவாக்க, உங்கள் படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன் மற்றும் உணர்ச்சியைப் பயன்படுத்தி முன்னணியில் செயல்படுகிறீர்கள். மாடரேட்டர் நடத்தை விதிகள், மாடரேட்டர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பவற்றைத் தெளிவுபடுத்தவும், உங்கள் சமூகங்களை உருவாக்க மற்றும் வளர்ப்பதற்கான சப்ரெடிட் விதிகள் மற்றும் நெறிமுறைகளை வகுக்க உங்களுக்கு உதவவும், எளிதாக முடிவுகளை எடுப்பதற்கான நம்பிக்கையைக் கொடுக்கவும் பயன்படுகின்றன.
நேர்மறையான சமூக அனுபவத்தை வழங்குவதில் மாடரேட்டராக உங்கள் பங்கு முக்கியமானது. நீங்கள் புதிதாக மாடரேட் செய்பவராக இருந்தாலும் சரி அல்லது பல ஆண்டுகளாக மாடரேட் செய்து வந்தாலும் சரி, நீங்கள் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் உணர்வதை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும்.
மாடரேட்டர்கள் Reddit விதிகளை நிலைநிறுத்தவும் Reddit-இன் பயனர் ஒப்பந்தத்தை (குறிப்பாக பிரிவு 8) கடைப்பிடிக்கவும் வேண்டும் என்றும், தங்கள் சமூகங்களில் உள்ள விதிகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கும் அது குறித்துப் புகாரளிப்பதற்கும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தனிப்பட்ட மாடரேட்டரின் செயல்பாடுகளுக்கு உங்கள் சப்ரெடிட்டும் மாடரேட்டர் குழுவும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இதைக் கருதி, மாடரேட்டர் நடத்தை விதிகளைப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்றுவதற்கு, சக மாடரேட்டர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவது முக்கியம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
TL;DR: கீழே உள்ள விதிமுறைகளை நீங்கள் பின்பற்றினால், உங்கள் விஷயங்களில் தலையிட மாட்டோம். இல்லையெனில், பிரச்சனைகளைச் சரிசெய்ய நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.
விதி 1: நிலையான சமூகத்தை உருவாக்குதல், அதை ஆதரித்தல் மற்றும் பராமரித்தல்
எங்கள் தளக் கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய சமூக விதிகள், நடைமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைப்பதன் மூலம், Reddit விதிகளை மாடரேட்டர்கள் நிலைநிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாடரேட்டராக, நீங்கள் எங்கள் விதிமுறைகளையும் Reddit-இன் விதிகளையும் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அவற்றைக் கடைப்பிடிக்கும் சமூகத்தை உருவாக்கவும் தீவிரமாக முயல வேண்டும். அதாவது, விதிகளை மீறும் வகையிலான உள்ளடக்கம் அல்லது நடத்தையை நீங்கள் ஒருபோதும் உருவாக்கவோ, அனுமதிக்கவோ, செயல்படுத்தவோ, ஊக்குவிக்கவோ கூடாது. உங்கள் சப்ரெடிட்டில் Reddit விதிகளுக்கு உட்பட்ட உள்ளடக்கம் இதோ (ஆனால் இவை மட்டுமே அல்ல):
- பதிவுகள்
- கருத்துகள்
- அடையாளக் குறிச்சொற்கள்
- விதிகள்
- Wiki பக்கங்கள்
- ஸ்டைலிங்
- மாடரேட்டர் மெயில்கள்
- பாட்கள், ஆட்டோமேஷன்கள், மற்றும்/அல்லது ஆப்ஸ்
- பிற மாடரேட்டர் கருவிகள்
விதி 2: பொருத்தமான மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை அமைத்தல்
உங்கள் சமூகத்தில் இணையும் பயனர்களுக்கு எதில் இணைகிறார்கள் என்று தெளிவாக தெரிய வேண்டும், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் ஆச்சரியமூட்டுவதாக இருக்கக்கூடாது. ரெடிட்டர்களிடையே நிலையான மற்றும் துடிப்பான ஈடுபாட்டை உருவாக்க, உங்கள் சமூகம் எத்தகையது மற்றும் அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து வெளிப்படையாக இருப்பது மிக முக்கியம். பின்வருபவற்றைச் செய்வதன் மூலம், Reddit-இல் மக்கள் கணிக்கக்கூடிய வகையிலான அனுபவங்களைப் பெறுவதை மாடரேட்டர்களால் உறுதிசெய்ய முடியும்:
- உங்கள் சமூகத்தால் விவாதிக்கப்படும் தலைப்பு(கள்) பற்றிய தெளிவான மற்றும் சுருக்கமான விளக்கத்தை வழங்குதல்.
- உங்கள் சமூகத்தையும் சக மாடரேட்டர்களையும் மதித்தல். உங்கள் சமூகம் காலப்போக்கில் மாறக்கூடும், ஆனால் அதை நிலையானதாகவும் பயன்படுத்தக்கூடியதாகவும் வைத்திருக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
- உள்ளடக்கம் மற்றும் சமூகங்களை, குறிப்பாக மெச்சூர்/18+ வயதுடையவர்களுக்கான உள்ளடக்கத்தை (எ.கா. பாலியல் ரீதியாக வெளிப்படையானவை) துல்லியமாக லேபிளிடுதல்.
- உங்கள் சமூகத்தின் உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பவற்றைத் தெளிவாக வரையறுக்கும் விதிகளை உருவாக்குதல்.
- உங்கள் சமூகத்தின் தலைப்பு ஒரு பிராண்டு அல்லது நிறுவனத்தைச் சார்ந்ததாக இருந்து, அந்த நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமான தொடர்பு ஏதும் இல்லையென்றால், உங்கள் சமூகம் "அதிகாரப்பூர்வமானது அல்ல" என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுதல்.
- உங்கள் சமூகத்தின் தலைப்பு ஒரு பிராண்டு அல்லது நிறுவனத்தைச் சார்ந்ததாக இருந்து, அந்த நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமான தொடர்பு இருந்தால், உங்கள் சமூகம் "அதிகாரப்பூர்வமானது" என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுதல்.
விதி 3 - உங்களைச் சுற்றி உள்ளோரை மதித்தல்
Reddit மற்றும் பிற சப்ரெடிட்கள் குறித்த பொதுவான விவாதங்களை நாங்கள் அனுமதித்தாலும், பிற சமூகங்களில் தலையிடுவதற்கோ அங்குள்ள ரெடிட்டர்களைத் துன்புறுத்துவதற்கோ உங்கள் சமூகத்தைப் பயன்படுத்தவோ, அத்தகைய செயல்களை ஒருங்கிணைக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது. ஒரு மாடரேட்டராக, நீங்கள் Reddit சமூகங்களில் தலையிடவோ அவற்றின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கவோ கூடாது; அத்துடன், உங்கள் சமூக உறுப்பினர்கள் அவ்வாறு செய்வதை எளிதாக்குவது, ஊக்குவிப்பது, ஒருங்கிணைப்பது, அதற்கு வழிவகுப்பது ஆகியவற்றையும் நீங்கள் செய்யக்கூடாது.
தலையீட்டில் அடங்குபவை:
- குறிப்பிட்ட துன்புறுத்தல் அல்லது நிந்தனையைத் தூண்டும் வகையில், பிற சமூகங்களையும், மற்றும்/அல்லது அந்த சமூகங்களில் உள்ள உள்ளடக்கம் அல்லது பயனர்களையும் குறிப்பிடுதல்.
- Reddit தளத்தில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் Reddit விதிகளை மீறுமாறு பயனர்களை அனுமதித்தல் அல்லது ஊக்குவித்தல்.
- உங்கள் சமூகத்தில் உள்ள பயனர்களை, பிற சமூகங்களில் அவர்களின் விதிகளுக்கு வெளிப்படையாகவே எதிராக உள்ள உள்ளடக்கத்தை பதிவிடவோ மறுபதிவிடவோ அனுமதித்தல் அல்லது ஊக்குவித்தல்.
- எதிர்மறையான விளைவுகளைத் தூண்டும் நோக்கத்துடன், பிற சமூகங்களில் பயனர்களைத் தடைசெய்வதையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையோ காண்பிக்கும் உள்ளடக்கத்தை அனுமதித்தல் அல்லது ஊக்குவித்தல்.
விதி 4 - சுறுசுறுப்பாகவும் ஈடுபாட்டுடனும் இருத்தல்
உங்கள் சமூகம் பெரியதோ சிறியதோ, அது தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாடரேட் செய்யப்படுவது முக்கியம். பிரச்சனைகள் தீர்க்கப்படுவதை இது உறுதிசெய்யும், அதனால் ரெடிட்டர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். தீவிரமாகவும் ஈடுபாட்டுடனும் இருப்பது பின்வருபவற்றைக் குறிக்கிறது:
- உங்கள் சமூகத்தைத் திறம்படவும் சீராகவும் நிர்வகிக்க உங்களிடம் போதுமான மாடரேட்டர்கள் உள்ளனர். இதில் மாடரேஷன் வரிசை, மாடரேட்டர் மெயில் ஆகியவற்றில் உள்ள உள்ளடக்கத்தை முறையாகக் கண்காணித்து கையாள்வதும், முடிந்தால் பதிவுகள், கருத்துகள், வாக்களித்தல் ஆகியவற்றின் மூலம் உங்கள் சமூகத்துடன் தீவிரமாகத் தொடர்புகொள்வதும் அடங்கும்.
- சமூகத்தில் எதுவும் செய்யாமல் வெறுமனே இருப்பது ஊக்கப்படுத்தப்படுவதில்லை.
விதி 5 - நேர்மையுடன் மாடரேட் செய்தல்
சமூகங்களில் உள்ள உள்ளடக்கம் நம்பகமானதாக இருக்க வேண்டும் என்று பயனர்கள் எதிர்பார்க்கிறார்கள்; அத்துடன், சமூகம் மற்றும் முழுத் தளத்திற்கான விதிமுறைகளின் அடிப்படையில் உள்ளடக்கம் குறித்த முடிவுகளை மாடரேட்டர்கள் எடுக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையைப் பேணிக்காக்கும் பொருட்டு, மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ அவர்கள் சார்பாகவோ வழங்கப்படும் சன்மானம், பிரதிபலன், கிஃப்ட் அல்லது சலுகைக்காக மாடரேட்டர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளையும் (மாடரேட்டர் கருவிகள், பாட்கள் மற்றும் பிற சேவைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உட்பட) மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாடரேட்டர் நடவடிக்கைகளுக்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ (ஆனால் இவை மட்டுமே அல்ல):
- பயனர்களைத் தடைசெய்தல் அல்லது தடையை நீக்குதல்
- ‘அனுமதிக்கப்பட்ட பயனர்’ நிலையை வழங்குதல்
- உள்ளடக்கத்தை அகற்றுதல் அல்லது அனுமதித்தல்
- சைடுபார்கள், விட்ஜெட், wikiகள் அல்லது பிற ஸ்டைலிங்கில் திருத்தங்கள்
- அடையாளக் குறிச்சொற்களை வழங்குதல்
- சப்ரெடிட்டில் அங்கீகரிக்கப்பட்ட சமர்ப்பிப்பாளர் நிலையை அல்லது பதிவிடுவதற்கான அணுகலை வழங்குதல்
- சமூகத்தில் "விளம்பர இடத்தை" உருவாக்குதல், அதாவது கட்டணத்திற்காகப் பதிவுகளைப் பின் செய்ய முன்வருவது அல்லது மூன்றாம் தரப்புக்காக விளம்பரம் செய்ய சப்ரெடிட் ஸ்டைலிங்கைப் பயன்படுத்த முன்வருவது போன்றவை
- மாடரேட்டர் அழைப்புகளை அனுப்புதல் அல்லது சப்ரெடிட்டின் உரிமையை மாற்றுதல்
சன்மானத்திற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ (ஆனால் இவை மட்டுமே அல்ல):
- நிதிசார் பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகள் (எ.கா., பேமெண்ட்டுகள், NFTகள், பங்குகள், கிஃப்ட் கார்டுகள்)
- வாங்கக்கூடிய Reddit பொருட்கள்மற்றும்/அல்லது சேவைகள் (எ.கா., Premium, கோல்டு, கலெக்டிபிள் அவதார்கள்)
- பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகள் (எ.கா., விற்பனைப் பொருட்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணங்கள், கோரப்பட்ட பொருட்கள்)
- பரிசீலனைகள் மற்றும்/அல்லது சலுகைகள் (எ.கா., ஒரு நிறுவனத்திடமிருந்து சிறப்புப் பாராட்டுகள், சிறப்புக் கவனிப்புக்கான வாக்குறுதிகள்)
- தனிப்பட்ட சேவைகள் அல்லது உள்ளடக்கத்திற்கான அணுகல் (எ.கா., சந்தாக்கள், பிரத்தியேக உள்ளடக்கம்)
எந்தவொரு சன்மானமும் பெறப்படாத வரையில், மூன்றாம் தரப்பினருடனான நிகழ்வுகள் மற்றும் சந்திப்புகள், உங்கள் சப்ரெடிட்டில் ஒரு பிராண்டு அல்லது நிறுவனத்தின் செயல்பாடு, ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் சப்ரெடிட்டைத் தொடங்குவது மற்றும்/அல்லது பராமரிப்பது ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன.
மாடரேட்டர் நடத்தை விதிகள்: அமலாக்கம்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமின்றி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உங்களுடன் இணைந்து செயல்பட முயற்சிப்போம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரிசெய்தல் நடவடிக்கைகளுக்குப் பதிலாகக் கலந்துரையாடல் மூலமாகவே நாம் தீர்வையும் புரிதலையும் அடைய முடியும்.
நீங்கள் மாடரேட்டர் நடத்தை விதிகளை மீறிவிட்டீர்கள் என்று ஒரு நிர்வாகி உங்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், உங்கள் ஒத்துழைப்பும் உடனடிப் பதிலளிப்பும் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவும். சமூக விதிகளைப் புதுப்பித்தல், தீவிரமான மாடரேஷன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கூடுதல் மாடரேட்டர்களைச் சேர்த்தல் போன்றவற்றின் மூலம் பல பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்க முடியும். கேள்விகளைக் கேளுங்கள், பதில்களைப் பெறுங்கள்.
கல்விசார் அணுகுமுறைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்று கண்டறிந்தாலோ, மாடரேட்டர்கள் ஒத்துழைக்க அல்லது CoC-ஐப் பின்பற்ற மறுத்தாலோ பின்வரும் அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கக்கூடும்:
- எச்சரிக்கைகளை வழங்குதல்
- விதியை மீறும் உள்ளடக்கம் அல்லது சப்ரெடிட் ஸ்டைலிங்கை அகற்றுதல்
- சமூகத்திலிருந்து மாடரேட்டர்களை அகற்றுதல்
- 18+ குறியிடல்கள், ஸ்பேம் ஃபில்டர், பிற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் போன்ற கருவிகளுக்கான அணுகல் அல்லது சப்ரெடிட் அமைப்புகளைச் சரிசெய்தல்
- புதிய மாடரேட்டர்களைத் தேடுதல் அல்லது சமூகத்தை ஏற்று நடத்த அனுமதித்தல்
- ஒரு மாடரேட்டர் கூடுதல் மாடரேட்டர் குழுக்களில் சேர்வதையோ புதிய சப்ரெடிட்களை உருவாக்குவதையோ தடை செய்தல்
- கணக்குகளிலிருந்து சிறப்புரிமைகளை அகற்றுதல் அல்லது அவற்றில் கட்டுப்பாடுகளைச் சேர்த்தல்
- தற்காலிக அல்லது நிரந்தரக் கணக்கு இடைநீக்கங்கள்
- சமூகங்களைத் தடைசெய்தல்
மாடரேட்டர் வளங்கள்
சமூகத்தை மாடரேட் செய்வது சவாலானதாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். வலுவான, நிலையான சமூகத்தை உருவாக்குவதில் கீழே உள்ள வளங்கள் உங்களுக்குப் பெரிதும் உதவும்:
- Reddit-இன் மாடரேட்டர் உதவி மையம்
- மாடரேட்டர்களுக்கான சமூகங்கள்
- மாடரேட்டர்களுக்கான திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகள்
- r/ModSupport: இது Reddit நிர்வாகிகளுடன் பிரச்சனைகளை விவாதிக்க மாடரேட்டர்களுக்கு தொடர்புப் புள்ளியாகச் செயல்படும் அதிகாரப்பூர்வமான சமூகம் ஆகும், பெரும்பாலும் இவை மாடரேட்டர் கருவிகள் தொடர்பாக இருக்கும்.
- சமூகத்திற்கான Reddit
மாடரேட்டர் நடத்தை விதிகள் குறித்துப் புகாரளிக்க இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.