
Reddit பயனர் ஒப்பந்தம்
- தமிழ்
- Bahasa Indonesia
- Bahasa Melayu - Malaysia
- Čeština – Česká republika
- Dansk - Danmark
- Deutsch – Deutschland
- English
- Español - España
- Español - México
- Farsi
- Français - France
- Hrvatski – Hrvatska
- Italiano - Italia
- Magyar – Magyarország
- Nederlands - Nederland
- Norwegian Bokmål
- Polski (Polska)
- Português - Brasil
- Português - Portugal
- Română - România
- Slovenčina - Slovensko
- Suomi – Suomi
- Svenska – Sverige
- Tagalog
- Tiếng Việt - Việt Nam
- Türkçe - Türkiye
- Ελληνικά - Ελλάδα
- Български – България
- Русский — Россия
- Српски – Србија
- Українська — Україна
- עברית
- اردو
- العربية
- मराठी
- हिंदी भारत
- বাংলা
- ગુજરાતી
- తెలుగు
- ಕನ್ನಡ
- ไทย
- 한국어 - 대한민국
- 中文 - 繁體
- 日本語 - 日本
- 简体中文
நடைமுறைக்கு வரும் நாள்: ஜூலை 1, 2026. கடைசியாகத் திருத்தப்பட்டது: மே 26, 2026
Reddit நூறாயிரக்கணக்கான தனித்துவமான ஆன்லைன் சமூகங்களை இயங்கச் செய்கிறது. இந்தப் பயனர் ஒப்பந்தமும் உங்கள் நடத்தையுமே அதைச் சாத்தியமாக்குகின்றன.
-
நீங்கள் அமெரிக்காவிலோ ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (“EEA”), ஐக்கிய இராச்சியம் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு வெளியிலோ வசித்தால், உங்களுக்கான விதிமுறைகள் இங்கே உள்ளன.
-
நீங்கள் EEA, ஐக்கிய இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்தில் வசித்தால், உங்களுக்கான விதிமுறைகள் இங்கே உள்ளன.
நீங்கள் அமெரிக்காவில் அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA), ஐக்கிய இராச்சியம் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு வெளியே வசிப்பவராக இருந்தால் Reddit பயனர் ஒப்பந்தம்
வணக்கம், ரெடிட்டர்களே மற்றும் இணைய மக்களே! இந்த Reddit பயனர் ஒப்பந்தமானது (“விதிமுறைகள்”), Reddit, Inc. (“Reddit,” “நாங்கள்,” “எங்களை,” அல்லது “எங்களது”) வழங்கும் வலைத்தளங்கள், மொபைல் ஆப்ஸ், விட்ஜெட்டுகள், APIகள், ஈமெயில்கள், பிற ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை (ஒட்டுமொத்தமாக, “சேவைகள்”) நீங்கள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தும்.
Reddit என்பது மகிழ்ச்சிக்காக உருவான ஒரு தளம் மற்றும் உங்கள் பொழுதுபோக்கிற்காகவே அமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இருப்பினும் நமக்கு சில அடிப்படை விதிகள் தேவைப்படுகின்றன. எங்கள் சேவைகளை அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், எங்கள் சேவைகளை நீங்கள் அணுகவோ பயன்படுத்தவோ கூடாது
1. சேவைகளுக்கான உங்கள் அணுகல்
13 வயதுக்குட்பட்ட எவரும் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தவோ அணுகவோ அனுமதி இல்லை. எங்கள் சேவைகளின் சில பகுதிகளைப் பயன்படுத்த நீங்கள் கூடுதல் வயதுடையவராக இருக்க வேண்டும். உதாரணமாக, Reddit-இல் வயதுவந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்க்க உங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். நீங்கள் சேவைகளை அணுகும்போது, அனைத்து அறிவிப்புகளையும் கூடுதல் விதிமுறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் கவனமாகப் படியுங்கள்.
இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகிறீர்கள்:
- நீங்கள் சேவைகளை அணுகவும் பயன்படுத்தவும், உங்களுக்குக் குறைந்தபட்சம் 13 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் மற்றும் நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களின்படி தேவையான குறைந்தபட்ச வயதை அடைந்திருக்க வேண்டும்;
- நீங்கள் Reddit-உடன் சட்டப்படி கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தகுதியானவர் அல்லது நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவராகவும் ஆனால் உங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட சட்டப்பூர்வ வயதை எட்டாதவராகவும் இருந்தால், உங்கள் சட்டப்பூர்வப் பாதுகாவலர் இந்த விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து அவற்றுக்கு ஒப்புக்கொண்டுள்ளார்;
- பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டத்தின் கீழும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை; மற்றும்
- நீங்கள் இந்தச் சேவைகளிலிருந்து நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கவோ நீக்கப்பட்டிருக்கவோ இல்லை.
ஒரு பிசினஸ் அல்லது அரசு நிறுவனம் உட்பட மற்றொரு சட்டப்பூர்வ அமைப்பின் சார்பாக நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அந்த அமைப்பை இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்துவதற்கான முழு சட்டப்பூர்வ அதிகாரமும் உங்களுக்கு உள்ளது என்பதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.
2. தனியுரிமை
Reddit-இன் தனியுரிமைக் கொள்கையானது, நீங்கள் எங்கள் சேவைகளை அணுகும்போதோ பயன்படுத்தும்போதோ உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு, ஏன் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பதை விளக்குகிறது. சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி இந்தத் தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.
3. சேவைகளுக்கான உங்கள் பயன்பாடு
இந்த விதிமுறைகளை நீங்கள் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் இணங்குவதற்கு உட்பட்டு, Reddit உங்களுக்கு பின்வருவனவற்றிற்கான தனிப்பட்ட, மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற, திரும்பப் பெறக்கூடிய, வரையறுக்கப்பட்ட உரிமத்தை வழங்குகிறது: (அ) உங்களுக்குச் சொந்தமான அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் சாதனத்தில் முறையான மார்க்கெட்பிளேஸிலிருந்து பெறப்பட்ட எங்கள் சேவைகளுடன் தொடர்புடைய மொபைல் ஆப்ஸின் ஒரு நகலை நிறுவிப் பயன்படுத்துவது; மற்றும் (ஆ) சேவைகளை அணுகிப் பயன்படுத்துவது. இந்த விதிமுறைகளால் உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளையும் நாங்கள் தக்கவைத்துக்கொள்கிறோம்.
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் இத்தகைய கட்டுப்பாடு அனுமதிக்கப்படாத பட்சத்திலும், அந்த அளவிற்கு மட்டுமே தவிர, எங்கள் எழுத்துப்பூர்வ உடன்பாடு இல்லாமல் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது:
- சேவைகள் அல்லது உள்ளடக்கத்திற்கு உரிமம் வழங்குதல், விற்பனை செய்தல், மாற்றுதல், ஒப்படைத்தல், விநியோகித்தல், ஹோஸ்ட் செய்தல் அல்லது பிற வழிகளில் பிசினஸ் ரீதியாகப் பயன்படுத்துதல்;
- சேவைகள் அல்லது உள்ளடக்கத்தின் எந்தவொரு பகுதியையும் மாற்றியமைத்தல், அவற்றின் அடிப்படையில் புதியவற்றை உருவாக்குதல், பிரித்தல், டீகம்பைல் செய்தல் அல்லது ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்தல்; அல்லது
- கூடுதல் விதிமுறைகளின் கீழ் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) அனுமதிக்கப்பட்டதைத் தவிர, இதற்கு இணையான அல்லது போட்டியான ஒரு வலைத்தளம், தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்குவதற்காக இந்தச் சேவைகளையோ உள்ளடக்கத்தையோ அணுகுதல்.
நாங்கள் எங்கள் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். இதன் பொருள், நாங்கள் புதிய அம்சங்கள், தயாரிப்புகள் அல்லது செயல்பாடுகளைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்; இதுகுறித்து உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க முயற்சிப்போம், ஆனால் அது எப்போதுமே சாத்தியமாகாது. எந்த நேரத்திலும், முன்னறிவிப்புடனோ முன்னறிவிப்பு இல்லாமலோ, சேவைகளை (முழுமையாகவோ பகுதியாகவோ) மாற்றியமைக்க, இடைநிறுத்த அல்லது நிறுத்த எங்களுக்கு உரிமை உண்டு. சேவைகளில் எதிர்காலத்தில் வெளியிடப்படும், புதுப்பிக்கப்படும் அல்லது சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் அனைத்தும், அவ்வப்போது புதுப்பிக்கப்படக்கூடிய இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும். சேவைகள் அல்லது அவற்றின் ஏதேனும் ஒரு பகுதியில் செய்யப்படும் மாற்றங்கள், இடைநிறுத்தம் அல்லது நிறுத்தத்திற்கு, உங்களுக்கோ வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கோ நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
சேவைகளில் உங்கள் செயல்பாடு, நீங்கள் இணைந்திருக்கும் சமூகங்கள் மற்றும் உங்கள் அமைப்புகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விருப்பத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், சேவைகளில் உங்கள் அனுபவத்தை நாங்கள் தனிப்பயனாக்குகிறோம். இவற்றின் அடிப்படையிலும் பிற காரணிகளின் அடிப்படையிலும், Reddit-இல் உங்கள் அனுபவத்தை மேலும் பொருத்தமானதாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை நாங்கள் வழங்கலாம். உங்கள் உள்ளடக்கப் பரிந்துரைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும், சில தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதற்கான விளக்கத்திற்கும், எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.
4. உங்கள் Reddit கணக்கு மற்றும் கணக்குப் பாதுகாப்பு
எங்கள் சேவைகளின் சில அம்சங்களைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு Reddit கணக்கை (“கணக்கு”) உருவாக்கி, ஒரு பயனர்பெயர், பாஸ்வேர்டு மற்றும் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்களைப் பற்றிய குறிப்பிட்ட பிற தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டியிருக்கலாம்.
உங்கள் கணக்குடன் தொடர்புடைய தகவல்களுக்கும் உங்கள் கணக்கு தொடர்பாக நடக்கும் எதற்கும் நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பாவீர்கள். உங்கள் கணக்கின் பாதுகாப்பை நீங்கள் பராமரிக்க வேண்டும். மேலும் உங்கள் அனுமதியின்றி யாராவது உங்கள் கணக்கை அணுகியிருப்பதை நீங்கள் கண்டறிந்தாலோ சந்தேகித்தாலோ, உடனடியாக Reddit-க்குத் தெரிவிக்க வேண்டும். உங்கள் கணக்கிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வலுவான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும், இரு காரணி அங்கீகாரத்தை இயக்கவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் கணக்கில் மொபைல் எண்ணைச் சேர்த்துவிட்டு, பின்னர் அதை மாற்றினாலோ முடக்கினாலோ, உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும்.
எங்களின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி உங்கள் கணக்கிற்கு உரிமம் வழங்கவோ விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது.
5. உங்கள் உள்ளடக்கம்
சேவைகளில் தகவல்கள், உரை, இணைப்புகள், கிராபிக்ஸ், படங்கள், வீடியோக்கள், ஆடியோ, ஸ்ட்ரீம்கள், மென்பொருள், கருவிகள் அல்லது பிற உள்ளடக்கங்கள் இருக்கலாம் (“உள்ளடக்கம்”). இதில் நீங்கள் அல்லது உங்கள் கணக்கின் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது சேவைகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கமும் (“உங்கள் உள்ளடக்கம்”) அடங்கும். உங்கள் உள்ளடக்கத்தின் முழுமை, உண்மைத்தன்மை, துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், மேலும் அவற்றுக்கு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நாங்கள் ஒப்புதல் அளிக்கவோ, ஆதரவளிக்கவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ மாட்டோம்.
சேவைகளுக்கு உங்கள் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், இந்த விதிமுறைகளுக்குள் அடங்கியுள்ள உரிமங்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும், அதிகாரமும் உங்களுக்கு உள்ளன என்பதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். உங்கள் உள்ளடக்கத்திற்கு நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பாவீர்கள் என்பதால், தேவையான அனைத்து உரிமைகளும் இல்லாமல் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவிட்டாலோ பகிர்ந்தாலோ, அது சட்டப்பூர்வப் பொறுப்புகளுக்கு உங்களை ஆளாக்கக்கூடும்.
உங்கள் உள்ளடக்கத்தில் உங்களுக்கு உள்ள எந்தவொரு உரிமைரிமையையும் நீங்கள் தக்கவைத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு Reddit-க்குப் பின்வரும் உரிமத்தை வழங்குகிறீர்கள்:
சேவைகளில் அல்லது சேவைகளின் மூலம் உங்கள் உள்ளடக்கம் உருவாக்கப்படும்போது அல்லது சமர்ப்பிக்கப்படும்போது, உங்கள் உள்ளடக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய எந்தவொரு பெயர், பயனர்பெயர், குரல் அல்லது தோற்றத்தைப் பயன்படுத்த, நகலெடுக்க, மாற்றியமைக்க, தழுவ, வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்க, விநியோகிக்க, சேமிக்க, நிகழ்த்த, காட்சிப்படுத்த, ஒளிபரப்ப, உலகளவில் பயன்படுத்தக் கூடிய, ராயல்டி இல்லாத, நிரந்தரமான, திரும்பப் பெற முடியாத, பிரத்தியேகமற்ற, மாற்றத்தக்க மற்றும் துணை உரிமம் வழங்கக்கூடிய உரிமத்தை நீங்கள் எங்களுக்கு வழங்குகிறீர்கள். இந்த உரிமமானது, Reddit-உடன் கூட்டுசேரும் பிற நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்கள் மூலம் உங்கள் உள்ளடக்கத்தை விநியோகிக்கவும், ஒளிபரப்பவும் மற்றும் வெளியிடவும் எங்களுக்குள்ள உரிமையையும் உள்ளடக்குகிறது. உதாரணமாக, எங்கள் பொது உள்ளடக்கக் கொள்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, AI மற்றும் மெஷின் லேர்னிங் மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையையும் இந்த உரிமம் உள்ளடக்கியுள்ளது. உங்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய மெட்டாடேட்டாவை நாங்கள் அகற்றக்கூடும் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் உங்கள் உள்ளடக்கம் தொடர்பான தார்மீக உரிமைகள் அல்லது பண்புக்கூறு கோரிக்கைகள் எதையும் நீங்கள் திரும்பப் பெற முடியாத வகையில் கைவிடுகிறீர்கள்.
Reddit அல்லது எங்கள் சேவைகள் குறித்து நீங்கள் எங்களுக்கு வழங்கும் யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் முற்றிலும் உங்கள் விருப்பத்தின் பேரில் அமைந்தவை. மேலும் அத்தகைய யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை உங்களுக்கு எந்தவித இழப்பீடோ கட்டாயமோ இல்லாமல் Reddit பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
உங்கள் உள்ளடக்கத்தைச் சரிபார்க்கவோ திருத்தவோ அல்லது கண்காணிக்கவோ எங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை என்றாலும், எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும், இந்த விதிமுறைகள், எங்கள் Reddit விதிகள் அல்லது எங்கள் பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது உட்பட, அல்லது எங்களுக்கு ஏதேனும் பொறுப்பை உருவாக்கக்கூடும் என்று கருதினால், உங்கள் உள்ளடக்கத்தை நீக்கலாம், வருமானம் ஈட்டுவதற்குத் தகுதியற்றதாக அறிவிக்கலாம் அல்லது அகற்றலாம்.
நாங்கள் எவ்வாறு Reddit விதிகளைச் செயல்படுத்துகிறோம் என்பது உட்பட உள்ளடக்க மாடரேஷன் அணுகுமுறை குறித்த கூடுதல் தகவல்களுக்கும், உள்ளடக்க மாடரேஷன் முடிவுகளை எவ்வாறு மேல்முறையீடு செய்வது என்பதை அறியவும் எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.
6. மூன்றாம் தரப்பு உள்ளடக்கம், விளம்பரங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல்கள்
சேவைகளில் விளம்பரதாரர்கள், எங்கள் துணை நிறுவனங்கள், பார்ட்னர்கள் அல்லது பிற பயனர்களால் வெளியிடப்படக்கூடிய மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான இணைப்புகள் இருக்கலாம் (“மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்”). மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் வலைத்தளங்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் சொந்த ஆபத்திலேயே அமையும். அத்தகைய மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் தொடர்வதற்கு முன், அவசியமென நீங்கள் கருதும் எந்தவொரு ஆய்வையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
சேவைகளில் மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் அல்லது விளம்பரங்கள் இடம்பெறலாம். விளம்பரங்களின் வகை, அளவு, அவை இலக்கு வைக்கப்படும் விதம் ஆகியவை மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலும் உங்கள் உள்ளடக்கம் உட்பட சேவைகளில் உள்ள எந்தவொரு உள்ளடக்கம் அல்லது தகவலைக் காட்டும்போதும் நாங்கள் விளம்பரங்களை வெளியிடலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
போட்டி அல்லது பரிசுக் குலுக்கல் உள்ளிட்ட ஒரு விளம்பரச் செயல்பாட்டை (“விளம்பரப்படுத்துதல்”) நடத்துவதற்கு நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், அந்த விளம்பரப்படுத்துதலை நிர்வகிக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு (உரிமங்கள், பதிவுகள், பிணைப்புப் பத்திரங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் போன்றவை) இணங்குதல், அதிகாரப்பூர்வ விதிகள், சலுகை விதிமுறைகள், தகுதித் தேவைகளை உருவாக்குதல் உட்பட பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கி அந்த விளம்பரப்படுத்துதலை நடத்துவதற்கு நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பாவீர்கள். உங்கள் விளம்பரப்படுத்துதலானது, Reddit மூலம் நிதியுதவி அளிக்கப்படவில்லை, அங்கீகரிக்கப்படவில்லை அல்லது அதனுடன் தொடர்புடையது அல்ல எனக் குறிப்பிட வேண்டும். மேலும் உங்கள் விளம்பரப்படுத்துதலின் விதிகள், அதில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்துதல் தொடர்பான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் Reddit-ஐ விடுவிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். உங்கள் விளம்பரப்படுத்துதலுக்கு நாங்கள் எந்த வகையிலும் உதவ மாட்டோம் என்பதையும், உங்கள் விளம்பரப்படுத்துதலை உங்கள் சொந்தப் பொறுப்பிலேயே நடத்துவதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
7. நீங்கள் செய்யக்கூடாதவை
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போதோ அணுகும்போதோ, நீங்கள் இந்த விதிமுறைகளையும், பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம் மற்றும் நடத்தை குறித்த எங்கள் விதிகளைக் கொண்டுள்ளதும், இந்தக் குறிப்பின் மூலம் இந்த விதிமுறைகளில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளதுமான Reddit விதிகளைப் படித்துப் பார்க்கவும். Reddit விதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளதைத் தவிர, நீங்கள் பின்வருவனவற்றில் எதையும் செய்யக்கூடாது:
- சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய, அவற்றை முடக்கக்கூடிய, சீர்குலைக்கக்கூடிய, அதிகச் சுமையேற்றக்கூடிய அல்லது பிற வழிகளில் பாதிக்கக்கூடிய எந்தவொரு முறையிலும் (பாட்கள் உட்பட தானியங்கு முறையிலோ பிற வழிகளிலோ) சேவைகளைப் பயன்படுத்துதல்;
- மற்றொரு பயனரின் கணக்கு அல்லது சேவைகளுடன் இணைக்கப்பட்ட அல்லது பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர் அமைப்புகள் அல்லது நெட்வொர்க்குகள் உட்பட சேவைகளின் பொதுப்பிரிவு அல்லாத பிற பகுதிகளை அணுகுதல் (அல்லது அணுக முயற்சித்தல்);
- சேவைகளின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உட்பட, சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்ட வைரஸ்கள், வார்ம்கள், தீங்கிழைக்கும் குறியீடுகள் அல்லது பிற மென்பொருட்களைச் சேவைகளில் அல்லது சேவைகளின் வழியாகப் பதிவேற்றுதல், அனுப்புதல் அல்லது விநியோகித்தல்;
- பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவதற்கோ எந்தவொரு நபர்/அமைப்பின் அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது பிற உடைமை உரிமைகளை மீறுவதற்கோ சேவைகளைப் பயன்படுத்துதல்;
- இந்த விதிமுறைகளில் அல்லது Reddit-உடனான ஒரு தனி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தவிர்த்து, வேறு எந்த வழியிலும் (தானியங்கு முறையிலோ பிற வழிகளிலோ) சேவைகளிலிருந்து தரவை அணுகுதல், தேடுதல் அல்லது சேகரித்தல் (எங்கள் robots.txt கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவைகளை கிரால் செய்ய நாங்கள் நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறோம். ஆனால் Reddit-இன் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றிச் சேவைகளை ஸ்கிராப் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது); அல்லது
- Reddit அல்லது ஏதேனும் ஒரு பேமெண்ட் முறைக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது மோசடி என்று நாங்கள் நியாயமாக நம்பக்கூடிய எந்தவொரு முறையிலும் சேவைகளைப் பயன்படுத்துதல்.
நாங்கள் உங்களை புகாரளிக்குமாறு ஊக்குவிக்கிறோம்; இந்த விதிமுறைகளையோ அல்லது எங்கள் Reddit விதிகளையோ மீறுவதாக நீங்கள் கருதும் உள்ளடக்கம் அல்லது நடத்தை குறித்துப் புகாரளிக்கலாம். பாதுகாப்புப் பாதிப்புகளைப் பொறுப்புடன் தெரிவிப்பதையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு பாதுகாப்புச் சிக்கலைப் புகாரளிக்க, security@reddit.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
8. மாடரேட்டர்கள்
ஒரு சப்ரெடிட்டை மாடரேட் செய்வது என்பது, சேவைகளின் பயனர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓர் அதிகாரப்பூர்வமற்ற, தன்னார்வப் பொறுப்பாகும். மாடரேட்டர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த விதிமுறைகளை மீறுவது உட்பட, எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது எந்தக் காரணமும் இன்றியும் ஒரு பயனரின் மாடரேட் செய்யும் திறனை ரத்துசெய்யவோ கட்டுப்படுத்தவோ எங்களுக்கு உரிமை உண்டு.
நீங்கள் ஒரு சப்ரெடிட்டை மாடரேட் செய்ய தேர்வுசெய்தால்:
- நீங்கள் மாடரேட்டர் நடத்தை விதிகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்கிறீர்கள்;
- நீங்கள் மாடரேட் செய்யும் ஒரு சப்ரெடிட் தொடர்பான புகார்களைப் பெறும்போது, கொள்கையை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுவது மற்றும்/அல்லது மதிப்பாய்வுக்காக உடனடியாக Reddit-இடம் கொண்டு செல்வது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்;
- Reddit-இன் சார்பாகச் செயல்பட உங்களுக்கு அதிகாரம் இல்லை, மேலும் அவ்வாறு செயல்பட அதிகாரம் உள்ளதாக நீங்கள் காட்டிக்கொள்ளவும் கூடாது;
- எங்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், Reddit சார்பாகவோ நீங்கள் மாடரேட் செய்யும் எந்தவொரு சப்ரெடிட் சார்பாகவோ மூன்றாம் தரப்பினருடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் நீங்கள் ஈடுபடக்கூடாது;
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து எந்தவிதமான இழப்பீடு, சன்மானம், பரிசு அல்லது சலுகைக்குப் பதிலாக நீங்கள் எந்தவொரு மாடரேஷன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது;
- ஒரு சப்ரெடிட்டை மாடரேட் செய்வதன் விளைவாக, பொதுவில் கிடைக்காத தகவல்களை அணுகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், அத்தகைய தகவல்களை ஒரு மாடரேட்டராக உங்கள் செயல்பாடு தொடர்பாக மட்டுமே பயன்படுத்துவீர்கள்; மற்றும்
- நீங்கள் மாடரேட் செய்யும் சப்ரெடிட்களுக்கு விதிகளை உருவாக்கி அவற்றை நீங்கள் செயல்படுத்தலாம். ஆனால் அவ்விதிகள் இந்த விதிமுறைகள், Reddit விதிகள் அல்லது மாடரேட்டர் நடத்தை விதிகளுடன் முரண்படாத வகையில் இருக்க வேண்டும்.
ஒரு மாடரேட்டரின் நடவடிக்கை அல்லது முடிவு Reddit அல்லது Reddit சமூகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்று Reddit தனது சொந்த விருப்பத்தின் பேரில் கருதினால், அந்தச் நடவடிக்கையையோ முடிவையோ ரத்துசெய்வதற்கான உரிமையை Reddit கொண்டுள்ளது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு அதற்கு எந்தக் கடமையும் இல்லை.
9. பதிப்புரிமை, வர்த்தக முத்திரை, DMCA மற்றும் அகற்றல்கள்
Reddit மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்கிறது, மேலும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் எனக் கேட்கிறது. சேவைகளிலிருந்து மீறல் உள்ளடக்கங்களை அகற்றுவது மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில், மீண்டும் மீண்டும் மீறலில் ஈடுபடும் பயனர்களின் கணக்குகளை நீக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். எங்கள் சேவைகளில் உள்ள ஏதேனும் ஒன்று, உங்களுக்குச் சொந்தமான அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரையை மீறுவதாக நீங்கள் கருதினால், எங்கள் பதிப்புரிமை அறிக்கைப் படிவம் அல்லது வர்த்தக முத்திரை அறிக்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலமாகவோ Reddit-இன் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ தெரிவிக்கலாம்:
Copyright Agent
Reddit, Inc.
303 2nd Street, Suite 500S
San Francisco, CA 94107
copyright@reddit.com
முறையான அறிவிப்பிற்கான தேவைகளுக்கு, 17 U.S.C. § 512(c)(3) பிரிவைப் பார்க்கவும். மேலும், எங்கள் சேவைகளில் உள்ள ஏதேனும் ஒரு செயல்பாடு அல்லது உள்ளடக்க உரிமை மீறலானது என நீங்கள் தெரிந்தே தவறாகக் குறிப்பிட்டால், குறிப்பிட்ட சில செலவுகள் மற்றும் சேதங்களுக்கு நீங்கள் Reddit-க்குப் பொறுப்பாக நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை அறிவிப்பின் காரணமாக உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றினால், அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிப்போம். பதிப்புரிமை அறிவிப்பில் ஏற்பட்ட தவறு அல்லது தவறான அடையாளங்காணல் காரணமாக உங்கள் உள்ளடக்கம் தவறுதலாக அகற்றப்பட்டதாக நீங்கள் நம்பினால், எங்கள் பதிப்புரிமை எதிர் அறிவிப்புப் படிவம் மூலமாகவோ எங்கள் பதிப்புரிமை ஏஜென்ட்டிற்கோ (தொடர்புத் தகவல் மேலே வழங்கப்பட்டுள்ளது) ஓர் எதிர் அறிவிப்பை அனுப்பலாம். முறையான எதிர்-அறிவிப்பிற்கான தேவைகளுக்கு, 17 U.S.C. § 512(g)(3) பிரிவைப் பார்க்கவும்.
10. கட்டணச் சேவைகள்
சேவைகளின் பல அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இருப்பினும், சில சேவைகள், அம்சங்கள் மற்றும் தயாரிப்புகள் விலைக்குக் கிடைக்கலாம் (“கட்டணச் சேவைகள்”). இந்த விதிமுறைகளுக்குக் கூடுதலாக, Reddit வணிக விதிமுறைகளும் கட்டணச் சேவைகளுக்குப் பொருந்தும். கட்டணச் சேவைகளை பர்ச்சேஸ் செய்வதன் மூலமாகவோ பயன்படுத்துவதன் மூலமாகவோ, நீங்கள் வணிக விதிமுறைகளையும், பொருந்தும் பட்சத்தில் முன்னோட்ட விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்வதாக மேலும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
11. அறிவுசார் சொத்து
இந்தச் சேவைகள் Reddit-க்குச் சொந்தமானவை மற்றும் அதனால் இயக்கப்படுகின்றன. Reddit வழங்கும் காட்சி இன்டர்ஃபேஸ்கள், கிராபிக்ஸ், வடிவமைப்பு, தொகுப்பு, தகவல், தரவு, கம்ப்யூட்டர் குறியீடு, தயாரிப்புகள், சேவைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் சேவைகளின் பிற அனைத்துக் கூறுகளும் (“உள்ளடக்கங்கள்”) அறிவுசார் சொத்துரிமை மற்றும் பிற சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கங்களும் Reddit அல்லது அதன் மூன்றாம் தரப்பு உரிமதாரர்களின் சொத்து ஆகும். உள்ளடக்கங்களைப் பதிவிறக்குவதன் மூலமாகவோ கட்டணச் சேவைகளைப் பர்ச்சேஸ் செய்வதன் மூலமாகவோ நீங்கள் எந்தவொரு உடைமை உரிமையையும் பெற மாட்டீர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit மூலம் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டாலோ மற்றும் Reddit-இன் பிராண்டு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டோ தவிர, நீங்கள் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறைகளில் வெளிப்படையாக வழங்கப்படாத உள்ளடக்கங்களுக்கான அனைத்து உரிமைகளையும் Reddit தன்வசம் கொண்டுள்ளது.
12. இழப்பீடு
சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அளவிற்குத் தவிர, Reddit, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், ஏஜென்ட்டுகள், ஒப்பந்ததாரர்கள், மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், உரிமமளிப்பவர்கள் (“Reddit நிறுவனங்கள்”) ஆகியோரை, எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமைக்கோரல் அல்லது கோரிக்கையிலிருந்தும், (அ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது; (ஆ) இந்த விதிமுறைகளை நீங்கள் மீறுவது; (இ) பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளை நீங்கள் மீறுவது; அல்லது (ஈ) உங்கள் உள்ளடக்கம் ஆகியவற்றால் எழுகின்ற அல்லது தொடர்புடைய எந்தவொரு பொறுப்பு, சேதம், இழப்பு மற்றும் செலவினங்களிலிருந்தும் (செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட) பாதுகாக்க, இழப்பீடு வழங்க மற்றும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய எந்தவொரு விஷயத்தின் பாதுகாப்பையும் கட்டுப்படுத்தும் உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம், மேலும் இந்தக் கோரிக்கைகளுக்கு எதிரான எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
13. பொறுப்புத் துறப்புகள் மற்றும் பொறுப்பு வரம்பு
இந்த விதிமுறைகளில் உள்ள எதுவும், சேவைகளின் பயனராக உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதிக்காது. சில நாடுகள், மாநிலங்கள், மாகாணங்கள் அல்லது பிற அதிகார வரம்புகள், இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளபடி சில உத்தரவாதங்களை விலக்குவதையோ பொறுப்பைக் கட்டுப்படுத்துவதையோ அனுமதிப்பதில்லை; எனவே கீழே உள்ள விதிமுறைகள் உங்களுக்கு முழுமையாகப் பொருந்தாமல் இருக்கலாம். மாறாக, அத்தகைய அதிகார வரம்புகளில், கீழே உள்ள விலக்குகள் மற்றும் வரம்புகள் அந்த அதிகார வரம்புகளின் சட்டங்களால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பொருந்தும்.
இந்தச் சேவைகள், வெளிப்படையான, மறைமுகமான, சட்டரீதியான அல்லது சட்டப்பூர்வமான எந்தவொரு பிரதிநிதித்துவங்கள், உத்தரவாதங்கள் அல்லது நிபந்தனைகள் இன்றி, "உள்ளவாறே" மற்றும் "கிடைக்கக்கூடிய வகையில்" வழங்கப்படுகின்றன. இதில் வணிகத்தன்மை, உரிமை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி மற்றும் மீறல் இன்மை ஆகியவற்றின் மறைமுகமான உத்தரவாதங்களும் அடங்கும். இந்தச் சேவைகள் துல்லியமானவை, முழுமையானவை, நம்பகமானவை, தற்போதையவை அல்லது பிழையற்றவை என்று Reddit நிறுவனங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்தச் சேவைகளில் கிடைக்கக்கூடிய அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும், அல்லது மாடரேட்டர்கள் உட்பட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் அல்லது பயனரின் செயல்களையும் Reddit கட்டுப்படுத்துவதோ அங்கீகரிப்பதோ அல்லது பொறுப்பேற்பதோ இல்லை. எங்கள் சேவைகளுக்கான உங்கள் அணுகலையும் பயன்பாட்டையும் பாதுகாப்பானதாக மாற்ற Reddit முயன்றாலும், எங்கள் சேவைகளோ சர்வர்களோ வைரஸ்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து விடுபட்டவை என்று நாங்கள் உறுதியளிக்கவோ உத்தரவாதமளிக்கவோ இல்லை.
இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பாக எழும் எந்தவொரு மறைமுகமான, விளைவான, முன்மாதிரியான, தற்செயலான, சிறப்பு அல்லது தண்டனைக்குரிய சேதங்கள் அல்லது லாப இழப்புகளுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் Reddit நிறுவனங்கள் உங்களுக்குப் பொறுப்பாகாது. சேவைகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கம் அவதூறானதாக, புண்படுத்தும் விதமாக அல்லது சட்டவிரோதமானதாகக் கூறப்படுவதால் எழும் சேதங்களும் இதில் அடங்கும். சேவைகளை அணுகுவதும் பயன்படுத்துவதும் உங்கள் சொந்த விருப்பத்திற்கும் ஆபத்திற்கும் உட்பட்டது. மேலும் உங்கள் சாதனம் அல்லது கம்ப்யூட்டர் அமைப்புக்கு ஏற்படும் சேதத்திற்கும் அல்லது அதன் விளைவாக ஏற்படும் தரவு இழப்பிற்கும் நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள். எந்தவொரு நிகழ்விலும், Reddit நிறுவனங்களின் மொத்தப் பொறுப்பானது, நூறு அமெரிக்க டாலர்கள் ($100) அல்லது உரிமைக்கோரலுக்கு வழிவகுக்கும் சேவைகளுக்காக முந்தைய ஆறு மாதங்களில் நீங்கள் Reddit-க்குச் செலுத்திய தொகை ஆகிய இரண்டில் எது அதிகமோ அதைவிட அதிகமாக இருக்காது. இந்தப் பிரிவின் வரம்புகள், உத்தரவாதம், ஒப்பந்தம், சட்டம், உரிமையியல் தீங்கு, கவனக்குறைவு, கடுமையான பொறுப்பு அல்லது வேறு எதன் அடிப்படையிலானவை உட்பட எந்தவொரு பொறுப்புக் கோட்பாட்டிற்கும் பொருந்தும். அத்தகைய சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து Reddit நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், மற்றும் இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தீர்வு அதன் அத்தியாவசிய நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கண்டறியப்பட்டாலும் கூட இது பொருந்தும்.
14. ஆளும் சட்டம் மற்றும் அதிகார வரம்பு
நீங்கள் Reddit-ஐ விரும்பிப் பயன்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஏதேனும் சிக்கல் அல்லது சர்ச்சை எழுந்தால், அதை எங்களிடம் முறைசாரா முறையில் தெரிவித்துத் தீர்க்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கருத்துகள் மற்றும் கவலைகளுடன் எங்களை நீங்கள் இங்கே தொடர்புகொள்ளலாம்.
பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு அளவிற்கு, இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பாக நீங்கள் கொண்டுவரும் எந்தவொரு கோரிக்கைகளும், சட்ட முரண்பாட்டு விதிகளைப் பொருட்படுத்தாமல், கலிபோர்னியா மாநிலத்தின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும்; இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பான அனைத்துச் சர்ச்சைகளும் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றங்களில் மட்டுமே கொண்டுவரப்படும், மேலும் Reddit மற்றும் நீங்களும் இந்த நீதிமன்றங்களின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.
நீங்கள் ஓர் அமெரிக்க நகரம், கவுண்டி அல்லது மாநில அரசாங்க அமைப்பாக இருந்தால், இந்தப் பிரிவு 14 உங்களுக்குப் பொருந்தாது. நீங்கள் ஓர் அமெரிக்க ஃபெடரல் அரசாங்க அமைப்பாக இருந்தால், இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பாக எழும் எந்தவொரு கோரிக்கைகளும், சட்ட முரண்பாட்டு விதிகளைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும். ஃபெடரல் சட்டத்தால் அனுமதிக்கப்படும் அளவிற்கு, பொருந்தக்கூடிய ஃபெடரல் சட்டம் இல்லாத பட்சத்தில் கலிபோர்னியா மாநிலத்தின் சட்டங்கள் (அதன் சட்ட முரண்பாட்டு விதிகளைத் தவிர்த்து) பொருந்தும். இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பான அனைத்துச் சர்ச்சைகளும் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றங்களில் மட்டுமே கொண்டுவரப்படும்.
15. இந்த விதிமுறைகளில் மாற்றங்கள்
நாங்கள் அவ்வப்போது இந்த விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்யலாம். நாங்கள் மாற்றங்களைச் செய்தால், திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டு, மேலே உள்ள அமலுக்கு வரும் தேதியைப் புதுப்பிப்போம். எங்கள் சொந்த விருப்பத்தின்படி, இந்த மாற்றங்கள் முக்கியமானவை என்று நாங்கள் கருதினால், உங்கள் கணக்குடன் தொடர்புடைய ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் அனுப்புவதன் மூலமாகவோ (சரிபார்க்கப்பட்ட ஈமெயில் முகவரியை வழங்க நீங்கள் தேர்வுசெய்திருந்தால்) அல்லது எங்கள் சேவைகள் வழியாக உங்களுக்கு அறிவிப்பை வழங்குவதன் மூலமாகவோ நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம். திருத்தப்பட்ட விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் தேதியன்றோ அதற்குப் பின்னரோ சேவைகளைத் தொடர்ந்து அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலம், திருத்தப்பட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், அம்மாற்றங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே எங்கள் சேவைகளை அணுகுவதையும் பயன்படுத்துவதையும் நீங்கள் நிறுத்த வேண்டும்.
16. கூடுதல் விதிமுறைகள்
நாங்கள் பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதால், Reddit வழங்கும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, கூடுதல் விதிமுறைகள், கொள்கைகள், வழிகாட்டுதல்கள் அல்லது விதிகளை (கூட்டாக, “கூடுதல் விதிமுறைகள்”) ஏற்குமாறு நீங்கள் கேட்கப்படலாம். அனைத்துக் கூடுதல் விதிமுறைகளும் இந்தக் குறிப்பின் மூலம் இந்த விதிமுறைகளில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏதேனும் கூடுதல் விதிமுறைகள் இந்த விதிமுறைகளுடன் முரண்படும் பட்சத்தில், தொடர்புடைய சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை கூடுதல் விதிமுறைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
- நீங்கள் ஏதேனும் கட்டணச் சேவைகளையோ டிஜிட்டல் பொருட்களையோ பயன்படுத்தினால், Reddit வணிக விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் முன்னோட்ட அம்சங்கள் எவற்றையேனும் பயன்படுத்தினால், Reddit முன்னோட்ட விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் சேவைகளில் விளம்பரம் செய்தால், Reddit விளம்பரத் தள விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- எங்கள் டெவலப்பர் சேவைகளில் (எங்கள் APIகள் உட்பட) ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் Reddit டெவலப்பர் விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு Reddit திட்டத்தில் நீங்கள் பங்கேற்றால் (எ.கா., ஏதேனும் வருவாய் ஈட்டும் திட்டத்திற்கான வருமானம் ஈட்டல் விதிமுறைகள்), அந்தக் கூடுதல் விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
17. முடிவுக்குக் கொண்டுவருதல்
உங்கள் கணக்கை நீக்குவதன் மூலமும் அனைத்துச் சேவைகளின் பயன்பாட்டையும் நிறுத்துவதன் மூலமும், நீங்கள் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் இந்த விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரலாம். உங்கள் கணக்கை நீக்காமல் சேவைகளைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தினால், நீண்ட காலச் செயலற்ற தன்மை காரணமாக உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.
பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு அளவிற்கு, இந்த விதிமுறைகள் அல்லது எங்கள் Reddit விதிகளை மீறுவது உட்பட, எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது எந்தக் காரணமும் இன்றியும் உங்கள் கணக்கு, மாடரேட்டர் நிலை அல்லது சேவைகளை அணுகும் அல்லது பயன்படுத்தும் உங்கள் திறனை நாங்கள் இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம்.
இந்த விதிமுறைகள் அல்லது உங்கள் கணக்கு முடிவுக்கு வந்த பின்னரும் பின்வரும் பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்: 5 (உங்கள் உள்ளடக்கம்), 7 (நீங்கள் செய்யக்கூடாதவை), 12 (இழப்பீடு), 13 (பொறுப்புத் துறப்புகள் மற்றும் பொறுப்பு வரம்பு), 14 (ஆளும் சட்டம் மற்றும் அதிகார வரம்பு), 17 (முடிவுக்குக் கொண்டுவருதல்) மற்றும் 18 (இதர விவரங்கள்).
18. இதர விவரங்கள்
இந்த விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை மற்றும் இந்த விதிமுறைகளில் குறிப்பாக மேற்கோள் மூலம் இணைக்கப்பட்டுள்ள பிற அனைத்து ஒப்பந்தங்களுடனும் இணைந்து, சேவைகளை நீங்கள் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் எங்களுக்குமான முழுமையான ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன. இந்த விதிமுறைகளின் எந்தவொரு உரிமையையோ விதியையோ நாங்கள் செயல்படுத்தவோ அமல்படுத்தவோ தவறினால், அது அந்த உரிமை அல்லது விதியைத் துறப்பதாகக் கருதப்படாது. இந்த விதிமுறைகளின் ஏதேனும் ஒரு பகுதி செல்லாதது அல்லது செயல்படுத்த முடியாதது எனக் கருதப்பட்டால், செயல்படுத்த முடியாத அப்பகுதி முடிந்தவரை அதிகபட்ச அளவிற்குச் செயல்படுத்தப்படும். மேலும் மீதமுள்ள பகுதிகள் முழுமையாகத் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். எங்கள் அனுமதியின்றி இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் உரிமைகள் அல்லது கடமைகள் எவற்றையும் நீங்கள் ஒதுக்கவோ வேறு ஒருவருக்கு மாற்றவோ முடியாது. இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள எங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் எவற்றையும் நாங்கள் சுதந்திரமாக ஒதுக்கலாம்.
இந்த விதிமுறைகளில் தலைப்புகள் குறிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவற்றை விளக்கும்போது அவை கருத்தில் கொள்ளப்படாது. இந்த விதிமுறைகளின் நோக்கங்களுக்காக: (அ) "உள்ளடக்கு," "உள்ளடக்குகிறது," மற்றும் "உள்ளடக்கிய" ஆகிய சொற்களைத் தொடர்ந்து "வரம்பில்லாமல்" என்ற சொற்கள் வருவதாகக் கருதப்படும்; (ஆ) "போன்ற," "உதாரணமாக," "எ.கா.," மற்றும் அந்தச் சொற்களின் வழித்தோன்றல்கள் எடுத்துக்காட்டாகப் பொருள்படும், மேலும் இந்தச் சொற்களைத் தொடர்ந்து வருபவை ஒரு முழுமையான பட்டியலாகக் கருதப்படாது மற்றும் (இ) "அல்லது" என்ற சொல் "மற்றும்/அல்லது" என்பதன் உள்ளடக்கிய பொருளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் "அல்லது," "ஏதேனும்," "இரண்டும்" ஆகிய சொற்கள் பிரத்தியேகமானவை அல்ல. ஒரு தரப்பினர் மொழியை வரைவு செய்தார் என்ற கூற்றின் அடிப்படையில் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக எந்தவொரு தெளிவின்மையும் பொருள் கொள்ளப்படாது.இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Reddit, Inc.-க்கும் இடையேயான ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும். இந்த விதிமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
Reddit, Inc.
303 2nd Street, Suite 500S
San Francisco, CA 94107
United States
நீங்கள் EEA, ஐக்கிய இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிப்பவராக இருந்தால், Reddit பயனர் ஒப்பந்தம்
வணக்கம், ரெடிட்டர்களே மற்றும் இணைய மக்களே! இந்த Reddit பயனர் ஒப்பந்தம் (“விதிமுறைகள்”) வலைத்தளங்கள், மொபைல் ஆப்ஸ், விட்ஜெட்டுகள், APIகள், ஈமெயில்கள் மற்றும் பிற ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை (கூட்டாக, “சேவைகள்”) நீங்கள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தும். நீங்கள் யுனைடட் கிங்டமில் வசித்தால், Reddit, Inc., 548 Market Street, #16093, San Francisco, CA 94104 USA-உடன் ஒப்பந்தம் செய்கிறீர்கள். நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) அல்லது சுவிட்சர்லாந்தில் வசித்தால், Reddit Netherlands B.V., Looiersgracht 43, 1016 VR Amsterdam, Netherlands-உடன் ஒப்பந்தம் செய்கிறீர்கள். "Reddit", "நாங்கள்", "எங்களை" அல்லது "எங்கள்" என்ற அனைத்துக் குறிப்புகளும் உங்கள் வசிப்பிடத்தின் அடிப்படையில் பொருந்தக்கூடிய நிறுவனத்தைக் குறிக்கும்.
Reddit என்பது மகிழ்ச்சிக்காக உருவான ஒரு தளம் மற்றும் உங்கள் பொழுதுபோக்கிற்காகவே அமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இருப்பினும் நமக்கு சில அடிப்படை விதிகள் தேவைப்படுகின்றன. சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும், அவை: (அ) நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கும்போது உங்களிடம் முன்வைக்கப்படும் மற்றும் (ஆ) நீங்கள் சேவைகளை அணுகும் போதெல்லாம் எப்போதும் கிடைக்கப்பெறும். நீங்கள் அவற்றை ஏற்கவில்லை என்றால், எங்கள் சேவைகளை நீங்கள் அணுகவோ பயன்படுத்தவோ கூடாது.
1. சேவைகளுக்கான உங்கள் அணுகல்
13 வயதுக்குட்பட்ட எவரும் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தவோ அணுகவோ அனுமதி இல்லை. எங்கள் சேவைகளின் சில பகுதிகளைப் பயன்படுத்த நீங்கள் கூடுதல் வயதுடையவராக இருக்க வேண்டும். உதாரணமாக, Reddit-இல் வயதுவந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்க்க உங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். நீங்கள் சேவைகளை அணுகும்போது, அனைத்து அறிவிப்புகளையும் கூடுதல் விதிமுறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் கவனமாகப் படியுங்கள்.
இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகிறீர்கள்:
- சேவைகளை அணுகவும் பயன்படுத்தவும் உங்களுக்குக் குறைந்தபட்சம் 13 வயது நிரம்பியிருக்க வேண்டும், மேலும் நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களின்படி தேவையான குறைந்தபட்ச வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்;
- நீங்கள் Reddit-உடன் சட்டப்படி கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தகுதியானவர் அல்லது நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவராகவும் ஆனால் உங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட சட்டப்பூர்வ வயதை எட்டாதவராகவும் இருந்தால், உங்கள் சட்டப்பூர்வப் பாதுகாவலர் இந்த விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து அவற்றுக்கு ஒப்புக்கொண்டுள்ளார்;
- பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டத்தின் கீழும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை; மற்றும்
- நீங்கள் இந்தச் சேவைகளிலிருந்து நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கவோ நீக்கப்பட்டிருக்கவோ இல்லை.
ஒரு பிசினஸ் அல்லது அரசு நிறுவனம் உட்பட மற்றொரு சட்டப்பூர்வ அமைப்பின் சார்பாக நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அந்த அமைப்பை இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்துவதற்கான முழு சட்டப்பூர்வ அதிகாரமும் உங்களுக்கு உள்ளது என்பதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.
2. தனியுரிமை
Reddit-இன் தனியுரிமைக் கொள்கையானது, நீங்கள் எங்கள் சேவைகளை அணுகும்போதோ பயன்படுத்தும்போதோ உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு, ஏன் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பதை விளக்குகிறது. சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி இந்தத் தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.
3. சேவைகளுக்கான உங்கள் பயன்பாடு
இந்த விதிமுறைகளை நீங்கள் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் இணங்குவதற்கு உட்பட்டு, Reddit உங்களுக்கு பின்வருவனவற்றிற்கான தனிப்பட்ட, மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற, திரும்பப் பெறக்கூடிய, வரையறுக்கப்பட்ட உரிமத்தை வழங்குகிறது: (அ) உங்களுக்குச் சொந்தமான அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் சாதனத்தில் முறையான மார்க்கெட்பிளேஸிலிருந்து பெறப்பட்ட எங்கள் சேவைகளுடன் தொடர்புடைய மொபைல் ஆப்ஸின் ஒரு நகலை நிறுவிப் பயன்படுத்துவது; மற்றும் (ஆ) சேவைகளை அணுகிப் பயன்படுத்துவது. இந்த விதிமுறைகளால் உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளையும் நாங்கள் தக்கவைத்துக்கொள்கிறோம்.
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் இத்தகைய கட்டுப்பாடு அனுமதிக்கப்படாத பட்சத்திலும், அந்த அளவிற்கு மட்டுமே தவிர, எங்கள் எழுத்துப்பூர்வ உடன்பாடு இல்லாமல் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது:
- சேவைகள் அல்லது உள்ளடக்கத்திற்கு உரிமம் வழங்குதல், விற்பனை செய்தல், மாற்றுதல், ஒப்படைத்தல், விநியோகித்தல், ஹோஸ்ட் செய்தல் அல்லது பிற வழிகளில் பிசினஸ் ரீதியாகப் பயன்படுத்துதல்;
- சேவைகள் அல்லது உள்ளடக்கத்தின் எந்தவொரு பகுதியையும் மாற்றியமைத்தல், அவற்றின் அடிப்படையில் புதியவற்றை உருவாக்குதல், பிரித்தல், டீகம்பைல் செய்தல் அல்லது ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்தல்; அல்லது
- கூடுதல் விதிமுறைகளின் கீழ் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) அனுமதிக்கப்பட்டதைத் தவிர, இதற்கு இணையான அல்லது போட்டியான ஒரு வலைத்தளம், தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்குவதற்காக இந்தச் சேவைகளையோ உள்ளடக்கத்தையோ அணுகுதல்.
சேவைகள் எப்போதும் கிடைக்கும் அல்லது தடையின்றி இருக்கும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. நாங்கள் எப்போதும் எங்கள் சேவைகளை மேம்படுத்தி வருகிறோம். இதன் பொருள், நாங்கள் அம்சங்கள், தயாரிப்புகள் அல்லது செயல்பாடுகளைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க முயற்சிப்போம், ஆனால் அது எப்போதும் சாத்தியமாகாது. உங்களுக்கு அறிவிப்புடனோ அறிவிப்பு இன்றியோ, எந்த நேரத்திலும் சேவைகளை (முழுமையாகவோ பகுதியாகவோ) மாற்றியமைக்க, இடைநிறுத்த அல்லது நிறுத்த எங்களுக்கு உரிமை உண்டு. சேவைகளின் செயல்பாட்டிற்கான எந்தவொரு எதிர்கால வெளியீடு, புதுப்பிப்பு அல்லது பிற சேர்த்தல்களும் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். மேலும் இவை அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம். சேவைகளில் அல்லது அதன் எந்தவொரு பகுதியிலும் செய்யப்படும் எந்தவொரு மாற்றம், இடைநிறுத்தம் அல்லது நிறுத்தத்திற்காகவும் நாங்கள் உங்களுக்கோ வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கோ பொறுப்பாக மாட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தப் பத்தியில் உள்ள எதுவும், பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் உங்களுக்கு இருக்கக்கூடிய எந்தவொரு சட்டப்பூர்வ உரிமைகளையும் பாதிக்காது.
சேவைகளில் உங்கள் செயல்பாடு, நீங்கள் சந்தா செலுத்தியுள்ள சமூகங்கள் மற்றும் உங்கள் அமைப்புகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விருப்பத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சேவைகளில் உங்கள் அனுபவத்தை நாங்கள் தனிப்பயனாக்குகிறோம். இந்த மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில், Reddit-இல் உங்கள் அனுபவத்தை மேலும் பொருத்தமானதாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை நாங்கள் வழங்கலாம். உங்கள் உள்ளடக்கப் பரிந்துரைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும், சில தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதற்கான விளக்கத்திற்கும், எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.
4. உங்கள் Reddit கணக்கு மற்றும் கணக்குப் பாதுகாப்பு
எங்கள் சேவைகளின் சில அம்சங்களைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு Reddit கணக்கை (ஒரு “கணக்கு”) உருவாக்கி, தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு பயனர் பெயர், பாஸ்வேர்டு மற்றும் உங்களைப் பற்றிய சில பிற தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டியிருக்கலாம்.
உங்கள் கணக்குடன் தொடர்புடைய தகவல்களுக்கும், உங்கள் கணக்கு தொடர்பாக நடக்கும் எதற்கும் நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள். உங்கள் கணக்கின் பாதுகாப்பை நீங்கள் பராமரிக்க வேண்டும், மேலும் உங்கள் அனுமதியின்றி யாராவது உங்கள் கணக்கை அணுகியிருப்பதை நீங்கள் கண்டறிந்தாலோ சந்தேகித்தாலோ உடனடியாக Reddit-க்குத் தெரிவிக்க வேண்டும். உங்கள் கணக்கிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வலுவான பாஸ்வேர்டைப் பயன்படுத்துமாறும் இரு காரணி அங்கீகாரத்தை இயக்குமாறும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் கணக்கில் உங்கள் மொபைல் எண்ணைச் சேர்த்து, பின்னர் உங்கள் மொபைல் எண்ணை மாற்றினாலோ முடக்கினாலோ, உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும்.
எங்களின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி உங்கள் கணக்கிற்கு உரிமம் வழங்கவோ விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது.
5. உங்கள் உள்ளடக்கம்
இந்தச் சேவைகள் தகவல்கள், உரை, இணைப்புகள், கிராபிக்ஸ், படங்கள், வீடியோக்கள், ஆடியோ, ஸ்ட்ரீம்கள், மென்பொருள், கருவிகள் அல்லது பிற உள்ளடக்கங்களைக் (உள்ளடக்கம்) கொண்டிருக்கலாம். இதில் உங்களால் அல்லது உங்கள் கணக்கின் மூலம் சேவைகளுக்கு உருவாக்கப்பட்ட அல்லது சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கம் (உங்கள் உள்ளடக்கம்) அடங்கும். உங்கள் உள்ளடக்கத்தின் முழுமை, உண்மைத்தன்மை, துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்பதில்லை. மேலும் அவற்றை நாங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ அல்லது உத்தரவாதமளிக்கவோ இல்லை.
உங்கள் உள்ளடக்கத்தைச் சேவைகளுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம், இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து உரிமைகள், அதிகாரம் மற்றும் தகுதி உங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். உங்கள் உள்ளடக்கத்திற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள் என்பதால், தேவையான அனைத்து உரிமைகளும் இல்லாமல் உள்ளடக்கத்தை நீங்கள் சமர்ப்பித்தால் அல்லது பகிர்ந்தால் சட்டப் பொறுப்புகளுக்கு ஆளாக நேரிடலாம்.
உங்கள் உள்ளடக்கத்தில் உங்களுக்கு உள்ள உடைமை உரிமைகளை நீங்கள் தக்கவைத்துக்கொள்கிறீர்கள், ஆனால் அந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்த Reddit-க்கு நீங்கள் பின்வரும் உரிமத்தை வழங்குகிறீர்கள்:
உங்கள் உள்ளடக்கம் சேவைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும்போது அல்லது சேவைகளுக்குச் சமர்ப்பிக்கப்படும்போது, உலகளவில் செல்லுபடியாகக்கூடிய, ராயல்டி இல்லாத, நிரந்தரமான, திரும்பப் பெற முடியாத, பிரத்தியேகமற்ற, மாற்றத்தக்க மற்றும் துணை உரிமம் வழங்கக்கூடிய உரிமத்தை எங்களுக்கு வழங்குகிறீர்கள். இதன் மூலம் உங்கள் உள்ளடக்கத்தையும், உங்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு பெயர், பயனர்பெயர், குரல் அல்லது தோற்றத்தையும் தற்போது அறியப்பட்ட அல்லது எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அனைத்து மீடியா வடிவங்கள் மற்றும் வழிகளிலும், உலகில் எங்கும் பயன்படுத்த, நகலெடுக்க, மாற்றியமைக்க, தழுவ, வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்க, விநியோகிக்க, சேமிக்க, நிகழ்த்த, காட்சிப்படுத்த, ஒளிபரப்ப, மறுபகிர்வு செய்ய அல்லது வெளியிட எங்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமமானது, Reddit-உடன் கூட்டுசேரும் பிற நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்கள் உங்கள் உள்ளடக்கத்தைச் சேவைகளுக்கு வெளியே விநியோகிக்க, ஒளிபரப்ப அல்லது வெளியிடுவதற்கு கிடைக்கச் செய்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. மேலும் இந்த உரிமம், எங்கள் பொது உள்ளடக்கக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, AI மற்றும் மெஷின் லேர்னிங் மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க, உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, உங்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய மெட்டாடேட்டாவை நாங்கள் அகற்றலாம் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் உங்கள் உள்ளடக்கம் தொடர்பான தார்மீக உரிமைகள் அல்லது பண்புக்கூறு குறித்த எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் திரும்பப் பெற முடியாத வகையில் விட்டுக்கொடுக்கிறீர்கள்.
Reddit அல்லது எங்கள் சேவைகள் குறித்து நீங்கள் எங்களுக்கு வழங்கும் யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் முற்றிலும் தன்னார்வமானவை. மேலும் அத்தகைய யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை உங்களுக்கு எந்தவொரு இழப்பீடோ கட்டுப்பாடோ இன்றி Reddit பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
உங்கள் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய, திரையிட, திருத்த அல்லது கண்காணிக்க எங்களுக்கு உரிமை இருந்தாலும், சேவைகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் நாங்கள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்வதில்லை. இருப்பினும், இந்த விதிமுறைகள், எங்கள் Reddit விதிகள் அல்லது எங்கள் பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது உட்பட, எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் நீக்கலாம், பணமாக்குதலுக்குத் தகுதியற்றதாகக் கருதலாம் அல்லது அகற்றலாம் அல்லது நீங்கள் எங்களுக்குப் பொறுப்பை உருவாக்கும் வகையில் செயல்பட்டாலோ உருவாக்க வாய்ப்பிருந்தாலோ அவ்வாறு செய்யலாம்.
உள்ளடக்க மாடரேஷன் குறித்த Reddit-இன் அணுகுமுறை பற்றிய கூடுதல் தகவல்களுக்கும், எங்கள் Reddit விதிகளை நாங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறோம் மற்றும் உள்ளடக்க மாடரேஷன் முடிவுகளை எவ்வாறு மேல்முறையீடு செய்வது என்பதை அறிந்துகொள்ளவும், எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.
6. மூன்றாம் தரப்பு உள்ளடக்கம், விளம்பரங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல்கள்
சேவைகளில் விளம்பரதாரர்கள், எங்கள் துணை நிறுவனங்கள், எங்கள் பார்ட்னர்கள் அல்லது பிற பயனர்களால் வெளியிடப்படக்கூடிய மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான இணைப்புகள் (மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்) இடம்பெறலாம். மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் வலைத்தளங்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது உங்கள் சொந்த விருப்பத்திற்கும் பொறுப்பிற்கும் உட்பட்டது. மேலும் அத்தகைய மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் தொடர்வதற்கு முன், அவசியமென நீங்கள் கருதும் எந்தவொரு விசாரணையையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
சேவைகளில் ஸ்பான்சர் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் அல்லது விளம்பரங்களும் இடம்பெறலாம். விளம்பரங்களின் வகை, அளவு மற்றும் அவை இலக்கு வைக்கப்படும் விதம் ஆகியவை மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலும் உங்கள் உள்ளடக்கம் உட்பட சேவைகளில் உள்ள எந்தவொரு உள்ளடக்கம் அல்லது தகவல்களைக் காட்டும்போதும் நாங்கள் விளம்பரங்களை வெளியிடலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
போட்டி அல்லது பரிசுக் குலுக்கல் உள்ளிட்ட ஒரு விளம்பரப்படுத்துதலை (ஓர் “விளம்பரப்படுத்துதல்”) நடத்துவதற்காக நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கி அந்த விளம்பரப்படுத்துதலை நடத்துவதற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்; அதிகாரப்பூர்வ விதிகளை உருவாக்குதல், சலுகை விதிமுறைகள், தகுதித்தேவைகள் மற்றும் அந்த ஊக்குவிப்பை நிர்வகிக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குதல் (உரிமங்கள், பதிவுகள், பிணைப்புப் பத்திரங்கள், ஒழுங்குமுறை ஒப்புதல் போன்றவை) ஆகியவை இதில் அடங்கும். உங்கள் விளம்பரப்படுத்துதல் Reddit மூலம் நிதியுதவி செய்யப்படவில்லை, அங்கீகரிக்கப்படவில்லை அல்லது அதனுடன் தொடர்புடையது அல்ல என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் உங்கள் விளம்பரப்படுத்துதலுக்கான விதிகள், பங்கேற்கும் அல்லது கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் அந்த விளம்பரப்படுத்துதல் தொடர்பான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் Reddit-ஐ விடுவிக்க வேண்டும் எனக் கேட்க வேண்டும். உங்கள் விளம்பரப்படுத்துதலுக்கு நாங்கள் எந்த வகையிலும் உதவ மாட்டோம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் உங்கள் விளம்பரப்படுத்துதலை உங்கள் சொந்த விருப்பத்திற்கும் பொறுப்பிற்கும் உட்பட்டு நடத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
7. நீங்கள் செய்யக்கூடாதவை
Reddit-ஐப் பயன்படுத்தும்போதோ அணுகும்போதோ, நீங்கள் இந்த விதிமுறைகளையும் பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம் மற்றும் நடத்தை குறித்த எங்கள் விதிகளைக் கொண்டுள்ளதும், இந்தக் குறிப்பின் மூலம் இந்த விதிமுறைகளின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளதுமான Reddit விதிகளைத் மதிப்பாய்வு செய்யவும். Reddit விதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளவை தவிர, பின்வருவனவற்றில் எதையும் நீங்கள் செய்யக்கூடாது:
- சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய, அவற்றை முடக்கக்கூடிய, சீர்குலைக்கக்கூடிய, அதிகச் சுமையேற்றக்கூடிய அல்லது பிற வழிகளில் பாதிக்கக்கூடிய எந்தவொரு முறையிலும் (பாட்கள் உட்பட தானியங்கு முறையிலோ பிற வழிகளிலோ) சேவைகளைப் பயன்படுத்துதல்;
- மற்றொரு பயனரின் கணக்கு அல்லது சேவைகளுடன் இணைக்கப்பட்ட அல்லது பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர் அமைப்புகள் அல்லது நெட்வொர்க்குகள் உட்பட சேவைகளின் பொதுப்பிரிவு அல்லாத பிற பகுதிகளை அணுகுதல் (அல்லது அணுக முயற்சித்தல்);
- சேவைகளின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உட்பட, சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்ட வைரஸ்கள், வார்ம்கள், தீங்கிழைக்கும் குறியீடுகள் அல்லது பிற மென்பொருட்களைச் சேவைகளில் அல்லது சேவைகளின் வழியாகப் பதிவேற்றுதல், அனுப்புதல் அல்லது விநியோகித்தல்;
- பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவதற்கோ எந்தவொரு நபர்/அமைப்பின் அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது பிற உடைமை உரிமைகளை மீறுவதற்கோ சேவைகளைப் பயன்படுத்துதல்;
- இந்த விதிமுறைகளில் அல்லது Reddit-உடனான ஒரு தனி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தவிர்த்து, வேறு எந்த வழியிலும் (தானியங்கு முறையிலோ பிற வழிகளிலோ) சேவைகளிலிருந்து தரவை அணுகுதல், தேடுதல் அல்லது சேகரித்தல் (எங்கள் robots.txt கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவைகளை கிரால் செய்ய நாங்கள் நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறோம். ஆனால் Reddit-இன் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றிச் சேவைகளை ஸ்கிராப் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது); அல்லது
- Reddit அல்லது ஏதேனும் ஒரு பேமெண்ட் முறைக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது மோசடி என்று நாங்கள் நியாயமாக நம்பக்கூடிய எந்தவொரு முறையிலும் சேவைகளைப் பயன்படுத்துதல்.
நாங்கள் உங்களை புகாரளிக்குமாறு ஊக்குவிக்கிறோம்; இந்த விதிமுறைகளையோ அல்லது எங்கள் Reddit விதிகளையோ மீறுவதாக நீங்கள் கருதும் உள்ளடக்கம் அல்லது நடத்தை குறித்துப் புகாரளிக்கலாம். பாதுகாப்புப் பாதிப்புகளைப் பொறுப்புடன் தெரிவிப்பதையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு பாதுகாப்புச் சிக்கலைப் புகாரளிக்க, security@reddit.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
8. மாடரேட்டர்கள்
ஒரு சப்ரெடிட்டை மாடரேட் செய்வது என்பது, சேவைகளின் பயனர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓர் அதிகாரப்பூர்வமற்ற, தன்னார்வப் பொறுப்பாகும். மாடரேட்டர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த விதிமுறைகளை மீறுவது உட்பட, எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது எந்தக் காரணமும் இன்றியும் ஒரு பயனரின் மாடரேட் செய்யும் திறனை ரத்துசெய்யவோ கட்டுப்படுத்தவோ எங்களுக்கு உரிமை உண்டு.
நீங்கள் ஒரு சப்ரெடிட்டை மாடரேட் செய்ய தேர்வுசெய்தால்:
- நீங்கள் மாடரேட்டர் நடத்தை விதிகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்கிறீர்கள்;
- நீங்கள் மாடரேட் செய்யும் ஒரு சப்ரெடிட் தொடர்பான புகார்களைப் பெறும்போது, கொள்கையை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுவது மற்றும்/அல்லது மதிப்பாய்வுக்காக உடனடியாக Reddit-இடம் கொண்டு செல்வது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்;
- Reddit-இன் சார்பாகச் செயல்பட உங்களுக்கு அதிகாரம் இல்லை, மேலும் அவ்வாறு செயல்பட அதிகாரம் உள்ளதாக நீங்கள் காட்டிக்கொள்ளவும் கூடாது;
- எங்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், Reddit சார்பாகவோ நீங்கள் மாடரேட் செய்யும் எந்தவொரு சப்ரெடிட் சார்பாகவோ மூன்றாம் தரப்பினருடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் நீங்கள் ஈடுபடக்கூடாது;
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து எந்தவிதமான இழப்பீடு, சன்மானம், பரிசு அல்லது சலுகைக்குப் பதிலாக நீங்கள் எந்தவொரு மாடரேஷன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது;
- ஒரு சப்ரெடிட்டை மாடரேட் செய்வதன் விளைவாக, பொதுவில் கிடைக்காத தகவல்களை அணுகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், அத்தகைய தகவல்களை ஒரு மாடரேட்டராக உங்கள் செயல்பாடு தொடர்பாக மட்டுமே பயன்படுத்துவீர்கள்; மற்றும்
- நீங்கள் மாடரேட் செய்யும் சப்ரெடிட்களுக்கு விதிகளை உருவாக்கி அவற்றை நீங்கள் செயல்படுத்தலாம். ஆனால் அவ்விதிகள் இந்த விதிமுறைகள், Reddit விதிகள் அல்லது மாடரேட்டர் நடத்தை விதிகளுடன் முரண்படாத வகையில் இருக்க வேண்டும்.
ஒரு மாடரேட்டரின் நடவடிக்கை அல்லது முடிவு Reddit அல்லது Reddit சமூகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்று Reddit தனது சொந்த விருப்பத்தின் பேரில் கருதினால், அந்தச் நடவடிக்கையையோ முடிவையோ ரத்துசெய்வதற்கான உரிமையை Reddit கொண்டுள்ளது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு அதற்கு எந்தக் கடமையும் இல்லை.
9. பதிப்புரிமை, வர்த்தக முத்திரை, DMCA மற்றும் அகற்றல்கள்
Reddit மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமையை மதிக்கிறது, மேலும் எங்கள் சேவைகளின் பயனர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் எனக் கேட்கிறது. மீறும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் சேவைகளிலிருந்து அகற்றுவதையும், பொருத்தமான சூழ்நிலைகளில், மீண்டும் மீண்டும் மீறலில் ஈடுபடும் எங்கள் சேவைகளின் பயனர்களின் கணக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதையும் உள்ளடக்கிய ஒரு கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். எங்கள் சேவைகளில் உள்ள ஏதேனும் ஒன்று, உங்களுக்குச் சொந்தமான அல்லது நீங்கள் கட்டுப்படுத்தும் பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரையை மீறுவதாக நீங்கள் நம்பினால், எங்கள் பதிப்புரிமை அறிக்கைப் படிவம் அல்லது வர்த்தக முத்திரை அறிக்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலமாகவோ பின்வரும் முகவரியில் தொடர்புகொள்வதன் மூலமாகவோ Reddit-இன் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டுக்கு நீங்கள் தெரிவிக்கலாம்:
Copyright Agent
Reddit, Inc.
548 Market Street, #16093
San Francisco, CA 94104
copyright@reddit.com
முறையான அறிவிப்பிற்கான தேவைகளுக்கு 17 U.S.C. § 512(c)(3) பிரிவைப் பார்க்கவும். மேலும், எங்கள் சேவைகளில் உள்ள ஏதேனும் செயல்பாடு அல்லது உள்ளடக்கம் மீறுகிறது என்று நீங்கள் தெரிந்தே தவறாகக் கூறினால், Reddit-க்கு ஏற்படும் சில செலவுகள் மற்றும் சேதங்களுக்கு நீங்கள் பொறுப்பாக நேரிடலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை அறிவிப்பிற்கு இணங்க உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றினால், அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிப்போம். பதிப்புரிமை அறிவிப்பில் ஏற்பட்ட தவறு அல்லது தவறான அடையாளம் காரணமாக உங்கள் உள்ளடக்கம் தவறாக அகற்றப்பட்டது என்று நீங்கள் நம்பினால், எங்கள் பதிப்புரிமை எதிர் அறிவிப்புப் படிவம் மூலமாகவோ எங்கள் பதிப்புரிமை ஏஜென்ட்டுக்கோ (தொடர்புத் தகவல்கள் மேலே வழங்கப்பட்டுள்ளது) நீங்கள் ஓர் எதிர் அறிவிப்பை அனுப்பலாம். ஒரு முறையான எதிர் அறிவிப்பிற்கான தேவைகளுக்கு 17 U.S.C. § 512(g)(3) பிரிவைப் பார்க்கவும்.
10. கட்டணச் சேவைகள்
சேவைகளின் பல அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இருப்பினும், சில சேவைகள், அம்சங்கள் மற்றும் தயாரிப்புகளைப் பணம் கொடுத்து பர்ச்சேஸ் செய்ய வேண்டியிருக்கலாம் (கட்டணச் சேவைகள்). இந்த விதிமுறைகளுடன் கூடுதலாக, Reddit வணிக விதிமுறைகளும் கட்டணச் சேவைகளுக்குப் பொருந்தும். கட்டணச் சேவைகளை பர்ச்சேஸ் செய்வதன் மூலமோ பயன்படுத்துவதன் மூலமோ, நீங்கள் மேலும் வணிக விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பட்சத்தில், முன்னோட்ட விதிமுறைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
11. அறிவுசார் சொத்து
இந்தச் சேவைகள் Reddit-க்குச் சொந்தமானவை மற்றும் அதனால் இயக்கப்படுகின்றன. Reddit வழங்கும் காட்சி இன்டர்ஃபேஸ்கள், கிராபிக்ஸ், வடிவமைப்பு, தொகுப்பு, தகவல், தரவு, கம்ப்யூட்டர் குறியீடு, தயாரிப்புகள், சேவைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் சேவைகளின் பிற அனைத்துக் கூறுகளும் (“உள்ளடக்கங்கள்”) அறிவுசார் சொத்துரிமை மற்றும் பிற சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கங்களும் Reddit அல்லது அதன் மூன்றாம் தரப்பு உரிமதாரர்களின் சொத்து ஆகும். உள்ளடக்கங்களைப் பதிவிறக்குவதன் மூலமாகவோ கட்டணச் சேவைகளைப் பர்ச்சேஸ் செய்வதன் மூலமாகவோ நீங்கள் எந்தவொரு உடைமை உரிமையையும் பெற மாட்டீர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit மூலம் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டாலோ மற்றும் Reddit-இன் பிராண்டு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டோ தவிர, நீங்கள் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறைகளில் வெளிப்படையாக வழங்கப்படாத உள்ளடக்கங்களுக்கான அனைத்து உரிமைகளையும் Reddit தன்வசம் கொண்டுள்ளது.
12. இழப்பீடு
சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அல்லது நியாயமற்றதாகக் கருதப்படும் அளவிற்குத் தவிர, Reddit, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், பார்ட்னர்கள், ஏஜென்ட்டுகள், ஒப்பந்ததாரர்கள், மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள், உரிமமளிப்பவர்கள் (Reddit நிறுவனங்கள்) ஆகியோரை, எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமைகோரல் அல்லது கோரிக்கையிலிருந்தும், (அ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது; (ஆ) இந்த விதிமுறைகளை நீங்கள் மீறுவது; (இ) பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை நீங்கள் மீறுவது; அல்லது (ஈ) உங்கள் உள்ளடக்கம் ஆகியவற்றால் எழுகின்ற அல்லது தொடர்புடைய எந்தவொரு பொறுப்பு, சேதம், இழப்பு மற்றும் செலவினங்களிலிருந்தும் (செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட) பாதுகாக்க, இழப்பீடு வழங்க மற்றும் பொறுப்பிலிருந்து விடுவிக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய எந்தவொரு விஷயத்தின் பாதுகாப்பையும் கட்டுப்படுத்தும் உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். மேலும் இந்தக் கோரிக்கைகளுக்கு எதிரான எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
13. பொறுப்பு வரம்பு
சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், Reddit நிறுவனங்களின் பொறுப்பானது நீங்கள் வசிக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு மட்டுமே வரம்பிற்குட்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த வகை ஒப்பந்தங்களுக்குப் பொதுவான, முக்கிய ஒப்பந்தக் கடமைகளை மீறுவதால் எழும், முன்கூட்டியே கணிக்கக்கூடிய சேதங்களுக்கு மட்டுமே பொறுப்பு வரம்பிடப்படும். பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் கவனிப்புக் கடமையை மீறுவதாலோ முக்கியமற்ற மீறலாலோ ஏற்படும் சேதங்களுக்கு Reddit பொறுப்பேற்காது. கட்டுப்படுத்த முடியாத எந்தவொரு சட்டப்பூர்வப் பொறுப்பிற்கும், எங்கள் அலட்சியம் அல்லது வேண்டுமென்றே செய்யும் தவறான நடத்தையால் ஏற்படும் மரணம் அல்லது தனிப்பட்ட காயத்திற்கான பொறுப்பிற்கும் அல்லது உங்களுக்கு நாங்கள் குறிப்பாக வாக்குறுதியளித்த ஒன்றை எங்கள் பொறுப்பிலிருந்து விலக்குவதற்கும் இந்தப் பொறுப்பு வரம்பு பொருந்தாது.
14. இந்த விதிமுறைகளில் மாற்றங்கள்
நாங்கள் அவ்வப்போது இந்த விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்யலாம். நாங்கள் மாற்றங்களைச் செய்தால், திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டு, மேலே உள்ள அமலுக்கு வரும் தேதியைப் புதுப்பிப்போம். எங்கள் நியாயமான விருப்பத்தின்படி, மாற்றங்கள் முக்கியமானவையாக இருந்தால், அவை நடைமுறைக்கு வரும் தேதிக்குக் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பாக, உங்கள் கணக்குடன் தொடர்புடைய முகவரிக்கு (சரிபார்க்கப்பட்ட ஈமெயில் முகவரியை நீங்கள் வழங்கத் தேர்ந்தெடுத்திருந்தால்) ஓர் ஈமெயில் அனுப்புவதன் மூலமாகவோ எங்கள் சேவைகள் வழியாக உங்களுக்கு அறிவிப்பை வழங்குவதன் மூலமாகவோ நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். திருத்தப்பட்ட விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் தேதியன்றோ அதற்குப் பின்னரோ சேவைகளைத் தொடர்ந்து அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலம், திருத்தப்பட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், அம்மாற்றங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே எங்கள் சேவைகளை அணுகுவதையும் பயன்படுத்துவதையும் நீங்கள் நிறுத்த வேண்டும்.
15. கூடுதல் விதிமுறைகள்
நாங்கள் பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதால், Reddit வழங்கும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, கூடுதல் விதிமுறைகள், கொள்கைகள், வழிகாட்டுதல்கள் அல்லது விதிகளை (கூட்டாக, “கூடுதல் விதிமுறைகள்”) ஏற்குமாறு நீங்கள் கேட்கப்படலாம். அனைத்துக் கூடுதல் விதிமுறைகளும் இந்தக் குறிப்பின் மூலம் இந்த விதிமுறைகளில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏதேனும் கூடுதல் விதிமுறைகள் இந்த விதிமுறைகளுடன் முரண்படும் பட்சத்தில், தொடர்புடைய சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை கூடுதல் விதிமுறைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
- நீங்கள் ஏதேனும் கட்டணச் சேவைகளையோ டிஜிட்டல் பொருட்களையோ பயன்படுத்தினால், Reddit வணிக விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் முன்னோட்ட அம்சங்கள் எவற்றையேனும் பயன்படுத்தினால், Reddit முன்னோட்ட விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் சேவைகளில் விளம்பரம் செய்தால், Reddit விளம்பரத் தள விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- எங்கள் டெவலப்பர் சேவைகளில் (எங்கள் APIகள் உட்பட) ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் Reddit டெவலப்பர் விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு Reddit திட்டத்தில் நீங்கள் பங்கேற்றால் (எ.கா., ஏதேனும் வருவாய் ஈட்டும் திட்டத்திற்கான வருமானம் ஈட்டல் விதிமுறைகள்), அந்தக் கூடுதல் விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
16. முடிவுக்குக் கொண்டுவருதல்
உங்கள் கணக்கை நீக்குவதன் மூலமும், அனைத்துச் சேவைகளின் பயன்பாட்டையும் நிறுத்துவதன் மூலமும், நீங்கள் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் இந்த விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம். உங்கள் கணக்கை நீக்காமல் நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், நீண்டகாலச் செயலற்ற தன்மையின் காரணமாக உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.
பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு, இந்த விதிமுறைகள் அல்லது எங்கள் Reddit விதிகளை மீறுவது உட்பட, எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும், எந்த நேரத்திலும் உங்கள் கணக்கு, மாடரேட்டர் நிலை அல்லது சேவைகளை அணுகும் அல்லது பயன்படுத்தும் திறனை நாங்கள் இடைநிறுத்தலாம் அல்லது முடிவுக்குக் கொண்டுவரலாம்.
இந்த விதிமுறைகள் அல்லது உங்கள் கணக்கு முடிவுக்கு வந்தாலும், பின்வரும் பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்: 5 (உங்கள் உள்ளடக்கம்), 7 (நீங்கள் செய்யக்கூடாதவை), 12 (இழப்பீடு), 13 (பொறுப்பு வரம்பு), 16 (முடிவுக்குக் கொண்டுவருதல்), மற்றும் 17 (இதர விவரங்கள்).
17. இதர விவரங்கள்
இந்த விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை மற்றும் இந்த விதிமுறைகளில் குறிப்பாகக் குறிப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பிற ஒப்பந்தங்களுடன் இணைந்து, சேவைகளை நீங்கள் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் எங்களுக்குமான முழுமையான ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன. இந்த விதிமுறைகளின் எந்தவொரு உரிமையையோ விதியையோ நாங்கள் செயல்படுத்தவோ நிலைநாட்டவோ தவறினால், அது அந்த உரிமை அல்லது விதியை விட்டுக்கொடுப்பதாகக் கருதப்படாது. இந்த விதிமுறைகளின் ஏதேனும் ஒரு பகுதி செல்லாதது அல்லது செயல்படுத்த முடியாதது எனக் கருதப்பட்டால், செயல்படுத்த முடியாத அந்தப் பகுதி முடிந்தவரை அதிகபட்ச அளவிற்குச் செயல்படுத்தப்படும், மேலும் மீதமுள்ள பகுதிகள் முழுச் செல்லுபடியாகும் தன்மையுடன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். Reddit-இன் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள எந்தவொரு உரிமைகளையோ கடமைகளையோ நீங்கள் மற்றவருக்கு ஒதுக்கவோ மாற்றவோ கூடாது. Reddit, தனது சொந்த விருப்பத்தின் பேரில், 30 நாட்கள் முன் அறிவிப்புடன், இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள எங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை எந்தவொரு கட்டுப்பாடுகளுமின்றி பிறருக்கு ஒப்படைக்கலாம். பிரிவு 16-இன் படி எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உங்கள் உரிமை இதனால் பாதிக்கப்படாது.
இந்த விதிமுறைகளில் தலைப்புகள் பார்வைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த விதிமுறைகளுக்குப் பொருள் விளக்கம் அளிக்கும்போது அவை கருத்தில் கொள்ளப்படாது. இந்த விதிமுறைகளின் நோக்கங்களுக்காக: (அ) “உள்ளடக்கு,” “உள்ளடக்குகிறது,” மற்றும் “உள்ளடக்கிய” ஆகிய சொற்களைத் தொடர்ந்து “வரம்பில்லாமல்” என்ற சொற்கள் இடம்பெறுவதாகக் கருதப்படும்; (ஆ) “போன்ற,” “உதாரணமாக,” “எ.கா.,” மற்றும் அந்தச் சொற்களின் வழித்தோன்றல்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுகளாக மட்டுமே பொருள்படும், மேலும் அந்தச் சொற்களைத் தொடர்ந்து வரும் விவரங்கள் ஒரு முழுமையான பட்டியலாகக் கருதப்படாது; மற்றும் (இ) “அல்லது” என்ற சொல் “மற்றும்/அல்லது” என்ற உள்ளடக்கிய பொருளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் “அல்லது,” “ஏதேனும்,” மற்றும் “இரண்டும்” ஆகிய சொற்கள் பிரத்தியேகமானவை அல்ல. ஒரு தரப்பினர் மொழியை வரைவு செய்தார் என்ற கூற்றின் அடிப்படையில் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக எந்தவொரு தெளிவின்மையும் பொருள் கொள்ளப்படாது.
இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Reddit Netherlands B.V.-க்கும் இடையேயான சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும். இந்த விதிமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
Reddit Netherlands B.V.
Looiersgracht 43, 1016 VR Amsterdam
Netherlands
KVK எண்: 83433880
டச்சு VAT பதிவு எண்: NL862872662B01
Reddit, Inc.
548 Market Street, #16093,
San Francisco, CA 94104
USA
UK VAT பதிவு எண்: 431 7546 01