பல மொழிகளில் விற்பனை செய்வதற்கான தேவைகள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் ஸ்டோரில் மொழிகளைச் சேர்ப்பதற்கு முன்பு, பல மொழிகளில் விற்பனை செய்வதற்கான தேவைகள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை குறித்துப் படிக்கவும். எவையெல்லாம் ஆதரிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது, நீங்கள் எந்த உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்பதையும், உங்களின் ஸ்டோருடைய ஒவ்வொரு மொழிப் பதிப்பையும் வாடிக்கையாளர்களும் தேடுபொறிகளும் எப்படிக் கண்டறிகின்றனர் என்பதையும் திட்டமிட உதவும்.
இந்தப் பக்கத்தில்
பல மொழிகளில் விற்பனை செய்வதற்கான தேவைகள்
பல மொழிகளில் விற்பனை செய்வதற்கு, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் மொழிகளின் எண்ணிக்கையை உங்கள் ஸ்டோரின் திட்டம் ஆதரிக்கிறது. Basic, Grow, Shopify அல்லது Advanced திட்டத்தில் நீங்கள் 20 மொழிகள் வரை விற்பனை செய்யலாம். ஒரு Shopify Plus சோதனை உட்பட, Shopify Plus திட்டத்தில் நீங்கள் 30 மொழிகள் வரை விற்பனை செய்யலாம்.
- நீங்கள் பயன்படுத்தும் தற்போதைய தீம் பல மொழிகளில் விற்பனை செய்வதை ஆதரிக்க வேண்டும். Shopify வழங்கும் இலவசத் தீம்கள் அனைத்தும் இதை ஆதரிக்கக்கூடியவை. பல மொழிகளில் விற்பனை செய்வதற்குப் பொருந்தும் வகையில், நீங்கள் உங்கள் தீமைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் மூன்றாம் தரப்புத் தீமைப் பயன்படுத்தினால், அது இணக்கமாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் தீம் டெவலப்பர்களைத் தொடர்புகொள்ளலாம். தனிப்பயன் தீம்கள், உள் இணைப்புகளுக்கு
routesLiquid ஆப்ஜெக்டைப் பயன்படுத்த வேண்டும், எடுத்துக்காட்டாக/cartஎன்பதற்குப் பதிலாக ``. - நீங்கள் பயன்படுத்தும் தற்போதைய தீமில் மொழித் தேர்வி இருக்க வேண்டும். பெரும்பாலான Shopify தீம்களில் மொழித் தேர்வி இருக்கும், அதை உங்கள் தீம் அமைப்புகளில் ஆக்டிவேட் செய்யலாம். உங்கள் தீமில் நாடு அல்லது மொழித் தேர்வி இல்லை எனில், நீங்கள் ஒரு மூன்றாம் தரப்புப் புவிஇருப்பிடச் செயலியைப் பயன்படுத்தி ஒன்றைச் சேர்க்கலாம்.
- மொழிக்கான குறிப்பிட்ட URL-களுக்கு, உங்கள் ஸ்டோர்
example.com/deபோன்ற துணை கோப்புறைகளை அல்லதுde.example.comபோன்ற துணை டொமைன்களைப் பயன்படுத்த வேண்டும். - உங்கள் ஸ்டோரில் Shopify-இன் Translate & Adapt செயலி அல்லது இணக்கமான மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மாற்றாக, Shopify-யில் நேரடியாக உங்கள் மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்ய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
பல மொழிகளில் விற்பனை செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை
பல மொழிகளில் விற்பனை செய்வதற்கு முன்பு பின்வரும் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும்.
மொழிபெயர்க்க முடியாத உள்ளடக்கம்
பின்வரும் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க முடியாது அல்லது அவற்றை மொழிபெயர்ப்பதில் வரம்புகள் உள்ளன:
- தயாரிப்பு டேக்குகள், கட்டுரை டேக்குகள், வலைப்பதிவு டேக்குகள் போன்ற டேக்குகளை மொழிபெயர்க்க முடியாது.
- தயாரிப்புகளில் உள்ள SEO-க்கான மெட்டா தலைப்பு மற்றும் மெட்டா விளக்கப் புலங்கள் இயல்புநிலை அமைப்புகளைப் பயன்படுத்தினால், இந்தப் புலங்களுக்கான மொழிபெயர்ப்புகள் கிடைக்காது. இயல்புநிலை அமைப்புகள், தயாரிப்புத் தலைப்பு மற்றும் விளக்கத்திலிருந்து உள்ளடக்கத்தைப் பெறுவதுடன், வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரை வேறொரு மொழியில் பார்க்கும்போது மொழிபெயர்க்கப்பட்ட தயாரிப்புத் தலைப்பையும் விளக்கத்தையும் தானாகவே பயன்படுத்தும். இந்தப் புலங்களை நீங்கள் தனிப்பயனாக்கியிருந்தால், Translate & Adapt செயலி அல்லது இணக்கமான மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி அவற்றை மொழிபெயர்க்கலாம்.
/en-ca/products/shoesபோன்ற URL ஸ்லக்குகளை/es-mx/products/zapatosஎன மொழிபெயர்க்கலாம், ஆனால்productsஎன்ற வார்த்தையை மொழிபெயர்க்க முடியாது.- சந்தைகளுக்கேற்ப URL ஸ்லக்குகளைத் தனிப்பயனாக்க முடியாது. ஒரு மொழி காட்சிப்படுத்தப்படும் அனைத்துச் சந்தைகளிலுமுள்ள URL ஸ்லக்குகளுக்கு மட்டுமே மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க முடியும்.
தீம்கள் மற்றும் செக்அவுட்
உங்கள் தீம் மற்றும் செக்அவுட்டிற்கு பின்வரும் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும்:
- Horizon குடும்பத்தில் உள்ள தீம்களின் சமீபத்திய பதிப்புகள் அரபு, ஹீப்ரு, உருது போன்ற வலமிருந்து இடமாக எழுதும் மொழிகளை ஆதரிக்கின்றன. நீங்கள் வேறொரு தீமைப் பயன்படுத்தினால், தளவமைப்பு சரியாக இருப்பதற்காக அது வலமிருந்து இடமாக எழுதும் மொழிகளை ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- செக்அவுட்டில் 49 மொழிகளுக்கான மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் உள்ளது. செக்அவுட்டின் மொழியில் கூடுதல் தனிப்பயனாக்கங்களைச் செய்ய, மூன்றாம் தரப்புச் செயலிகள் தேவை.
- ஒரு மொழியைச் சேர்ப்பது, ஆதரிக்கப்படும் தீம்களுக்கும் செக்அவுட்டுகளுக்கும் ஆதரிக்கப்படும் மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளை மட்டுமே சேர்க்கும். பிற ஸ்டோர் உள்ளடக்கத்திற்கு மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க, மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்யவும் அல்லது ஒரு செயலியைப் பயன்படுத்தவும்.
மொழிபெயர்ப்புச் செயலிகள்
மொழிபெயர்ப்புச் செயலிகளுக்கான பின்வரும் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும்:
- பல மொழிகளில் விற்பனை செய்வது இணக்கமான மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலிகளை மட்டுமே ஆதரிக்கும்.
- சில மூன்றாம் தரப்புச் செயலிகள் இயல்புநிலையாகப் பல மொழிகளில் விற்பனை செய்வதை ஆதரிப்பதில்லை. ஒரு செயலி பல மொழிகளை ஆதரிக்கிறதா என்பதைச் சரிபார்க்க, செயலியின் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்.
மொழிகளைச் சேர்த்தல் மற்றும் வெளியிடுதல்
ஒரு மொழியைச் சேர்ப்பதற்கு அல்லது வெளியிடுவதற்கு முன்பு பின்வரும் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் ஸ்டோரில் மொழிகளைச் சேர்க்கும்போது நீங்கள் மொழிபெயர்ப்புகளை வழங்க வேண்டும். புதிய மொழியைச் சேர்ப்பதற்கு முன், உங்களிடம் மொழிபெயர்ப்புகள் தயாராக இருப்பதையோ, அல்லது மொழிபெயர்ப்புச் செயலியை நிறுவி ஒரு மொழியை டொமைனுக்கு ஒதுக்கியிருப்பதையோ உறுதிப்படுத்திக்கொள்ளவும். Shopify-யில் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை இறக்குமதி செய்ய, நீங்கள் Translate & Adapt செயலியைப் பயன்படுத்தலாம். உங்கள் ஸ்டோருக்கான ஒரு மொழிபெயர்ப்புச் செயலியைக் கண்டறிய, நீங்கள் Shopify App Store-ஐயும் பார்வையிடலாம்.
- மொழிபெயர்ப்புகளைச் சேர்க்காமல் உங்கள் ஸ்டோருக்கு ஒரு மொழியை வெளியிட்டால், மொழிபெயர்ப்புகளைச் சேர்க்கும்படி கேட்கும் மெசேஜைப் பெறுவீர்கள். உங்களுடைய சொந்த மொழிபெயர்ப்புகளைச் சேர்க்காமல் நீங்கள் வெளியிடும் மொழியானது, தீம் மற்றும் செக்அவுட்டிற்கான இயல்புநிலை மொழிபெயர்ப்புகளை மட்டுமே காட்டும்.
- குறிப்பிட்ட சந்தைகளுக்கான மொழிகளை நிர்வகிக்க, நீங்கள் சர்வதேச டொமைன்களை அமைத்திருக்க வேண்டும். சர்வதேச டொமைன்களை நீங்கள் அமைத்திருக்கவில்லை எனில், உங்கள் செயலில் உள்ள அனைத்துச் சந்தைகளுக்கும் உங்களின் மொழி அமைப்புகள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
- உங்கள் ஸ்டோரின் தரவை நகலெடுக்காமல் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் மாறும் வகையில் வழங்கப்படுவதால், மொழிகளைச் சேர்ப்பது உங்கள் ஸ்டோரின் செயல்திறனைப் பாதிக்காது.
தீம்கள் மற்றும் செக்அவுட்டிற்கான மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைக்கும் மொழிகள்
Shopify உருவாக்கிய தீம்களுக்கான செக்அவுட் மற்றும் இயல்புநிலை உள்ளடக்கத்திற்கு, பின்வரும் மொழிகளில் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன:
- அரபு
- பாஸ்க்
- வங்காளம்
- பல்கேரியன்
- கேட்டலான்
- சீனம் (எளியது)
- சீனம் (மரபுவழி)
- குரோஷியன்
- செக்
- டேனிஷ்
- டச்சு
- ஆங்கிலம்
- எஸ்டோனியன்
- ஃபின்னிஷ்
- பிரெஞ்சு
- காலிசியன்
- ஜார்ஜியன்
- ஜெர்மன்
- கிரேக்கம்
- குஜராத்தி
- ஹீப்ரு
- இந்தி
- ஹங்கேரியன்
- இந்தோனேசியன்
- இத்தாலியன்
- ஜப்பானிய மொழி
- கொரியன்
- லாட்வியன்
- லிதுவேனியன்
- மலாய்
- மராத்தி
- நார்வேஜியன் (புக்மால்)
- போலிஷ்
- போர்த்துகீசியம் (பிரேசில்)
- போர்த்துகீசியம் (போர்ச்சுகல்)
- ரோமானியன்
- ரஷ்யன்
- செர்பியன்
- ஸ்லோவாக்
- ஸ்லோவேனியன்
- ஸ்பானிஷ்
- ஸ்வீடிஷ்
- தமிழ்
- தெலுங்கு
- தாய்
- துருக்கியம்
- உக்ரேனியன்
- உருது
- வியட்நாமிய மொழி
டெவலப்பர்களுக்கான மொழிபெயர்க்கக்கூடிய வளங்கள்
நீங்கள் ஒரு டெவலப்பர் அல்லது Shopify பார்ட்னராக இருந்தால், Shopify இன் பல மொழிகளில் விற்பதற்கான பிளாட்ஃபார்ம் திறன்களைப் பயன்படுத்தி தீம்கள் மற்றும் செயலிகளுக்கான பல மொழி அனுபவங்களை உருவாக்கலாம். நீங்கள் மொழிபெயர்க்கக்கூடிய வளங்களின் வகைகளுக்கு, TranslatableResourceType குறிப்பு ஆவணத்தைப் பார்க்கவும்.